Pages

2030 ல் தமிழகம்


இது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர்?????


2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம், அதன் காரணமாக வளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்து வன்முறை வெறியாட்டம், தற்க்கொலைப் படைத்தாக்குதல்

2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்து. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள், அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம்.


தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistke) கருத்து தெரிவித்துள்ளனர்.

3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்.

உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல் காந்தி மிரட்டியதால், உண்ணாவிரதம் வாபஸ்.

மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால், தமிழகத்தில் இரண்டு நாள் போர் நிறுத்தம். இதை மறைத்து, என்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின், அழகிரி தனித்தனி அறிக்கை.

4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்போர். வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும், தெற்கு தமிழக துணை முதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல். ஒட்டுமொத்த தி.மு.க வின் தலைவராக அடுத்து தானே ஆக வேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.

5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்பு. மணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட் குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.

6. அஜீத் இனி எனக்கு தேவையில்லை, கௌதம் கடுப்பு பேட்டி. அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்த அவரது நிறைவேறா ஆசையில், தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர். இதற்க்கு பதில் அளித்த அஜித், அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன், நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணிட்டார், யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார்.

7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.

இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாக நடிக்கிறார்.

8. குஷ்புவின் மகள் தி.மு.க வில் இணைந்தார். தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரை கட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம். இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்) முப்பது வருடங்களாக பார்த்து வரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவிப்பு.

10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்பு. தி.மு.க வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து, ஓரங்கட்டி, ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கை.

இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.

11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.

12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணி, லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் பேட்டி.

13. எத்தனை முறைதான் சென்னைக்கும், மதுரைக்கும் அலைவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி.ஐ விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.

7G ஏலம் வெளிப்படையாகவே நடந்தது, எந்த விதமான முறைகேடோ, ஊழலோ நடக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர். ராகுல் காந்திக்கும் தெரியும், மத்திய அமைச்சர் ராசா அறிக்கை.

15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வது சதமடித்து உலக சாதனை.


உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டி. காமன் வெல்த் போட்டிகள் போல இதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.

சொல்ல முடியாது, மேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம், நடக்கும்.

-----------------------------------------------------------

இப்போ இது எனக்கு மெயில்ல வந்ததுன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா யார் அந்த பதிவர்-ன்னு தான் தெரியலை. உங்களுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லுங்க.

இதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)

எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.