Pages

2030 ல் தமிழகம்


இது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர்?????


2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம், அதன் காரணமாக வளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்து வன்முறை வெறியாட்டம், தற்க்கொலைப் படைத்தாக்குதல்

2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்து. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள், அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம்.


தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistke) கருத்து தெரிவித்துள்ளனர்.

3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்.

உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல் காந்தி மிரட்டியதால், உண்ணாவிரதம் வாபஸ்.

மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால், தமிழகத்தில் இரண்டு நாள் போர் நிறுத்தம். இதை மறைத்து, என்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின், அழகிரி தனித்தனி அறிக்கை.

4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்போர். வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும், தெற்கு தமிழக துணை முதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல். ஒட்டுமொத்த தி.மு.க வின் தலைவராக அடுத்து தானே ஆக வேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.

5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்பு. மணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட் குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.

6. அஜீத் இனி எனக்கு தேவையில்லை, கௌதம் கடுப்பு பேட்டி. அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்த அவரது நிறைவேறா ஆசையில், தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர். இதற்க்கு பதில் அளித்த அஜித், அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன், நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணிட்டார், யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார்.

7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.

இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாக நடிக்கிறார்.

8. குஷ்புவின் மகள் தி.மு.க வில் இணைந்தார். தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரை கட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம். இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்) முப்பது வருடங்களாக பார்த்து வரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவிப்பு.

10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்பு. தி.மு.க வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து, ஓரங்கட்டி, ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கை.

இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.

11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.

12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணி, லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் பேட்டி.

13. எத்தனை முறைதான் சென்னைக்கும், மதுரைக்கும் அலைவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி.ஐ விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.

7G ஏலம் வெளிப்படையாகவே நடந்தது, எந்த விதமான முறைகேடோ, ஊழலோ நடக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர். ராகுல் காந்திக்கும் தெரியும், மத்திய அமைச்சர் ராசா அறிக்கை.

15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வது சதமடித்து உலக சாதனை.


உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டி. காமன் வெல்த் போட்டிகள் போல இதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.

சொல்ல முடியாது, மேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம், நடக்கும்.

-----------------------------------------------------------

இப்போ இது எனக்கு மெயில்ல வந்ததுன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா யார் அந்த பதிவர்-ன்னு தான் தெரியலை. உங்களுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லுங்க.

இதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)

எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.
36 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி அதுக்குள்ளே நீ Phantom car வாங்கிடுவியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குடை எங்க மச்சி பேங்க் லாக்கர் ல இருக்கா?

Chitra said...

இதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)

எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.


......உங்க நேர்மை பிடிச்சு இருக்குது! ha,ha,ha...

vaarththai said...

//...ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது ...//

மெய்யாலுமே ரெண்டு மூணு தானா...???!!!!

Phantom Mohan said...

vaarththai said...
//...ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது ...//

மெய்யாலுமே ரெண்டு மூணு தானா...???!!!!
//////////////////////////////

முதல் பத்து பாயிண்ட்-ல கொஞ்சம் மானே, தேனே போட்டேன்.

11-ல் இருந்து என்னுடைய கற்பனை (ஆஆஆ...த்த்தூதூதூ)

அடுத்து 2030-ல் இந்தியா”ன்னு ஒரு பதிவு எழுத ஐடியா இருக்கு :)

Phantom Mohan said...

......உங்க நேர்மை பிடிச்சு இருக்குது! ha,ha,ha...
////////////////////

சித்ரா மேடம், உங்களுடைய ”ha,ha,ha" சிரிப்பையும் இந்தப் பதிவில் சேர்க்கணும், 2030-ல் மட்டும் இல்ல 2100-லயும் நீங்க இப்படித்தான் கமெண்ட் போடுவீங்க :)

Phantom Mohan said...

யோவ் போலீஸ், 2030-ல என் பேரு "BOEING MOHAN"

அப்போ நான் போயிங் வாங்க ட்ரை பண்ணுவேன்.

Phantom Mohan said...

பதிவெழுதின புண்ணியவான் யாருய்யா யோவ்???

சீக்கிரமா வந்து வாழ்த்த வாங்கிட்டுப் போ, இல்ல மவனே நான் தான் எழுதினேன்னு உண்மைய சொல்லிடுவேன்.

Anonymous said...

உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

இருக்கிறதுலேயே இதுதான் சூப்பர் ஜோக்

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

Phantom Mohan said...

குவைத் தமிழன் said...
உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

இருக்கிறதுலேயே இதுதான் சூப்பர் ஜோக்
///////////////////////////

இது நானா தான் சும்மா எழுதினேன். சச்சின் மிகச்சிறந்த வீரர், அவரால் 2030-லும் விளையாட முடியும், விளையாடனும்.

Chitra said...

.....உங்க நேர்மை பிடிச்சு இருக்குது! ha,ha,ha...
////////////////////

சித்ரா மேடம், உங்களுடைய ”ha,ha,ha" சிரிப்பையும் இந்தப் பதிவில் சேர்க்கணும், 2030-ல் மட்டும் இல்ல 2100-லயும் நீங்க இப்படித்தான் கமெண்ட் போடுவீங்க :)


........ஹா,ஹா,ஹா,ஹா,..... அப்படி போடும் போது, மானே தேனேனு சேர்க்காம ஆஹா...தெய்வீக சிரிப்புனு சேர்த்துக்கோங்க. அம்சமா இருக்கும்... ஹா,ஹா,ஹா....

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல் ராசா....அதுல 3,7,11 சான்ஸே இல்லை. நல்ல கற்பனை....யாருய்யா அந்த பதிவர்....:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை. ///


ங்கொய்யாலே, ங்கொய்யாலே...நெஞ்ச டச் பண்ணிட்டமா? கண்ணு கலங்குது, எங்க மேலே எம்பூட்டு பாசம் இருந்தா, இத்தாப் பெரிய உக்காந்து மேட்டர டைப் பண்ணியிருப்ப? ங்கொக்காமக்கா, இதுக்காகவே குத்துரேன்யா ரெண்டு ஓட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம்.///

அய்யோ அய்யோ!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.///

அல்டிமேட்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.///

முடியல...!

எஸ்.கே said...

அருமையா இருக்குங்க! எழுதினவருக்கும் உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த பதிவரு யாரு? யோவ் சிரிப்புபோலீசு, சும்மா சும்மா மாமுல வாங்காம போயி அது யாருன்னு கண்டுபுடிய்யா, அப்போத்தான் இனி மாமுல்!

Phantom Mohan said...

ங்கொய்யாலே, ங்கொய்யாலே...நெஞ்ச டச் பண்ணிட்டமா? கண்ணு கலங்குது, எங்க மேலே எம்பூட்டு பாசம் இருந்தா, இத்தாப் பெரிய உக்காந்து மேட்டர டைப் பண்ணியிருப்ப? ங்கொக்காமக்கா, இதுக்காகவே குத்துரேன்யா ரெண்டு ஓட்டு!
////////////////////////////////

யோவ் பன்னி, ரொம்ப நாள் கழிச்சு ஆபிஸ்-ல உக்காந்து கஷ்டப்பட்டு டைப் பண்ணேன்யா....

முதல் 10 பாயிண்ட் அவரோடது, அடுத்து உள்ளதெல்லாம் நம்ம கைவண்ணம்...அவரோடதிலையும் கொஞ்சம் நம்ம் கைவண்ணத்த காட்டிருக்கேன்...

ஏன் இவ்வளவும் சொல்றேன்னா எனக்கு தற்புகழ்ச்சி புடிக்காது.என்னை யாராவது புகழ்ந்து பேசினா எனக்கு கோவம் வந்திரும், அப்புறம் கோவத்தில அவங்களுக்கு சரக்கு பார்ட்டி வச்சிருவேன்.

ஆனா இன்னைக்கு வரைக்கும் எனக்கு கோபமும் வரலை, சரக்கு பார்ட்டி வைக்க வாய்ப்பும் வரலை.

பட்டாபட்டி.. said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ரு...ஆமா..அப்பவாவது ரஜினியின் கொள்ளுபேத்தியோட... காதுகுத்துக்கு, ரசிகனுக வரலாமா?..

மனசாட்சியே நண்பன் said...

வன்மையாக கண்டிக்கிறேன் , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம தளபதிய பத்தி இருக்கு - அவர் அப்போ ராகுல் பையோனோட கட்சியில இணைய முயத்சித்து கொண்டு இருப்பார்.

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

பாலா said...

தலைவா இதோ கீழ இருக்கற லிங்கில் போய் பாருங்க...இது செப்டம்பரில் எழுதிய பதிவு...

http://apkraja.blogspot.com/2010/09/blog-post_29.html

"ராஜா" said...

தல அந்த பதிவர் நாந்தாங்கோ... நண்பர் பாலாவோட பின்னூட்டத்தில் அந்த பதிவிற்குறிய லிங்க் இருக்கும் தல ...
தல இப்படி ஒரு நல்ல பதிவ(ஹி ஹி நீங்கதான் சொன்னீங்க) நாலு பேருக்கு தெரிய வச்சி அத ஹிட் ஆக்குன நீங்கதான் வலையுலகின் சன் பிக்சர்ஸ்...

தமிழ்க் காதலன். said...

மோகன். வணக்கம். நல்ல நகைச்சுவை கட்டுரை. ரசித்து ரசித்து சிரித்தேன். தமிழ்நாடு தாங்குமா என்பதுதான் தெரியவில்லை. கேட்க ஆள் இல்லாத நாட்டுல இப்படிதான்யா ஆட்டம் போடுவானுக. தலைமுறை மாறுமான்னு பார்ப்போம். மிக்க நன்றி. நீங்களும் மகிழ வந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com ).

நாகராஜசோழன் MA said...

//11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.//

இந்த பாயிண்ட் எனக்கு பிடிச்சிருக்கு.

karthikkumar said...

நீங்க add பண்ணின 11 மேட்டர் சூப்பர்

Phantom Mohan said...

"ராஜா" said...
தல அந்த பதிவர் நாந்தாங்கோ... நண்பர் பாலாவோட பின்னூட்டத்தில் அந்த பதிவிற்குறிய லிங்க் இருக்கும் தல ...
தல இப்படி ஒரு நல்ல பதிவ(ஹி ஹி நீங்கதான் சொன்னீங்க) நாலு பேருக்கு தெரிய வச்சி அத ஹிட் ஆக்குன நீங்கதான் வலையுலகின் சன் பிக்சர்ஸ்...
///////////////////////////////

சூப்பர் பாஸ். எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது. அதனால் தான் போட்டேன்.

கலக்கல் பதிவு. இது நடக்காம இருக்கனும்

"ராஜா" said...

// சூப்பர் பாஸ். எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது. அதனால் தான் போட்டேன்.

ரொம்ப நன்றி தல ...

// கலக்கல் பதிவு. இது நடக்காம இருக்கனும்

நடக்கிறதுக்கும் கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு நெனைக்கிறேன்...

எனக்கு ஒரு டவுட் என்னோட பதிவுல இருந்த நயன்தாரா மேட்டர ஏன் தூக்கிடிங்க ... நீங்க அக்காவோட விசிறியா?

Madhavan said...

எதுவேணாலும் நடக்கலாம்.. அனா, கண்டிப்பா 'சச்சினோட நூறாவது சென்ச்சுரி நடக்காத காரியம்..' வேணும்னா, அரசியல் கட்சிகள் பரம்பரை அரசியல் நடத்துவது போல, சச்சினின் பையன்/பெண், சச்சினோட செஞ்சுரிகளையும் சேர்த்து.. நானும் செஞ்சுரியடித்து.. 100 ஐ தாண்டலாம்..

ப.செல்வக்குமார் said...

நான் இங்கயும் வந்திட்டேன் ..!! அதுசரிங்க . 2030 ல கூட விஜயகலாய்கரத விடலையா ...?

அரசன் said...

ரொம்ப அருமையான நகைச்சுவைகள்...
உங்களின் மானே, தேனே அருமை..
இதெல்லாம் எப்படி வருது னு தெரியல..
ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்...
அருமை..

ஜெய்லானி said...

சார்......ஐயா....பிளாக் விற்பனைக்கு இருக்கா..? இல்ல ரொம்ப நாளா விவசாயம் பண்ணாம இடம் காலியா இருக்கிற மாதிரி தெரியுதே அதான் ...!! :-)

எஸ்.கே said...

அருமை நண்பருக்கு,
நலமா,
சமீபகாலமாக தாங்கள் பதிவுகள் போடவில்லையே, ஏன்?

மாணவன் said...

சூப்பரு பதிவு சூப்பரு....

இந்த கற்பனை தகவலை எழுதி மின்னஞ்சல் அனுப்பிய சிந்தனை சிற்பிக்கும் அதை சிறப்பாக பதிவிட்ட உங்களுக்கும் சிறப்பு நன்றிகள் பல....

Sathiya Balan M said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...