Pages

2030 ல் தமிழகம்


இது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர்?????


2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம், அதன் காரணமாக வளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்து வன்முறை வெறியாட்டம், தற்க்கொலைப் படைத்தாக்குதல்

2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்து. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள், அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம்.


தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistke) கருத்து தெரிவித்துள்ளனர்.

3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்.

உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல் காந்தி மிரட்டியதால், உண்ணாவிரதம் வாபஸ்.

மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால், தமிழகத்தில் இரண்டு நாள் போர் நிறுத்தம். இதை மறைத்து, என்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின், அழகிரி தனித்தனி அறிக்கை.

4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்போர். வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும், தெற்கு தமிழக துணை முதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல். ஒட்டுமொத்த தி.மு.க வின் தலைவராக அடுத்து தானே ஆக வேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.

5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்பு. மணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட் குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.

6. அஜீத் இனி எனக்கு தேவையில்லை, கௌதம் கடுப்பு பேட்டி. அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்த அவரது நிறைவேறா ஆசையில், தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர். இதற்க்கு பதில் அளித்த அஜித், அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன், நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணிட்டார், யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார்.

7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.

இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாக நடிக்கிறார்.

8. குஷ்புவின் மகள் தி.மு.க வில் இணைந்தார். தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரை கட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம். இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்) முப்பது வருடங்களாக பார்த்து வரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவிப்பு.

10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்பு. தி.மு.க வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து, ஓரங்கட்டி, ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கை.

இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.

11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.

12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணி, லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் பேட்டி.

13. எத்தனை முறைதான் சென்னைக்கும், மதுரைக்கும் அலைவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி.ஐ விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.

7G ஏலம் வெளிப்படையாகவே நடந்தது, எந்த விதமான முறைகேடோ, ஊழலோ நடக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர். ராகுல் காந்திக்கும் தெரியும், மத்திய அமைச்சர் ராசா அறிக்கை.

15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வது சதமடித்து உலக சாதனை.


உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டி. காமன் வெல்த் போட்டிகள் போல இதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.

சொல்ல முடியாது, மேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம், நடக்கும்.

-----------------------------------------------------------

இப்போ இது எனக்கு மெயில்ல வந்ததுன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா யார் அந்த பதிவர்-ன்னு தான் தெரியலை. உங்களுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லுங்க.

இதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)

எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.
தெய்வத்துள் தெய்வம்
தெய்வத்துள் தெய்வம் ரஜினிதெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

எழுதியவர்: Phantom Mohan
அதிகாரம் : ரஜினி பக்தன் எனும் அதிகாரம்
குறள் விளக்கம்:

தெய்வம் என்றால் யார்????

வேறு யார் நமது ஒரே தெய்வம் பத்மபூஷண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்.

எங்க ஊரில் நாளைக்கே எந்திரன் ரிலீஸ். நாளைக்கு கோவிலுக்குப் போகப் போறேன் (தெய்வம் வாழும் இடம் கோவில், அதன் படி ரஜினி படம் வெளியிடும் தியேட்டர் தான் அந்தக் கோவில்)

தலைவரின் பக்தகோடிகளுக்கு நாளை கோவிலுக்கு செல்லும் போது, பரவச நிலையில் ஒன்றை மறந்து விடாதீர்கள். பின் அது தெய்வகுத்தம் ஆகிவிடும். நாளை தியேட்டருக்குள் செல்லும் போது மறவாமல் தங்களது பாதணிகளை வெளியிலே விட்டுச் செல்லவும், செருப்போடு கோவிலுக்குள் செல்வது தீட்டு.

எனக்கு லக்கப் பாருங்க, சிவாஜி படமும் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடியே பார்த்தேன், இதுவும் ஒரு நாள் முன்னாடியே பார்க்கப்போகிறேன்.

எல்லாரும் சந்தோஷமா எந்திரன் பாருங்க, நம்பிக்கையோடு போங்க தெய்வம் உங்களை கைவிடாது.

தலைவரை வாழ்த்த எனக்கு தகுதி கிடையாது, எப்படியும் படம் மெகா ஹிட். அதனால உங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த எந்திரன் வாழ்த்துக்கள்.

Happy Enthiran Wishes.

என்னா ஸ்டைலு..என்னா ஸ்டைலு...


ஸ்டில்லுக்குன்னே பொறந்தவர்யா நம்மாளு.தலைவர் போட்டோவில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த போட்டோ கீழே உள்ளது.

பதிவுலகில் நான்...


1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதல்ல பருப்பு அப்புறம் Phantom Mohan

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

மோகன் என் பேரு. முதல்வன் படம் பார்த்ததில இருந்து சும்மா சும்மா நீ என்ன பெரிய பருப்பான்னு கேட்டுகிட்டே இருப்பேன். அதனால அந்த பேருல ஆரம்பிச்சேன் (நம்மள எவனும் நீ என்ன பெரிய பருப்பான்னு கேக்க முடியாதில்ல.) அப்புறம் அது எனக்கு புடிக்கலை, Rolls Royce Phantom கார் என்னுடைய கனவு, ஏன்னா அந்த காருல மட்டும் தான் குடை வைக்கிறதுக்கு ஒரு தனி இடம் குடுத்திருப்பாங்க. குடை எப்பவோ வாங்கி வச்சிட்டேன், கார் சீக்கிரம் வாங்கணும்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அரபு நாட்டுக்கு
வந்தப்புறம், சென்னையில் நண்பர்களுடன் இருந்த மாதிரி சந்தோசமா சிரிச்சு பேச நண்பர்கள் இல்லை. அதனால தமிழில் உள்ள வெப்சைட் தேடி புடிச்சு படிப்பேன். அப்படி நான் ஒரு நாள் பார்த்தது நாஞ்சில் எக்ஸ்பிரஸ். ஒரே மூச்சில் அவருடைய அனைத்து பதிவும் படித்து ரசித்தேன். அப்புறம் அந்தப் பக்கம் மூலம் நெறைய பக்கங்களை தேடி பிடித்து ஆபீசில் சிரிச்சிக்கிட்டே இருப்பேன்.

சில பதிவுகளை பார்த்து மெய்மறந்து நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள். நான் சில பல பதிவர்களைப் பார்த்து காண்டாகி நானே ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டேன். சும்மா கம்மென்ட் போடலாமேன்னு ஆரம்பிச்சது, அப்பப்போ எதாவது மொக்கையா ஒரு உபயோகமும் இல்லாத விசயங்களை மட்டுமே எழுதுவேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒரு மண்ணும் பண்ணலை. முதல் பதிவுக்கு அப்போது எனக்கு தெரிந்த சில பதிவுகளில் போய்
நான் புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன், வந்து வாழ்த்துங்கள் என்று போட்டேன்.

அதோடு சரி இன்று வரை வேற ஒன்னும் பண்ணலை. எனது நண்பர்களுக்கோ, எனது குடும்பத்துக்கோ நான் கிறுக்குவது தெரியாது, தெரிஞ்சது நான் செத்தேன்!

,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

NEVER !!! போன பதிலில் சொன்ன மாதிரி யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்த விஷயத்தை பொதுவில் கூறுவது அவ்வளவாக பிடிக்கவில்லை. மற்றொரு காரணம் நான் யார் என்று தெரிந்தால், வேண்டாம்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இங்க துணைக்கு ஆள் இல்லை, அதான்
வலையுலகில் என் மனநிலை உள்ள நண்பர்களுடன்
நேரத்தை செலவிடுகிறேன்.
மத்தபடி
இதில் சம்பாதிச்சு தான் கஞ்சி குடிக்கணும் என்ற நிலை இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு வராது!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை சில பேரிடம் இருக்கிறது. பட்டாபட்டி, ஹாலிவுட் பாலா சட்டுன்னு நினைவுக்கு வந்தவர்கள். இவர்கள் பதிவை விட கம்மேன்ட்டுக்கு பதில் சொல்லும் விதம் பொறாமையாய் இருக்கும்.

கோபம் பல பேரிடம் இருக்கிறது. தன்னைப் பத்தி பெருமையா எழுதிரவர்கள் இங்கு உண்டு, தான் தான் பெரிய பருப்பு மாதிரி எழுதுவானுங்க, ஏகப்பட்ட நொள்ளை சொல்லுவார்கள், அதற்க்கு ஒரு கூட்டம் ஆமாம் சாமி போடும். அவர்களை எனக்கு பிடிக்காது.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமென்ட் வால்பையன். முதல் follower ஜலீலா மேடம். நான் முதன் முதலில் தொடர்பு கொண்டது Dr. கந்தசாமி சார், நெறையா ஐடியா குடுத்தார். நான்தான் அத follow பண்ணலை.

இன்னும் யாரும் என்னை பாராட்டவில்லை என்பதை பெருங்கேவலத்துடன் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

என்ன பத்தி உங்களுக்கு தெரியாது நான் ரொம்ப கோபக்காரன், மற்றும் பிரபல பதிவர்.

வலையுலகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லோரும் (பொழுது போக்குக்காக எழுதுபவர்கள் மட்டும், சம்பாதிக்க எழுதுபவர்கள் இன்னும் யாரும் இதை எழுதலை!) இதை எழுதி விட்டார்கள். ஆனால் கொஞ்சம் கூட மட்டு மருவாதி இல்லாம, பயம் இல்லாம என்னை யாரும் கூப்பிடலை, நீங்க கூப்பிட்டு தான் எழுதணும்ன்னு ஏதாவது விதி இருக்கா, அதான் என் கெத்தக் காட்ட நானே எழுதிருக்கேன். இதப் பார்த்தாவது யாராவது மறுபடியும் என்ன எழுதக் கூப்பிடுங்க. சந்தோசமா இன்னொருவாட்டி எழுதுறேன்.

இந்த தொடர்பதிவை நான் தொடர அழைப்பவர்கள்...என்னை மதிக்காதவர்களை.


லேடீஸ் அண்ட் ஜென்ட்ல்மேன்


எனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.தயவுசெஞ்சு இதக் கொஞ்சம் பாருங்க.

ஊருக்குப் போகும்போது சந்தோசமா இருக்க இந்த மாதிரி கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு.

இதுக்கு வெளக்கமெல்லாம் தேவையில்ல, பாருங்க சந்தோசமா இருங்க.


இருந்தாலும் அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்!!!!

தமிழகமே தயாராய் இரு! ஜூலை ஒன்று, வருகிறேன் அன்று!

தமிழகமே தயாராய் இரு! ஜூலை ஒன்று, வருகிறேன் அன்று!


ஆமாங்க ஒரு மாசம் நிபந்தனை ஜாமீனில் thailand (அதாங்க தாய் மண்) செல்கிறேன். ஊர்ல எங்க வீட்டில இன்டர்நெட் கிடையாது, இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி அவங்க பசங்க கூட சந்தோசமா பொழுதை கழிக்க, நண்பர்களுடன் ஊர் சுற்றவே ஒரு மாசம் பத்தாது.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு மாத காலம் எங்கும் கம்மென்ட் இட இயலாது, கும்மி அடிக்க இயலாது, மெயில் செக் பண்ண முடியாது!!

"
அப்போ பதிவு"

உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலை. நான் பதிவு போட்டா மட்டும்???????

எனவே பதிவும் போட இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். அப்பபோ என் கடை பக்கம் வந்து அதுக்கு உயிர்குடுங்க, இல்லைன்னா ஒரு மாசம் யாருமே பார்க்காத கடைன்னு சீல் வச்சிருவானுங்க. அதனால, உங்கள நம்பித்தான் கடைய விட்டுட்டு போறேன், பத்திரமா பாத்துக்கோங்க!

தமிழ் புத்தாண்டு அன்று எழுத ஆரம்பித்தேன் (கலைஞர் என்ன, எவன் சொன்னாலும் நமக்கு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 தான்) இதுவரை 26 பதிவுகள் எழுதியுள்ளேன். அதில ஒன்னு ரெண்டு உங்களுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி வோட்டு போட்டு தமிளிஷ் முதல் பக்கம் வரவைத்தீர்கள், நன்றி!

இது வரை என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் 48 பேர்! இன்னும் நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளனர், அவர்கள் இன்னும் என்னை தன் நண்பனாக ஏற்க்கொள்ளவில்லையே தவிர எனக்கு பதில் சொல்கிறார்கள், எனக்கு ஊக்கமளிக்கிறார்கள், என்னை கிண்டல் செய்கிறார்கள், என்னை திட்டுகிறார்கள். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! (முக்கா முக்கா மூணு வாட்டி சொல்லியாச்சு)வழக்கமா எல்லாரும் நூறு, இருநூறு பதிவுக்குத்தான் இந்த மாதிரி நன்றி சொல்லுவார்கள், எனக்கு இன்னைக்கு சொல்லனும்ன்னு தோணியது, சொல்லிட்டேன்.

அனைவருக்கும் நன்றி! அப்பபோ மெயில் செக் பண்ணுவேன், அப்போ உங்கள் அனைவருக்கும் கம்மென்ட் போடுகிறேன்!

அடுத்த மாதம் சந்திப்போம்! எங்க எல்லோரும் டாட்டா காட்டுங்க பார்ப்போம்! நல்லா சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க,

டாட்டா! டாட்டா!

பின்குறிப்பு:

எனக்கு புடிக்காத பதிவா இந்தப் பதிவு ஆயிடுமோன்னு பயமா இருக்கு, ரொம்ப நல்லவன் மாதிரி பதிவு எழுதிருக்கேன்.

பெண்கள், குழந்தைகள், இளகிய மனம் படைத்தோர் அப்பிடியே சிரிச்சிக்கிட்டே டாட்டா காட்டிட்டு போய்டுங்க, அதான் உங்களுக்கு நல்லது. இதுக்கு மேல படிக்காதீங்க, அப்புறம் மோகன் ரொம்ப கெட்டவன், மோசமானவன்னு சொல்லக் கூடாது!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஜெய்லானி என் மேல் கடுங்கோபத்தில் உள்ளார், என் கடந்த பதிவில் அனுஷ்கா படம் இல்லை என்று, அன்னாரின் வேண்டுகோளை ஏற்று, யோவ் ஜெய்லானி இந்த அனுஷ்கா படம் உன் ஒருத்தனுக்காக மட்டும்....போதுமா சந்தோசமா!

அடுத்து இது என் சாய்ஸ், தமன்னா போட்டோ மட்டும் பார்த்தது போதும்...

தமன்னாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தம் திருத்தொண்டு பற்றிய ஒரு வீடியோஉங்களுக்காக!

தமன்னா வரலாறு 1:
தமன்னா வரலாறு 2:

மறுபடியும் எல்லாரும் ஒரு தடவை டாட்டா காட்டுங்க!

Take Care,

Cheers!


பிடிக்கலை! பிடிக்கலை!! பிடிக்கலை!!!


விடை இது தான்!

செம்மொழி பாடல்
முதல்ல இந்தப் பாட்டுல உள்ள நல்ல விசயங்களப் பத்தி என் கருத்தை நான் சொல்லிடுறேன்...

வழக்கம்
போல ARR பாட்டு முதல் முறை கேக்கும் பொது செம காண்டா இருக்கும், என்னடா எழவு பாட்டு இதுன்னு தோணும். அதே போல, ஆனா இது இன்னும்கொஞ்சம் எல்லை மீறிப்போய் சுவத்துல நங்கு நங்குன்னு முட்டுற அளவுக்கு, படு கேவலமா இருந்தது. என் நண்பன் எனக்கு போன் பண்ணி அழுகுறான், என்னடா பாட்டு இதுன்னு. அப்புறம் கேக்க கேக்க எப்பவும் போல ரஹ்மான் கலக்கிட்டாரு. அவர் பாட்டப் பத்தி நான் என்ன சொல்ல, அதான் உலகமே சொல்லுதே!

TMS, சுஷீலா இவங்க ரெண்டு பேரையும் ரொம்ப வருஷம் கழிச்சுபாக்குறேன், சுஷீலா அவங்களுக்கு குரல் அப்பிடியேஇருக்கு..."மாலைப்பொழுதின் மயக்கத்திலே" பாட்டுல என்ன குரலோ அதேகுரல். அவங்க சிரிச்சிக்கிட்டே பாடுறது இன்னும் அருமை. TMS க்கு கையெல்லாம் உதறுது, வயசு ரொம்ப இருக்கும்ல...ஆனா அதே கம்பீரம்.

பாட்டுல
03:19 இருந்து 03:56 வரைக்கும் சும்மா புல்லரிக்க வச்சிட்டாரு ARR. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சௌம்யா என்னமா ராகத்தோட பாடுறாங்க! இசையப்பத்தி ஒரு மண்ணும் தெரியாத எனக்கே, இதப் பாத்ததும் கத்தார்ல எங்கடா சங்கீதம் சொல்லிகுடுக்கிராங்கன்னு தேட வச்சிட்டாங்க! (இதே போல டூயட் படம் வந்தப்போ, sax கத்துக்கனும்ன்னு தெரு தெருவா அலைஞ்சேன், 3000 ரூபா பீஸ், sax நாம தான் கொண்டு வரணுமாம்! ஆசையைகுழி தோண்டி உப்புப்போட்டு புதைச்சிட்டேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சது வெளக்கமாறு பிய்ய பிய்ய அடிப்பாங்க)

இதுக்கப்புறம்
எங்க அண்ணாச்சி ஜாக்சன் துரையும் (Blaze), எலிசபெத் இளவரசியும் வந்து பாடுவாங்க. நல்லாத் தான் இருக்கும்.

அப்புறம்
ஸ்ரீநிவாஸ் சப்பாத்திக்கு மாவு பிசஞ்ச்சு கிட்டே பாடி, ஒரே நேரத்தில ரெண்டு வேலை செய்வது எப்படின்னு காமிப்பாரு. பாடும் போது என்னன்னா சேட்டையெல்லாம் பண்ணுறாங்க.

இந்த
மொத்தப் பாட்டுல, எனக்கு ரொம்ப புடிச்சது ஸ்ருதி! ங்கொய்யால தொண்டை நரம்பு எல்லாம் தெறிக்கிற மாதிரி, என்னமா ஹை பிட்ச்ல பாடுவாங்க. சும்மா சொல்லக்கூடாது சூப்பரப்பு!!

இது
ஜொள்ளு. எனக்கு ரொம்பப் புடிச்ச அஞ்சலி, சமந்தா ரெண்டு பேரையுமே காமிச்சிருக்கார். சந்தோசம்!

பினிஷிங்
டச்சப் பத்தி சொல்ல ஒரு மண்ணும் இல்ல!

*******************************************************************************

இப்போ எனக்கு தோணிய விஷயங்கள்,

இந்தப் பாட்டு தமிழ் மொழியப் பத்தி மட்டுமா, இல்ல மொத்த தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் பத்தியுமா? எனக்குத் தெரிஞ்சு ரெண்டுமே!

இதுல எங்க தமிழப் பத்தி, பாரம்பரியத்தைப் பத்தி, கலாச்சாரத்தப்பத்தி காட்டிருக்காங்க? என்னய்யா இது? கௌதம்முக்கு யார் மேல கோபம்? இந்தப் பாடலை எப்படி ஒத்துக்கொண்டார்கள்? இதுல எங்கய்யா தமிழனப்பத்தி சொல்லிருக்காங்க?

அட இந்தப் பாட்டுல தமிழ் முகத்தையே தேட வேண்டி இருக்குது! கௌதம் வழக்கம் போல A சென்டர் குறிவச்சு எடுத்திருக்கார்! பேருக்கு தாவணி, இமைக்கிற நேரத்துக்குள்ள வயல், ஒரு கிராமத்துப் பெருசு வந்திட்டு போறாரு!

கிரிக்கெட் விளையாடுறத காமிக்கிறான்! கபடி, ஜல்லிக்கட்டு, பல்லாங்குழி, தாயம், கொல கொலையா முந்திரிக்க, பச்சக் குதிர தாண்டுறது (எங்கூர்ல இது கால்தாண்டி), இன்னும் எவ்வளவோ இருக்கு இது எதுவுமே காட்டல. கிரிக்கெட் இப்போ ரொம்ப முக்கியம்! கிரிக்கெட் எந்த அளவு விளயாடுரோமோ அத விட அதிகமா மேல சொன்னத சந்தோசமா விளையாடுவோம். தமிழனோட விளையாட்டு அதுதான், ஆனா அது எதுவுமே காட்டல, அடப்போங்கடா!

கிராமம், வயக்காடு, மாட்டுவண்டி, திருவிழா, வில்லுப்பாட்டு, சிலம்பம், தமிழ் பெண்கள், பொங்கல், முளைப்பாரி, கும்மியடிக்கிறது , குலவை போடுறது, காவடி, தல வாழை இல்லை சாப்பாடு...இன்னும் எவ்வளவோ இருக்கு, இது எதுவுமே காட்டல. ஹை கிளாஸ் குடும்பத்த தான் காமிச்சிருக்கார். இது எதுவுமே இல்லாம அது என்ன கருமம் தமிழன் பாரம்பரியம், பண்பாடு!

பாரம்பரியத்தக் காட்டுய்யான்னா வடகம் சுடுறத காமிக்கிரைங்க, அதுவும் தமிழ் எழுத்துக்கள் வடிவில வடகம்! கொடுமை.

விஜயலட்சுமி நவநீதக்ருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, எனக்கு தெரிஞ்சு இவங்க ரெண்டு பேரு...இன்னும் ஏகப்பட்ட பேரு இருப்பாங்க...அவங்க யாருமே காட்டல, பாடல. இந்த நரேஷ் ஐய்யர், ங்கொய்யால அவன் ஸ்க்ரீன் வர்ற சீன கொஞ்சம் பாருங்க, எனக்கு வந்த கோபத்துக்கு மானிட்டர உடச்சிருப்பேன். கிறுக்கன் மாதிரி கையப் பொளந்துக்கிட்டு, கேவலமா சிரிச்சுக்கிட்டு..ராமா, ராமா!! அவன் மண்டையும், முடியும்...அப்டியே பிச்சு எடுத்திரலாம்ன்னு தோணிச்சு. (உயிரிலே என் உயிரிலே ன்னு உருகி உருகிப் பாடுனவான்னு நெனைக்கும் பொது அடங்கிப் போக வேண்டி இருக்கு)

Blaze & crew அவங்கள காட்டுறதுக்கு மேல சொன்னவங்கள காட்டிருக்கலாம். இல்ல எதுக்கு இவங்கள எல்லாம் காட்டனும்? எந்தப் பாடகரையும் காட்டாமலே சூப்பரா எடுத்திருக்கலாம். அப்போ, நாம நெனைக்கிற அத்தனையையும் படத்தில கொண்டு வந்திரலாம். கடைசி சீன் மட்டும் அவங்க ரொம்ப அடம் புடிச்சா, பாடுனவங்க எல்லாரையும் நிக்க வச்சு ஒரு சாட் எடுக்கலாம்.

பீச்சு கிட்ட நின்னு அவனுங்க எல்லாம் பாடுறத எவ்வளவு நேரம் காட்டுறாங்க! சுனாமி எங்கய்யா போச்சு? வேணும்ன்னும் போது வராது.

யோவ் கௌதம் என்ன நெனப்புல எடுத்த? maximum பாடுறவங்கள தான் காமிக்கிற. bharat bala ஏன் பாடுறவங்கள காமிச்சார்ணா, அத மொத்த இந்தியாவப் பத்தி, சோ, இந்தியாவில இருக்கிற முக்கியமான பாடகர்கள் எல்லாரையும் காமிச்சார். இது எதுக்கு இந்தப் பாட்டு, செம்மொழி தேசியப் பாட்டாம்...இல்ல, இது ரஹ்மான் crew மெம்பெர்ஸ் குரூப் பாட்டு, அப்பிடித் தான் எடுத்து வச்சிருக்க!

வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?

ஒரு நல்ல விசயத்த, அருமையாய் வர வேண்டிய ஒரு படத்தை...கெடுத்து கேவலப்படுத்தி, சிதச்சு, சின்னாபின்னமாக்கிட்டாங்க! அவ்ளோ தான்!

இன்னும் நெறையா திட்டனும்ன்னு தோணுது, பதிவுலக இறையாண்மை கருதி இத்தோட முடிச்சிக்கிறேன்!

கலைஞர்! என்ன சொல்ல, எப்பிடி சாமி இந்தப் படத்த ஒத்துக்க மனசு வந்தது? என்ன நெனப்புல இத சரின்னு சொன்னீங்க?

இது எத்தன பேருக்கு புடிச்சதோ தெரியாது. எனக்கு சுத்தமா, அறவே, கொஞ்சம் கூட பிடிக்கலை! பிடிக்கலை!! பிடிக்கலை!!!