Pages

Showing posts with label நாட்டுக்கு முக்கியம். Show all posts
Showing posts with label நாட்டுக்கு முக்கியம். Show all posts

பதிவுலகில் நான்...


1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதல்ல பருப்பு அப்புறம் Phantom Mohan

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

மோகன் என் பேரு. முதல்வன் படம் பார்த்ததில இருந்து சும்மா சும்மா நீ என்ன பெரிய பருப்பான்னு கேட்டுகிட்டே இருப்பேன். அதனால அந்த பேருல ஆரம்பிச்சேன் (நம்மள எவனும் நீ என்ன பெரிய பருப்பான்னு கேக்க முடியாதில்ல.) அப்புறம் அது எனக்கு புடிக்கலை, Rolls Royce Phantom கார் என்னுடைய கனவு, ஏன்னா அந்த காருல மட்டும் தான் குடை வைக்கிறதுக்கு ஒரு தனி இடம் குடுத்திருப்பாங்க. குடை எப்பவோ வாங்கி வச்சிட்டேன், கார் சீக்கிரம் வாங்கணும்.






3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அரபு நாட்டுக்கு
வந்தப்புறம், சென்னையில் நண்பர்களுடன் இருந்த மாதிரி சந்தோசமா சிரிச்சு பேச நண்பர்கள் இல்லை. அதனால தமிழில் உள்ள வெப்சைட் தேடி புடிச்சு படிப்பேன். அப்படி நான் ஒரு நாள் பார்த்தது நாஞ்சில் எக்ஸ்பிரஸ். ஒரே மூச்சில் அவருடைய அனைத்து பதிவும் படித்து ரசித்தேன். அப்புறம் அந்தப் பக்கம் மூலம் நெறைய பக்கங்களை தேடி பிடித்து ஆபீசில் சிரிச்சிக்கிட்டே இருப்பேன்.

சில பதிவுகளை பார்த்து மெய்மறந்து நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள். நான் சில பல பதிவர்களைப் பார்த்து காண்டாகி நானே ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டேன். சும்மா கம்மென்ட் போடலாமேன்னு ஆரம்பிச்சது, அப்பப்போ எதாவது மொக்கையா ஒரு உபயோகமும் இல்லாத விசயங்களை மட்டுமே எழுதுவேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒரு மண்ணும் பண்ணலை. முதல் பதிவுக்கு அப்போது எனக்கு தெரிந்த சில பதிவுகளில் போய்
நான் புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன், வந்து வாழ்த்துங்கள் என்று போட்டேன்.

அதோடு சரி இன்று வரை வேற ஒன்னும் பண்ணலை. எனது நண்பர்களுக்கோ, எனது குடும்பத்துக்கோ நான் கிறுக்குவது தெரியாது, தெரிஞ்சது நான் செத்தேன்!

,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

NEVER !!! போன பதிலில் சொன்ன மாதிரி யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்த விஷயத்தை பொதுவில் கூறுவது அவ்வளவாக பிடிக்கவில்லை. மற்றொரு காரணம் நான் யார் என்று தெரிந்தால், வேண்டாம்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இங்க துணைக்கு ஆள் இல்லை, அதான்
வலையுலகில் என் மனநிலை உள்ள நண்பர்களுடன்
நேரத்தை செலவிடுகிறேன்.
மத்தபடி
இதில் சம்பாதிச்சு தான் கஞ்சி குடிக்கணும் என்ற நிலை இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு வராது!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை சில பேரிடம் இருக்கிறது. பட்டாபட்டி, ஹாலிவுட் பாலா சட்டுன்னு நினைவுக்கு வந்தவர்கள். இவர்கள் பதிவை விட கம்மேன்ட்டுக்கு பதில் சொல்லும் விதம் பொறாமையாய் இருக்கும்.

கோபம் பல பேரிடம் இருக்கிறது. தன்னைப் பத்தி பெருமையா எழுதிரவர்கள் இங்கு உண்டு, தான் தான் பெரிய பருப்பு மாதிரி எழுதுவானுங்க, ஏகப்பட்ட நொள்ளை சொல்லுவார்கள், அதற்க்கு ஒரு கூட்டம் ஆமாம் சாமி போடும். அவர்களை எனக்கு பிடிக்காது.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமென்ட் வால்பையன். முதல் follower ஜலீலா மேடம். நான் முதன் முதலில் தொடர்பு கொண்டது Dr. கந்தசாமி சார், நெறையா ஐடியா குடுத்தார். நான்தான் அத follow பண்ணலை.

இன்னும் யாரும் என்னை பாராட்டவில்லை என்பதை பெருங்கேவலத்துடன் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

என்ன பத்தி உங்களுக்கு தெரியாது நான் ரொம்ப கோபக்காரன், மற்றும் பிரபல பதிவர்.

வலையுலகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லோரும் (பொழுது போக்குக்காக எழுதுபவர்கள் மட்டும், சம்பாதிக்க எழுதுபவர்கள் இன்னும் யாரும் இதை எழுதலை!) இதை எழுதி விட்டார்கள். ஆனால் கொஞ்சம் கூட மட்டு மருவாதி இல்லாம, பயம் இல்லாம என்னை யாரும் கூப்பிடலை, நீங்க கூப்பிட்டு தான் எழுதணும்ன்னு ஏதாவது விதி இருக்கா, அதான் என் கெத்தக் காட்ட நானே எழுதிருக்கேன். இதப் பார்த்தாவது யாராவது மறுபடியும் என்ன எழுதக் கூப்பிடுங்க. சந்தோசமா இன்னொருவாட்டி எழுதுறேன்.

இந்த தொடர்பதிவை நான் தொடர அழைப்பவர்கள்...என்னை மதிக்காதவர்களை.






லேடீஸ் அண்ட் ஜென்ட்ல்மேன்


எனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



திருந்துங்கடா டேய்!! நொந்த மனதுடன்....

மனசு வெறுத்து போய் இத எழுதுறேன்.....

நேத்து என்னோட சினிமா பதிவு தமிளிஷ் பிரண்ட் பேஜ் ல upload பண்ணின அரை மணி நேரத்தில் வந்ததுன்னு சந்தோசப் பட்டு அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்...அப்போ தான் ஒரு பதிவர் தன்னுடைய பதிவ upload பண்ணிருக்கார்...

அவர் upload பண்ணிய ஆறாவது நிமிடம் 18 வோட்டு..இது எப்படி சாத்தியம்??? என் கண் முன்னாடி நடந்தது..ரொம்ப ஆச்சர்யப்பட்டு அந்தப் பதிவப் போய் படிச்சேன்...minimum 10 நிமிஷம் வேணும்ங்க அத முழுசா படிக்க...ஆனா ஆறே நிமிசத்தில 18 வோட்டு!!!!!

சரி யார் யாரு வோட்டு போட்டுருக்கான்னு போய் பாத்தா.....ஸ்பெக்ட்ரம் ஏலத்துல எடுத்த கம்பனி பேர் தெரியுமா உங்களுக்கு?...எல்லாம் லெட்டர் பேட் கம்பெனி...அத்தனை ஆயிரம் கோடி ஏலத்தில எடுத்த கம்பனிகள் பேரு SWAN, UNITECH,....இந்த மாதிரி ஒரு கம்பனி இருக்கான்னே தெரியாது...

அதே போல அந்த பதிவுக்கு ஒட்டு போட்டவங்க பேரைப் பார்த்தாலே தெரியுது...ஒரு குரூப் அல்லது அந்த பதிவரே பல fake name ல வோட்டு போட்டுருக்கார்...

என்ன அநியாயம் இது? என்னோட சினிமா பதிவுல நான் போட்ட கமெண்ட் கொஞ்சம் பாருங்க எவ்ளோ சந்தோசமா, எழுதிருக்கேன்...உண்மையான மகிழ்ச்சியிலேழுதியவை...

இந்த மாதிரி பாலிடிக்ஸ் பண்ணி, கேவலம் கள்ள வோட்டு போட்டு தான் நீ பிரபலம் ஆகணுமா?? இந்த வெக்கங்கெட்ட பொழப்பு பொழைக்குறதுக்கு நீ பதிவு எழுதாமலே இருக்கலாமே...இந்த மாதிரி சில பேர் பண்ணும் போது, உண்மையிலே எந்த எதிர்பார்ப்புமின்றி, யார்ன்னே தெரியாதவன் பதிவு, நல்லா இருக்குன்ன்ர ஒரு காரணத்துக்காக வோட்டு போடுற மத்தவங்க ஓட்டுக்கு என்ன மரியாதை????

என்னங்க எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ்...

இது மாதிரி நாம பண்ண எவ்ளோ நேரம் ஆகும்?.... "" அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு, அதுல ""ன்னு மட்டும் எழுதி தமிளிஷ் ல upload பண்ணி ஒரு முப்பது ஐடி create பண்ணி முப்பது வோட்டு போட்டா,

அதுவும் பிரண்ட் பேஜ் ல வரும் ல ?????????

அது பதிவா? திருந்துங்கடா டேய்!!

____________________________________________


என்னடா இவன் இந்த சப்ப மேட்டருக்கு போய் இவ்ளோ பீல் பண்ணி ஒரு பதிவு போடுறான்...இதெல்லாம் ஜுஜுப்பி பாஸ் அப்படின்னு நெனைக்காதீங்க....


சின்ன சின்ன அலட்ச்சியங்கள் மாபெரும் தவறுக்கு வழிவகுக்கும்....


எல்லாத்தையும் சகிச்சிட்டு போறது, தப்பு நடந்தா அத தட்டிக் கேக்காம இருக்கிறது, நமக்கென்னன்னு வாழுறது...இது எல்லாமே தவறுக்கு துணை போகும் செயல்....

அப்புறம் அப்டி ஆகிப்போச்சு, இப்டி ஆகிப்போச்சு..இவனுங்கள திருத்தவே முடியாதுன்னு பொலம்புறது...

உங்களால் தப்ப தட்டி கேக்க முடியலன்னா...கேட்க பயம்மா இருக்குன்னா...நீங்களாவது தப்பு பண்ணாம இருங்க..உங்க வீட்டு குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டு பசங்களுக்கு, உங்க தெரு சிறுவர்களுக்கு சொல்லிக் குடுங்க...அது போதும்...

இனி வரும் தலைமுறைக்கு சாதி, பொய், ஏமாற்றுவது, ஊழல், லஞ்சம் இதெல்லாம் தப்புன்னு சொல்லிக் குடுங்க..அவங்க மனசுல ஆழமா பதியுற மாதிரி சொல்லிக்குடுங்க...

உதாரணம், பிறந்த குழந்தைகிட்ட சாதி அப்டினா மிகப்பெரிய கெட்ட வார்த்தை, உங்க அம்மா, அப்பாவ இழிப்பது போல் ன்னு சொல்லிகுடுங்க...இது அவன் மனசுல ஆழமா பதின்ச்சிட்டா போதும்...

அடுத்து எவனாவது அவன் கிட்ட உன் சாதி என்னன்னு கேட்டான்னு வைங்க...செருப்பக் கழட்டி, ஓட விட்டு அடி வெளுத்து விட்டுடுவான்...அவனப் பொறுத்த வரைக்கும் சாதி மாபெரும் கெட்ட வார்த்தை...

இது தாங்க இப்போ வேணும்..இனி வரும் தலைமுறை தங்களுக்குள்ள சண்டை வந்தாலோ அல்லது உட்சபட்ச கோபத்திலோ திட்டுவதற்கு உபயோகப்படும் வார்த்தையாக இந்த சாதி, லஞ்சம், ஊழல், ஏமாற்றுதல் இருக்கட்டும்....

ரொம்ப சந்தோசமா இருந்தேங்க...கேட்காமலே இத்தன பேரு வோட்டு போடுறாங்களேன்னு...ஆனா அந்த சந்தோசத்தையே கெடுத்து விட்டுட்டான்....


இப்போ மறுபடியும் போய் அவன் பதிவ பார்த்தேன்...மொத்தம் 27 வோட்டு...upload பண்ணின ஆறு நிமிசத்தில 18 வோட்டு..upload பண்ணி கிட்டத் தட்ட 14 மணி நேரம் ஆச்சு இப்போ 27 தான்...இதுல இருந்தே தெரியலையா? அவன் குறுக்குப் புத்தியப் பத்தி...

ச்சே!!!



நொந்து போன மனதின் ஓரத்தில் சிறு நம்பிக்கையுடன்,


இது உங்களால்தான் சாத்தியமாயிற்று.....சாத்தியமாகும்!!


இது
உங்களால்தான் சாத்தியமாயிற்று.....

நேத்துப் போட்ட பதிவு tamilish front page ல வந்ததுன்னு சொல்லி எனக்கு மெயில் அனுப்பிருந்த்தாங்க...மொத்தம் 17 வோட்டு...

இதுதான் என் முதல் பதிவு front page ல வந்தது, அதவும் 17 வோட்டோட...

இதுக்கும் யார் காரணம்? என் எழுத்தா? (சத்திய்யமா இல்லேங்க..)

வேற யாரு??????????????












இவங்கதான்
..

என்னே ஒரு தன்னடக்கம்...எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி எங்கேயோ பாத்து நிக்கிறாங்களே இவங்க தான் இதுக்கு காரணம்...





ஹி! ஹி!! ஹி!!! வாழ்க உங்கள் மக்கள் தொண்டு!

கூடவே 17 வோட்டு போட்டு இத front page ல கொண்டு வந்த நீங்களும் ஒரு சின்ன காரணம்...உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கோங்க!!!

----------------------------------------------------------------



நண்பர் ஒருத்தர் கேட்டார் குஷ்பூ DMK ல சேர்ந்ததால நமக்கு என்ன லாபம்ன்னு....

சரியான கேனா.கூனா ங்க அவன்...ஒன்னா? ரெண்டா?

௧. இனி தமிழ் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்யும்
௨. கரண்ட் கட் இனி கிடையாது, அனைவருக்கும் இலவச மின்சாரம்... நீங்க தைரியமா அயன் பாக்ஸ் ஆன் பண்ணி வச்சிட்டு போலாம்
௩. விலைவாசி குறையும், ஜலீலக்கா சமையல் டெய்லி செஞ்சு பாக்கலாம்
௪. பெட்ரோல், டீஸல் உங்க வீட்டுக்கே ப்ரீயா வந்து ஊத்துவாங்க
௫. பணவீக்கம் குறையும்
௬. தமிழகம் சொர்க்க புரியாக மாறும்.
௭. வெளி நாட்டில வேல பாக்குற என்ன மாதிரி நொந்னைங்க, எங்க ஷேக்கையும் கூட்டிட்டு தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்திருவோம்...

என்ன ஒன்னு இந்த பண்பாடு ங்கற வார்த்தைய அகராதில இருந்து அழிக்கனும்...அவ்ளோவே தான்...



திமுகவின் வளர்ச்சிக்கு குஷ்புவின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும்?

குஷ்பு பெண்களின் முன்னேற்றத்துக்கும், முற்போக்கான கருத்துக்களுக்காகவும் வாதாட கூடிய உணர்வு, ஆற்றல் படைத்தவர். திமுகவில் உள்ள மகளிர் அணி மற்றும் பல்வேறு அணியினர், எத்தகைய பணியை ஆற்றுகிறார்களோ, குஷ்புவும் அத்தகைய பணிகளை ஆற்றுவார்.


இது நான் சொல்லலைங்க, தமிழக முதல்வர்..தமிழின தலைவர், தமிழ் பண்பாட்டு காவலர் கலைஞர் தனது கர கர குரலில் சொன்னது...


ஆளும் கட்சியால் குஷ்பு நிர்பந்திக்கப்பட்டாரா?

அப்படிப்பட்ட கேவலமான முறையை நாங்கள் கையாள்வதில்லை. அவரும் அந்த முறையை பின்பற்ற கூடியவர் அல்ல. இவ்வாறு கருணாநிதி
கூறினார்.



NO COMMENTS...

------------------------------------------------------------------------------

இப்போ கொஞ்சம் சீரியசா பேசுவோம்...

பிளஸ் 2 ரிசல்ட் வந்திடுச்சு, உங்க வீட்ல இந்த வயசு பசங்க இருந்தா, உடனே கழுத கெட்ட குட்டிச் சுவர் ங்கற மாதிரி நேர இன்ஜினியரிங், டாக்டர் ன்னு போய்டாதீங்க...எல்லாரும் டாக்டர் ஆயிட்ட யாருக்கு ஊசி போடுவீங்க...

இல்ல சாப்ட்வேர், போதுங்க சாப்ட்வேர் ஏற்க்கனவே நாறிப் போய் கிடக்கு....

Nano Technology ன்னு ஒரு field இருக்கு...இனி வரும் காலங்களில் அதற்க்கு நல்ல எதிர்காலம் இருப்பதை நான் நம்புறேன் ...நெறைய பேர் இப்போ அதப் பத்தி research பண்றாங்க, அது நல்ல field ன்னு refer பண்றாங்க...அதையும் கொஞ்சம் பாருங்க...இது மாதிரி இப்போ develop ஆகுற field ல உங்க பசங்க படிச்சா அவன் சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வருவான்...

சிட்டி ல படிக்கிற பசங்களுக்கு நெறைய உலக விஷயம் ஸ்கூல் படிக்கும் போதே தெரியுது...ஆனா எங்கள மாதிரி டவுன் பசங்களுக்கு அப்பா friend சொல்லி, தெருப்பையன் சொல்லி, ஸ்கூல் வாத்தியார் சொல்லி தான் கொஞ்ச கொஞ்சமா தெரியுது...அவங்களும் மிஞ்சிப் போன சாப்ட்வேர், இன்ஜினியரிங் தவிர வேற ஏதும் புதுசா சொல்ல மாட்டாங்க...

கொஞ்சம் நெட் ல தேடித் பாருங்க..bio technolgy, Nano Technology, petrochemical ன்னு நெறைய புது விஷயங்கள், இனி வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும்...தொலை நோக்கு பார்வையோட சேர்த்து விடுங்க....நீங்க அப்டியே mechanical அல்லது civil சேத்து விட்டாலும் ஒன்னு ரெண்டு பேரு தான் அதே field ல போவான்..மத்தவன் எல்லாம் BPO, software testing, sales ன்னு சம்பந்தமே இல்ல போவான்...

எது படிச்சாலும் Spoken English இப்பவே படிக்க சொல்லுங்க..நாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு வேண்டாம்...அதோடு கொஞ்சம் extra curricular activities like sports, any type of outdoor indoor sports இது அவர்களின் உடல் நலத்துக்கு மிகவும் உதவும்...

இந்த காலத்துல 25 வயசுல தொப்ப விழுந்திருது...காரணம் ஸ்கூல் ல விளையாடினதூட சரி அடுத்து உடம்ப வளச்சு வேல பாக்குறதே கிடையாது..படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் உக்காந்த இடத்தில வேல...எழுந்து நடமாட கூட நேரம் கிடையாது...

இது எங்கள் சொந்த அனுபவம்..எனக்கு ஒன்னும் அப்டி வயசாயிடல 26 வயசு தான் ஆகுது..ஆனா நாங்கள் சந்திச்ச பிரச்சனை அவர்களுக்கு வேண்டாம்...

Spoken English, Sports, Exercise Must.....

உங்கள் பிள்ளை வாழ்க்கை உங்கள் கையில்...மறந்திராதீங்க!

இது உங்களால் தான் சாத்தியமாகும்!!!!



தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளம் -ஒரு பார்வை




இன்னைக்கு மெயில் மேல உள்ள மேட்டர் வந்தது...இனி என் பார்வையில் இதைப்பற்றி ஓர் அலசல்


தலைவருக்கு சம்பளம் கம்மி...தலைவர் தகுதிக்கு எல்லாம் ஒரு படத்துக்கு ஒரு ஊரை எழுதி கொடுக்கணும்

கமலுக்கு இது கொஞ்சம் ஓவர் தான்


கருப்பு MGR எவனும் மதிக்கலன்னு நெனைக்கேன்...managing director ஸ்பெல்லிங் கொஞ்சம் பாருங்க


இவனுக்கு எதுக்கு அம்புட்டு துட்டு...நியாயமா மகேஷ் பாபுக்கு தான் இவன் சம்பளத்த குடுக்கணும்..அவராப் பாத்து எதாவது குடுத்தா ஓகே

5
கோடி வரை இவனுக்கு குடுக்கணுமா...ஏன்டா இவனுக்கெல்லாம் இவ்ளோ குடுத்து கோடியோட மதிப்பே போச்சு...குடுக்கலன்னா அவுக அப்பாருக்கு கோவம் வந்து டான்ஸ் ஆடிக்கிட்டே கவித சொல்லுவாரு..அதுக்கு இவனுக்கு குடுத்திரலாம்

இவனுக்கே இவ்ளோ குடுக்கும் போது மத்தவங்களுக்கு ஓகே...


பிஞ்ச மூஞ்சி அசின்னுக்கு இது ரொம்ப டூ மச்..




நயன்தாரா
& த்ரிஷா சிம்ப்லி வேஸ்ட்...


தங்கத் தலைவி தமன்னாவுக்கும், அனுஷ்க்காவுக்கும் இவ்ளோ கம்மிய சம்பளம் குடுப்பதை எதிர்த்து நாளை மெரினா பீச்சில் ஒரு மணி நேரம் அடையாள உண்ணா விரதம் இருக்கப்படும்...இவ்ளோ கம்மிய குடுத்தா பாவம் புள்ள எப்டியா குடும்பத்த நடத்தும் இல்ல கேக்கேன்...இதை கண்டித்து சட்டசபையில் ஒரு வெட்டுத் தீர்மானம் கழக ஆட்சியின் சார்பில் கொண்டு வந்த நல்லா இருக்கும்...

தலைவிகளுக்கு சம்பள உயர்வு வாங்கி குடுத்தா அடுத்த தேர்தல்ல உங்களுக்கே ஓட்டுப் போடுறேன்..ஒரு ஏழை குடிமகனின் ஆசைய நெரவேத்துங்க....


ஐயோ பாவம் ஸ்ரேயா....



ரகுமான், யுவன், ஹாரிஸ் இவங்களுக்கு வொர்த் தான்..இன்னும் கொஞ்சம் குடுத்தாலும் தமிழன் சந்தோசப்படுவான்

தமிழர்களே பெருமைப்படுங்கள் உங்களால் தான் இது சாத்தியமாயிற்று....

வாழ்க தமிழன் ! வாழ்க தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்!!





உன் வாயில வசம்ப வச்சுத் தேய்க்க!!!!

இந்த நாதாரி பய உதித் நாராயணனும், சுக்விந்தர் சிங்க்க்கும் நாம என்ன பாவம் பண்ணோம்..ஏன் என் தமிழ கடிச்சு மென்னுத் துப்புரானுங்க?.. முதல்ல இவனனுங்களப் பத்தி தப்பா பேசுறேன்னு நெனைக்க வேணாம்..எனக்கு சுக்கவிட உதித்த ரொம்ப புடிக்கும்..வித்தியாசமான வாய்ஸ் SWADES ல ஒரு பாட்டுங்க AAHISTA AAHISATA ன்னு செம பாட்டு..நம்புன நம்புங்க அந்தப் பாட்டக் கேட்டுத்தான் daily தூங்குவான் இந்த பருப்பு...15000 பாட்டுக்கு மேல பாடிருக்காப்ல, அஞ்சு film fare, ஒரு பத்மஸ்ரீ வேற...என்ன பண்ணி என்ன ப்ரோயஜனம்..

பிரியமான பெண்ணை ரசிக்கலாம் ங்கற வரிய, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம்னு பாடுனவந்தான இந்த உதித்து ...

எம்புட்டு பெரிய தப்பு..பண்பாடு பரலோகம் போச்சே...உனக்கு என்ன வருமோ அதப்பண்ணு..மனசுல என்ன பெரிய ஸ்ரேயா க்ஹோசல் ன்னு நெனப்பா...


அந்தப்பொண்ணு TMS பாடுன முத்தைத்திரு பாட்டக்கூட கூட அசால்டா அந்தரா குமால்டியா பாடும்..பொண்ணா அது செஞ்சு வச்ச சிலை..குரலா அது குலோப் ஜாமூன்..இந்த ஜென்மம் பூராம் பாத்துக்கிட்டே இருக்கலாம்..இல்லேங்க அவங்க பாடுறத பாக்கலாம்னு சொன்னேன் ...நாலு பேரு முச்சந்தில வச்சு நம்மள செருப்பால அடிக்கும் போது கூட, அவங்க பாட்ட மெய் மறந்து கேட்கலாம்..அப்டி ஒரு எப்பெக்ட்...அதப் பத்தி நான் இன்னொரு பதிவு வழிஞ்சு எழுதுறேன்...

செம்ம காண்டுல இருக்காங்க பருப்பு இந்த உதித்து மேல... இவரு ஹிந்தில பாடுனா இன்னைக்கு பூராம் கேக்கலாம்..தயவுசெஞ்சு தமிழ விட்ரு...நாராசம் ங்கற வார்த்தைக்கு அர்த்தமே எனக்கு புரியுது...மலையாளம் தெலுங்க கூட வுடளைங்க..என்னடா பாவம் பண்ணோம் உனக்கு...தமிழ ஒரு வழி பண்ணாம நான் உடமாட்டேன்னு சபதம் எடுத்திருப்பான் போல...

இதுக்கு யார் காரணம்..எங்க அண்ணாச்சி A R ரகுமான் தான்..A R ரகுமான எனக்கு புடிக்கும் ன்னு சொன்னா அது கலைங்கருக்கு பாராட்டு விழா புடிக்கும் ன்னு சொல்ற மாதிரி...காது கேக்காதவனுக்கு கூட நம்மால புடிக்கும்..தலைவா தயவுசெஞ்சு இவனுங்கள தமிழ் நாட்டுக்கு கூடிட்டு வராத...

இப்போ எனக்கு என்ன பயம்னா..உங்களுக்கே தெரியும் இளையராஜா திருவாசகம் போட்ட மாதிரி A R R திருக்குரள இசை வடிவத்துல குடுக்கப்போராறு..அதோட trailer தான் மன்னிப்பாயா பாட்டுல வர்ற ஒரு குறள்..எப்டியும் உலகமே திரும்பி பார்க்கும்..ஆனா எங்க இந்த சுக்குவும், உதித்தும் அதுல படிருவாங்கலோன்னு எனக்கு திக் திக் ன்னு இருக்கு..கொஞ்சம் நெனச்சு பாருங்க

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

இந்தக் குறள் அவனுங்க பாடுனா காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்கும், கேப்டனும் கேட் வின்ஸ்லெட்டும் டூயட் பாடுன கூட நான் பாப்பேன் ..ஆனா இதக்கேக்குரதுக்கு, நான் நாண்டுக்கிட்டு செத்த்ருவேன்...கன்னியாக்குமரியே அழிஞ்சு போயுரும்...

அய்யா A R R தயவு செஞ்சு இவனுங்கள ஹம்மிங் கூட பண்ண வச்சிராத....உன்னக் கெஞ்சிக் கேட்டுக்குறேன் ....


டேய் ஒழுங்கா ஓடிப்போயிருங்க.....இன்னொரு தபா உங்க ரெண்டு பேரையும் தமிழ்நாட்டுப் பக்கம் பார்த்தேன்..




ஓடியாந்து ஆட்டோகிராப் வாங்கிடுவேன்...சாக்கிரதை


ஒபாமா என் சித்தப்பா!




யாவரும் கேளீர்! யாவரும் கேளிர்!!
(இதுக்கு தமிழ்ல அர்த்தம் அல்லாரும் கேட்டுக்கோங்கோ! நம்ம அல்லாரும் ஒரே ப்ளட்டு, ரிலேசன்ஸ் !!)

அதாவது மக்களே! நாட்டுல ஏன் உலகத்தில எவனுக்குமே பொறுப்பில்ல...இந்த ஐ நா சபா, லொள்ளு சபா, G6, IR8, SAARC இதெல்லாம் வெறும் கண்துடைப்பு..உலக சமாதானம், உலக சமாதானம் ன்னு மக்கள் பணத்துல நாடு நாடு சுத்தி சம்சா, வட தின்னுட்டு மொக்கை போட்டுட்டு வர்றானுங்க, இந்த உலக டமா கோலிங்க...

நேத்து தீடீர்னு பருப்புக்கு இந்த விஷயத்தில அக்கறை வந்து, அதப் பத்தின STD படிக்கும் போதுதான்...இந்த பனங்கா மண்டயனுங்க நம்ம பதருகள காலம் காலமா ஏமாத்தின விஷயம் தெரிஞ்சு...இந்த மேட்டர்ல டீப்பா இறங்குனான் பருப்பு...அதுல அவன் கண்டு புடிச்ச மேட்டர்ரு ங்கொய்யால ட்டேர்ரர்று.....அப்டியே கரண்டடிச்ச காக்க மாறி பேச்சு மூச்சே இல்லாம கிடந்தான் பருப்பு....இனி எந்த தீவட்டித் தலையன் தடுக்கான்னு பார்ப்போம்....

இனி பருப்பின் அதிரடி.....

ஏலேய் மானிடப் பதர்களா...ஆண்டவன் ஆதம் ஏவால மட்டும் தான் படச்சான்...சோ அவங்க தான் நம்ம ப்ரடுயுசர்...அப்டிப் பாத்தா நாமெல்லாம் யாரு? இன்னும் புரியல இப்ப என் பாட்டியோட மகளை நான் சித்தின்னு கூப்புடுவேன்..எங்க தாத்தா பையன நான் சித்தப்பானு கூப்புடுவேன், அவர் பையன் எனக்கு அண்ணன்/தம்பி...

சோ ஆதம் ஏவாளோட வம்சாவளி நம்ம அப்டினா, ஒபாமா என் சித்தப்பா தான? லேடன் என் மாமன் பையன், அட நம்ம கேட் வின்ஸ்லெட் என் முரப்பொன்னு...தமன்னா வுக்கு நான் மாமன் பையன்..ஐஷு நான் கட்டிக்கிற முறை...இவ்ளோ என் நம்ம நித்தி என் பங்காளி...அப்டினா ரஞ்சிதா என் கொழுந்தியா...



இதெல்லாம் என் முரப்போண்ணுங்க...ஏய் சீ சீ நீங்கெல்லாம் என் மாமன், மச்சான் அப்டின்ன இதெல்லாம் உங்களுக்கு சகோதரிகள்யா...போ போய் இனி வர்ற புள்ள குட்டிகளுக்கு இத்த சொல்லு..இனி வர்ற தலைமுறையாவது அடிச்சிக்கமா அண்ணன் தம்பியா பழகட்டும்...

இந்த உண்மை இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்...இனிமேலாவது ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கமா..நல்ல புள்ளைய இருங்க...

எங்கடா அந்த நோபல் கமிட்டி...ங்கொய்யா உலக சமாதானத்துக்கு எவன் எவனுக்கோ பட்டம் குடுத்தீங்களே..இவ்ளோ பெரிய உண்மைய சொல்லிருக்கேன் எனக்கு குடுங்கடா முதல்ல...