விடை இது தான்!
செம்மொழி பாடல்
முதல்ல இந்தப் பாட்டுல உள்ள நல்ல விசயங்களப் பத்தி என் கருத்தை நான் சொல்லிடுறேன்...
வழக்கம் போல ARR பாட்டு முதல் முறை கேக்கும் பொது செம காண்டா இருக்கும், என்னடா எழவு பாட்டு இதுன்னு தோணும். அதே போல, ஆனா இது இன்னும்கொஞ்சம் எல்லை மீறிப்போய் சுவத்துல நங்கு நங்குன்னு முட்டுற அளவுக்கு, படு கேவலமா இருந்தது. என் நண்பன் எனக்கு போன் பண்ணி அழுகுறான், என்னடா பாட்டு இதுன்னு. அப்புறம் கேக்க கேக்க எப்பவும் போல ரஹ்மான் கலக்கிட்டாரு. அவர் பாட்டப் பத்தி நான் என்ன சொல்ல, அதான் உலகமே சொல்லுதே!
TMS, சுஷீலா இவங்க ரெண்டு பேரையும் ரொம்ப வருஷம் கழிச்சுபாக்குறேன், சுஷீலா அவங்களுக்கு குரல் அப்பிடியேஇருக்கு..."மாலைப்பொழுதின் மயக்கத்திலே" பாட்டுல என்ன குரலோ அதேகுரல். அவங்க சிரிச்சிக்கிட்டே பாடுறது இன்னும் அருமை. TMS க்கு கையெல்லாம் உதறுது, வயசு ரொம்ப இருக்கும்ல...ஆனா அதே கம்பீரம்.
பாட்டுல 03:19 ல இருந்து 03:56 வரைக்கும் சும்மா புல்லரிக்க வச்சிட்டாரு ARR. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சௌம்யா என்னமா ராகத்தோட பாடுறாங்க! இசையப்பத்தி ஒரு மண்ணும் தெரியாத எனக்கே, இதப் பாத்ததும் கத்தார்ல எங்கடா சங்கீதம் சொல்லிகுடுக்கிராங்கன்னு தேட வச்சிட்டாங்க! (இதே போல டூயட் படம் வந்தப்போ, sax கத்துக்கனும்ன்னு தெரு தெருவா அலைஞ்சேன், 3000 ரூபா பீஸ், sax நாம தான் கொண்டு வரணுமாம்! ஆசையைகுழி தோண்டி உப்புப்போட்டு புதைச்சிட்டேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சது வெளக்கமாறு பிய்ய பிய்ய அடிப்பாங்க)
இதுக்கப்புறம் எங்க அண்ணாச்சி ஜாக்சன் துரையும் (Blaze), எலிசபெத் இளவரசியும் வந்து பாடுவாங்க. நல்லாத் தான் இருக்கும்.
அப்புறம் ஸ்ரீநிவாஸ் சப்பாத்திக்கு மாவு பிசஞ்ச்சு கிட்டே பாடி, ஒரே நேரத்தில ரெண்டு வேலை செய்வது எப்படின்னு காமிப்பாரு. பாடும் போது என்னன்னா சேட்டையெல்லாம் பண்ணுறாங்க.
இந்த மொத்தப் பாட்டுல, எனக்கு ரொம்ப புடிச்சது ஸ்ருதி! ங்கொய்யால தொண்டை நரம்பு எல்லாம் தெறிக்கிற மாதிரி, என்னமா ஹை பிட்ச்ல பாடுவாங்க. சும்மா சொல்லக்கூடாது சூப்பரப்பு!!
இது ஜொள்ளு. எனக்கு ரொம்பப் புடிச்ச அஞ்சலி, சமந்தா ரெண்டு பேரையுமே காமிச்சிருக்கார். சந்தோசம்!
பினிஷிங் டச்சப் பத்தி சொல்ல ஒரு மண்ணும் இல்ல!
*******************************************************************************
இப்போ எனக்கு தோணிய விஷயங்கள்,
இந்தப் பாட்டு தமிழ் மொழியப் பத்தி மட்டுமா, இல்ல மொத்த தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் பத்தியுமா? எனக்குத் தெரிஞ்சு ரெண்டுமே!
இதுல எங்க தமிழப் பத்தி, பாரம்பரியத்தைப் பத்தி, கலாச்சாரத்தப்பத்தி காட்டிருக்காங்க? என்னய்யா இது? கௌதம்முக்கு யார் மேல கோபம்? இந்தப் பாடலை எப்படி ஒத்துக்கொண்டார்கள்? இதுல எங்கய்யா தமிழனப்பத்தி சொல்லிருக்காங்க?
அட இந்தப் பாட்டுல தமிழ் முகத்தையே தேட வேண்டி இருக்குது! கௌதம் வழக்கம் போல A சென்டர் குறிவச்சு எடுத்திருக்கார்! பேருக்கு தாவணி, இமைக்கிற நேரத்துக்குள்ள வயல், ஒரு கிராமத்துப் பெருசு வந்திட்டு போறாரு!
கிரிக்கெட் விளையாடுறத காமிக்கிறான்! கபடி, ஜல்லிக்கட்டு, பல்லாங்குழி, தாயம், கொல கொலையா முந்திரிக்க, பச்சக் குதிர தாண்டுறது (எங்கூர்ல இது கால்தாண்டி), இன்னும் எவ்வளவோ இருக்கு இது எதுவுமே காட்டல. கிரிக்கெட் இப்போ ரொம்ப முக்கியம்! கிரிக்கெட் எந்த அளவு விளயாடுரோமோ அத விட அதிகமா மேல சொன்னத சந்தோசமா விளையாடுவோம். தமிழனோட விளையாட்டு அதுதான், ஆனா அது எதுவுமே காட்டல, அடப்போங்கடா!
கிராமம், வயக்காடு, மாட்டுவண்டி, திருவிழா, வில்லுப்பாட்டு, சிலம்பம், தமிழ் பெண்கள், பொங்கல், முளைப்பாரி, கும்மியடிக்கிறது , குலவை போடுறது, காவடி, தல வாழை இல்லை சாப்பாடு...இன்னும் எவ்வளவோ இருக்கு, இது எதுவுமே காட்டல. ஹை கிளாஸ் குடும்பத்த தான் காமிச்சிருக்கார். இது எதுவுமே இல்லாம அது என்ன கருமம் தமிழன் பாரம்பரியம், பண்பாடு!
பாரம்பரியத்தக் காட்டுய்யான்னா வடகம் சுடுறத காமிக்கிரைங்க, அதுவும் தமிழ் எழுத்துக்கள் வடிவில வடகம்! கொடுமை.
விஜயலட்சுமி நவநீதக்ருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, எனக்கு தெரிஞ்சு இவங்க ரெண்டு பேரு...இன்னும் ஏகப்பட்ட பேரு இருப்பாங்க...அவங்க யாருமே காட்டல, பாடல. இந்த நரேஷ் ஐய்யர், ங்கொய்யால அவன் ஸ்க்ரீன் ல வர்ற சீன கொஞ்சம் பாருங்க, எனக்கு வந்த கோபத்துக்கு மானிட்டர உடச்சிருப்பேன். கிறுக்கன் மாதிரி கையப் பொளந்துக்கிட்டு, கேவலமா சிரிச்சுக்கிட்டு..ராமா, ராமா!! அவன் மண்டையும், முடியும்...அப்டியே பிச்சு எடுத்திரலாம்ன்னு தோணிச்சு. (உயிரிலே என் உயிரிலே ன்னு உருகி உருகிப் பாடுனவான்னு நெனைக்கும் பொது அடங்கிப் போக வேண்டி இருக்கு)
Blaze & crew அவங்கள காட்டுறதுக்கு மேல சொன்னவங்கள காட்டிருக்கலாம். இல்ல எதுக்கு இவங்கள எல்லாம் காட்டனும்? எந்தப் பாடகரையும் காட்டாமலே சூப்பரா எடுத்திருக்கலாம். அப்போ, நாம நெனைக்கிற அத்தனையையும் படத்தில கொண்டு வந்திரலாம். கடைசி சீன் ல மட்டும் அவங்க ரொம்ப அடம் புடிச்சா, பாடுனவங்க எல்லாரையும் நிக்க வச்சு ஒரு சாட் எடுக்கலாம்.
பீச்சு கிட்ட நின்னு அவனுங்க எல்லாம் பாடுறத எவ்வளவு நேரம் காட்டுறாங்க! சுனாமி எங்கய்யா போச்சு? வேணும்ன்னும் போது வராது.
யோவ் கௌதம் என்ன நெனப்புல எடுத்த? maximum பாடுறவங்கள தான் காமிக்கிற. bharat bala ஏன் பாடுறவங்கள காமிச்சார்ணா, அத மொத்த இந்தியாவப் பத்தி, சோ, இந்தியாவில இருக்கிற முக்கியமான பாடகர்கள் எல்லாரையும் காமிச்சார். இது எதுக்கு இந்தப் பாட்டு, செம்மொழி தேசியப் பாட்டாம்...இல்ல, இது ரஹ்மான் crew மெம்பெர்ஸ் குரூப் பாட்டு, அப்பிடித் தான் எடுத்து வச்சிருக்க!
வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?
ஒரு நல்ல விசயத்த, அருமையாய் வர வேண்டிய ஒரு படத்தை...கெடுத்து கேவலப்படுத்தி, சிதச்சு, சின்னாபின்னமாக்கிட்டாங்க! அவ்ளோ தான்!
இன்னும் நெறையா திட்டனும்ன்னு தோணுது, பதிவுலக இறையாண்மை கருதி இத்தோட முடிச்சிக்கிறேன்!
கலைஞர்! என்ன சொல்ல, எப்பிடி சாமி இந்தப் படத்த ஒத்துக்க மனசு வந்தது? என்ன நெனப்புல இத சரின்னு சொன்னீங்க?
இது எத்தன பேருக்கு புடிச்சதோ தெரியாது. எனக்கு சுத்தமா, அறவே, கொஞ்சம் கூட பிடிக்கலை! பிடிக்கலை!! பிடிக்கலை!!!