Pages

Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

2030 ல் தமிழகம்


இது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர்?????


2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம், அதன் காரணமாக வளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்து வன்முறை வெறியாட்டம், தற்க்கொலைப் படைத்தாக்குதல்

2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்து. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள், அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம்.


தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistke) கருத்து தெரிவித்துள்ளனர்.

3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்.

உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல் காந்தி மிரட்டியதால், உண்ணாவிரதம் வாபஸ்.

மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால், தமிழகத்தில் இரண்டு நாள் போர் நிறுத்தம். இதை மறைத்து, என்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின், அழகிரி தனித்தனி அறிக்கை.

4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்போர். வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும், தெற்கு தமிழக துணை முதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல். ஒட்டுமொத்த தி.மு.க வின் தலைவராக அடுத்து தானே ஆக வேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.

5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்பு. மணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட் குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.

6. அஜீத் இனி எனக்கு தேவையில்லை, கௌதம் கடுப்பு பேட்டி. அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்த அவரது நிறைவேறா ஆசையில், தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர். இதற்க்கு பதில் அளித்த அஜித், அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன், நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணிட்டார், யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார்.

7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.

இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாக நடிக்கிறார்.

8. குஷ்புவின் மகள் தி.மு.க வில் இணைந்தார். தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரை கட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம். இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்) முப்பது வருடங்களாக பார்த்து வரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவிப்பு.

10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்பு. தி.மு.க வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து, ஓரங்கட்டி, ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கை.

இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.

11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.

12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணி, லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் பேட்டி.

13. எத்தனை முறைதான் சென்னைக்கும், மதுரைக்கும் அலைவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி.ஐ விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.

7G ஏலம் வெளிப்படையாகவே நடந்தது, எந்த விதமான முறைகேடோ, ஊழலோ நடக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர். ராகுல் காந்திக்கும் தெரியும், மத்திய அமைச்சர் ராசா அறிக்கை.

15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வது சதமடித்து உலக சாதனை.


உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.

16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டி. காமன் வெல்த் போட்டிகள் போல இதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.

சொல்ல முடியாது, மேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம், நடக்கும்.

-----------------------------------------------------------

இப்போ இது எனக்கு மெயில்ல வந்ததுன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா யார் அந்த பதிவர்-ன்னு தான் தெரியலை. உங்களுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லுங்க.

இதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)

எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.




தமிழகமே தயாராய் இரு! ஜூலை ஒன்று, வருகிறேன் அன்று!

தமிழகமே தயாராய் இரு! ஜூலை ஒன்று, வருகிறேன் அன்று!


ஆமாங்க ஒரு மாசம் நிபந்தனை ஜாமீனில் thailand (அதாங்க தாய் மண்) செல்கிறேன். ஊர்ல எங்க வீட்டில இன்டர்நெட் கிடையாது, இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி அவங்க பசங்க கூட சந்தோசமா பொழுதை கழிக்க, நண்பர்களுடன் ஊர் சுற்றவே ஒரு மாசம் பத்தாது.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு மாத காலம் எங்கும் கம்மென்ட் இட இயலாது, கும்மி அடிக்க இயலாது, மெயில் செக் பண்ண முடியாது!!

"
அப்போ பதிவு"

உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலை. நான் பதிவு போட்டா மட்டும்???????

எனவே பதிவும் போட இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். அப்பபோ என் கடை பக்கம் வந்து அதுக்கு உயிர்குடுங்க, இல்லைன்னா ஒரு மாசம் யாருமே பார்க்காத கடைன்னு சீல் வச்சிருவானுங்க. அதனால, உங்கள நம்பித்தான் கடைய விட்டுட்டு போறேன், பத்திரமா பாத்துக்கோங்க!

தமிழ் புத்தாண்டு அன்று எழுத ஆரம்பித்தேன் (கலைஞர் என்ன, எவன் சொன்னாலும் நமக்கு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 தான்) இதுவரை 26 பதிவுகள் எழுதியுள்ளேன். அதில ஒன்னு ரெண்டு உங்களுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி வோட்டு போட்டு தமிளிஷ் முதல் பக்கம் வரவைத்தீர்கள், நன்றி!

இது வரை என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் 48 பேர்! இன்னும் நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளனர், அவர்கள் இன்னும் என்னை தன் நண்பனாக ஏற்க்கொள்ளவில்லையே தவிர எனக்கு பதில் சொல்கிறார்கள், எனக்கு ஊக்கமளிக்கிறார்கள், என்னை கிண்டல் செய்கிறார்கள், என்னை திட்டுகிறார்கள். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! (முக்கா முக்கா மூணு வாட்டி சொல்லியாச்சு)



வழக்கமா எல்லாரும் நூறு, இருநூறு பதிவுக்குத்தான் இந்த மாதிரி நன்றி சொல்லுவார்கள், எனக்கு இன்னைக்கு சொல்லனும்ன்னு தோணியது, சொல்லிட்டேன்.

அனைவருக்கும் நன்றி! அப்பபோ மெயில் செக் பண்ணுவேன், அப்போ உங்கள் அனைவருக்கும் கம்மென்ட் போடுகிறேன்!

அடுத்த மாதம் சந்திப்போம்! எங்க எல்லோரும் டாட்டா காட்டுங்க பார்ப்போம்! நல்லா சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க,

டாட்டா! டாட்டா!

பின்குறிப்பு:

எனக்கு புடிக்காத பதிவா இந்தப் பதிவு ஆயிடுமோன்னு பயமா இருக்கு, ரொம்ப நல்லவன் மாதிரி பதிவு எழுதிருக்கேன்.

பெண்கள், குழந்தைகள், இளகிய மனம் படைத்தோர் அப்பிடியே சிரிச்சிக்கிட்டே டாட்டா காட்டிட்டு போய்டுங்க, அதான் உங்களுக்கு நல்லது. இதுக்கு மேல படிக்காதீங்க, அப்புறம் மோகன் ரொம்ப கெட்டவன், மோசமானவன்னு சொல்லக் கூடாது!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஜெய்லானி என் மேல் கடுங்கோபத்தில் உள்ளார், என் கடந்த பதிவில் அனுஷ்கா படம் இல்லை என்று, அன்னாரின் வேண்டுகோளை ஏற்று, யோவ் ஜெய்லானி இந்த அனுஷ்கா படம் உன் ஒருத்தனுக்காக மட்டும்....























போதுமா சந்தோசமா!

அடுத்து இது என் சாய்ஸ், தமன்னா போட்டோ மட்டும் பார்த்தது போதும்...

தமன்னாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தம் திருத்தொண்டு பற்றிய ஒரு வீடியோஉங்களுக்காக!

தமன்னா வரலாறு 1:




தமன்னா வரலாறு 2:





மறுபடியும் எல்லாரும் ஒரு தடவை டாட்டா காட்டுங்க!

Take Care,

Cheers!


ஹ்ம்ம், இதெல்லாம் வெளங்கறதுக்கா?

என்னங்க அக்கிரமம் இது..எங்க பாத்தாலும் ஆணாதிக்கத் திமிர், பெண்களை கேவலப்படுத்தவதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. ஆம்பளைன்னா என்ன பெரிய பருப்பா? எப்போப் பாரு பெண்கள குறை சொல்றது, அவ நடத்தையைப் பத்தி தப்பு தப்பா பேசுறது, எழுதிறது...ஏண்டாங்கடா டேய்! கேக்க ஆளு இல்லைன்னு திமிரா? ஒரு லேப்டாப்பும்,இன்டர்நெட் கனேக்சனும் இருந்தா என்ன வேணும் நாளும் எழுதி நெட்ல விடுவியா?

பெண்களைப் பத்தி தப்பா எழுதிறதுல இவனுங்களுக்கு அப்பிடி ஒரு சந்தோசம், நாரப்பயலுக...நீ எழுதிறதா எல்லாம் நம்புறதுக்கு நாங்க ஒன்னும் காசுக்கு ஓட்டுப் போடுற கூட்டம் இல்லடா. , பாவம்ங்க அந்த அப்பிராணிப் பொண்ணு, அது
என்ன பண்ணுச்சி இவனுங்கள, ஒருபொண்ணு நல்ல நிலைமல இருந்த இவனுங்களுக்கு பொறுக்காது, எதாவது தப்பு தப்பா எழுதி அந்தப் பொண்ணு மானத்த வாங்கிரலாம்ன்னு இவனுங்களுக்கு ஒரு நப்பாசை...நடக்காதுடி, நடக்க விட
மாட்டேண்டா.... அந்தப் பொண்ணு மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.


எவன் என்ன சொன்னாலும், இந்த உலகமே எதிர்த்து நின்னாலும் நாங்க அந்தபொண்ணு பின்னாடி நிப்போம். அந்தப் பொண்ணுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவோம். படுவா இன்னொரு தரம் எவனாவது அந்தப் பொண்ணப்பத்தி தப்பா எழுதினீங்க...*&^&%^&$%$%#$#%$#%$#%$

கூல், கூல், கூல் மச்சி..ஏன் இவ்ளோ கோபப்படுற, நம்ம பாடிக்கு கோபப்பட்டா தாங்குமா?

யோவ் எவ்ளோ நாள் தான்யா பொறுமையா போகுறது, எதோ சும்மா டைம் பாசுக்கு எழுதுறாங்கன்னு பார்த்த, ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு கடைசில இங்கயும் வந்திட்டாங்க... எங்க பார்த்தாலும் அதப்பத்தியே பேசிக் கொல்றானுங்க, மனசு வலிக்கிதுடா! இவனுங்கல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலை? நான் எப்பவுமே பெண்கள் பக்கம் (ஆனா ஒரு பொண்ணு கூட என் பதிவப் படிக்கல, அதான் ஏன்னு தெரியலை!)

சரி விடு அதான் நீயே களத்துல இறங்கி மிரட்டிட்டேள்ள இனி எவனும் இந்த மாதிரி தப்பா எழுதமாட்டான்!

எது எப்பிடியோ, கடைசியா கடுங்கோபத்தோட ஒன்னு சொல்றேன்,













இன்னொரு தடவ தமன்னாவுக்கும், கார்த்திக்கும் லவ்வு, அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க, ஜோவும் அதுக்கு சப்போர்ட்டுன்னு எவனாவது அள்ளி விட்டீங்க, நான் மனுசனாவே இருக்க மாட்டேன்!


சிவனேன்னு இலையைப் பாத்துக்கிட்டு இருக்கிற இந்தப்புள்ளையப்பத்தி தப்பா எழுத இவனுங்களுக்கு எப்பிடித்தான் மனசு வருதோ!




இவனுங்கள அடிக்க கவட்டை எதுக்குடா செல்லம், நாங்க இருக்கோம்..நாங்க பாத்துக்கிறோம்!






*****************************************************************************

""தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.""

ஒரு வேலை இதுதான் விஜய்யோட அடுத்த படக் கதையா? ஏன்னா அதுவும் பாடிகார்டு, இதுவும் பாடிகார்டு !!!!!!!!!!!!!!

இதுதான் கதைன்னா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு, இப்பவே உங்க தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்றேன்...ஏன்னா



அட இந்தப் பொண்ணு படத்தோட ஹீரோயின் அவ்வளவு தான், நீங்க கீழ படிங்க...


"சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது"

சோ, விஜய் படத்தோட பாதியிலேயே தற்கொலை பண்ணிக்கிறாரு,
அதான் !!!!!!!!!!!!!!!!!!!

******************************************************************************

அனுப்புனர்
பாரதப் பிரதமர்,
புது டெல்லி, இந்தியா

பெறுநர்
தமிழக முதல்வர்
தமிழ்நாடு

சப்: தமிழர் மறுகுடியேற்றத்தை விரைவுபடுத்த ராஜபக்சேவுக்கு அறிவுறுத்துங்கள் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

மதிப்பிற்குரிய அய்யா,

நலம் நலமறிய ஆவல். அங்கு உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா, தனியாக கட்சியைப் பற்றி விசாரிக்க தேவை இல்ல. உங்கள் குடும்பத்தை நலம் விசாரித்தாலே உங்கள் கட்ச்சியையும் விசாரித்தது போல தானே.

மேற்கண்ட தங்கள் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.
கடிதத்தில் உள்ள உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது.


நீங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன், முதலமைச்சர்களுக்கு தனி விமானம் உண்டு, அது இலவசப் பயணமே. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேணுமானாலும் செல்லலாம், சமீபத்தில் நீங்கள் புது டெல்லி வந்தீர்களே, அது போல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்...நீங்கள் நினைத்தால்!!

இத்துடன் எனது கையொப்பம் இட்ட புகைப்படம் இணைத்துள்ளேன், இந்திய இறையான்மைப்படி இவ்வளவு தான் தற்பொழுது என்னால் செய்ய முடியும். வேறு எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும். இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப் போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.



*************************************************************************


என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே, இந்த எழவு பதிவ எழுதி முடிச்சுப் பார்த்த பிறகு தான், இதுல தங்கத் தலைவி அனுஷ்கா போட்டோ போட முடியாதுன்னு தெரிஞ்சது, இத நெனச்சு நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கேன், இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லவும்!

மத்தவங்களுக்கு:

என்னோட பதிவுகளப் படிச்சிட்டு, என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதத்தான் நான் இப்பல்லாம் தலைப்பா வைக்கிறேன்! சோ, என்ன நெனச்சு மீண்டும் ஒருமுறை தலைப்ப படிச்சிட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க!