Pages

Interview ல உண்மைய சொன்ன என்னாகும்?ஒரு சேஞ்சுக்கு Interview-ல உண்மைய சொன்னா எப்புடி இருக்கும்...

நீங்கள் எதற்க்காக இந்த வேலைக்கு விண்ணப்பிதுள்ளீர்கள்?

எத்தனையே நாதாரிகளுக்கு அனுப்புனேன், எவனும் கூப்பிடல, நீ லூசு கூப்பிட்ட தோ வந்தாச்சு
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

எதற்க்காக நீ இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேரணும்?

எப்பிடியும் எவன் டவுசரயாவது உருவனும், நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்..இந்த கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு சுயநலமா யோசிக்கிரதில்லப்பா

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எதற்கு உனக்கு வாய்ப்பு தரணும்?

வரும் போதே பாத்தேன்..நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு, அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது...எப்டியும் எவனுக்காவது குடுக்க போற, அத எனக்கே குடுத்துறேன்

உனக்கு ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி, நான் வேலை குடுத்தேன்னு வை..அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?

உனக்கு சனியன் புடிச்சது ன்னு நெனைப்பேன், அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...டக்குனு எந்திரிச்சு ஆடுவேன், சொல்ல முடியாது..ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன் ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே வெளிய நிக்குது

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை நினைக்கிறீர்கள்?

(அத சொன்னா ரொம்ப அசிங்கமாயிரம்..வேண்டாம்)

எவன் சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன், அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------


உங்களுடைய பலகீனம்?

ஒன்னும் இல்ல சார்..வேலை செய்யும் போது தூங்கிருவேன்..என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு போய் முட்ட, தகுடு எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான் வேற பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்க பண்ணதிலே மிகப் பெரிய தப்பு எது? எவ்வாறு அதை சரி செய்தீர்கள்/செய்வீர்கள்?

பண்ணதிலே மிகப் பெரிய தப்புன்னா, போன கம்பனில சேந்தது..கம்பெனியா அது சனியன் எப்பபாரு வேலை வேலைன்னுட்டு, நிம்மதியா you tube பாக்க முடியாது..Orkut பிளாக் பண்ணிட்டனுங்க..சாட்டிங் பண்ண முடியாது..

அதுவும் இல்லாம எல்லாம் மொக்க பிகரு,,குமட்டிக்கிட்டு வரும் சார்..ஒன்னு ரெண்டு இருந்தாலும் கல்யாணம் ஆனத இருக்கும்,அடுத்தவன் பாவம் நமக்கு எதுக்கு சார்..

அத சரி செய்யத் தான் தோ இங்க இருக்கேன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய சாவல் எது? எப்படி அதை எதிர்கொண்டீர்கள்?

மிகப்பெரிய சவால்னா மூதேவிங்க எல்லா interview ளையும் "எதுக்கு வேற வேலை தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க" அதான் சார்..

விஜய் படம் பாத்த மாதிரி முழிப்பேன்..வேர்த்துக் கொட்டும், அதுக்கு பதில் சொல்ல முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார் ..என் டவுசர் கிழிஞ்சிரும்..பே பே பே ன்னு ஏதேதோ உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

எதற்காக உங்கள் பழைய கம்பனில இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?

நீ என்ன மானாவுக்கு உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ அதுக்குத்தான்..போதுமா

அதுவும் இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..எனக்கே போர் அடிக்குது

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கம்பனில நீ என்ன மாதிரி வேலை எதிர்பாக்குற?

வேலையே இருக்கக் கூடாது..மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்..மாச மாசம் Increment குடுக்கணும்..நெறைய பிகருங்க இருக்கணும்..டேடிங் ஏற்பாடு பண்ணிக்குடுத்தா ரொம்ப சந்தோசம் சார்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுடைய லட்சியம் என்ன? அதற்க்கு உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?

நெறையா சம்பாதிக்கணும், அதுக்கு வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா தாவனும் ...நான் ஒருத்தன் நல்லா இருக்கணும்னா, எத்தன கம்பனி நாசமா போனாலும், எது பண்ணாலும் தப்பில்ல

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்ன சம்பளம் எதிர்பாக்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்..அதே சம்பளத்துக்கு எவன் வருவான்..ஒரு 30 ௦% கூட்டிக் குடு (தப்ப நெனைக்காதீங்க சார்)...

எனக்கு தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு பேசுவேன்னு..அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட 30% ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்

இதெப்புடி இருக்கு?


யே! நான் ஜெயிலுக்கு போறேன்! ஜெயிலுக்கு போறேன்! !


ஆமாங்க ஆமா
இந்த ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்..

ஜெயில்ல நாள் பூராம் எட்டுக்கு பத்து ரூம்லே ஜாலியா இருக்கலாம்!..

ஆபீஸ்ல பத்துக்கு பத்து ரூம்ல சாவனும்!!

ஜெயில்ல மூணு வேல சோறு ஓசில குடுப்பனுங்கோ, வாரத்தில ரெண்டு தடவ பிரியாணி வேற!...

ஆபிஸ்ல நாம தான் கொண்டு வரணும் இல்ல மரண விலாஸ் கான்டீன்ல காசு குடுத்து தின்னுட்டு வாயில வயித்தில அடிச்சிக்கனும்!!

ஜெயில்ல நீங்க ஒழுங்கா பொத்திக்கிட்டு சொல்ற வேலைய செஞ்சா தண்டன குறையும்!

ஆபிஸ்ல மேல உள்ளத செஞ்சீங்க நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலின்னு ஊர்ப் பய வேலையெல்லாம் உங்க தலைல வந்து விழும்!!

ஜெயில்ல நமக்கு கேட்ட தொறக்க மூட ஒருத்தன் இருப்பான், ரொம்ப பெருமையா இருக்கும்!

ஆபிஸ்ல நீங்க தான் அந்த நாய்ச் சங்கிலிய கழுத்துல போட்டுத் தொரக்கனும் !!

ஜெயில்ல நீங்க டிவி பாக்கலாம், கபடி ஆடலாம், நொண்டி விலாடலாம்...ஒரே ஜாலியா இருக்கும்!

ஆபிஸ்ல நீங்க கிரிக்கெட் ஸ்கோர் பாத்தாக் கூட ஆப்படிச்சு மொக்க பிகருங்க முன்னாடி கேவலப்படுத்துவானுங்க !!

ஜெயில்ல உங்க குடும்பம் குட்டில்லாம் உங்கள பாக்க வரும் நீங்களும் குஜால மொக்க போடலாம் !

ஆபிஸ்ல நீங்க ஒங்க ஆளுக்கு SMS அனுப்புனாலும் கரும்பன்னிக்கு மூக்கு வேத்துரும், வந்து சில்லு மூக்கப் பேத்ருவான் இல்ல காத்தாம்பட்டி கலங்கிரும்!!

ஜெயில்ல ஒங்களுக்கு ஒரு செலவு கிடையாது, நாலு நல்லவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டுன டாக்ஸ்ல குஜாலா தின்னுட்டு செனப் பன்னியாட்டம் திரியலாம்!

ஆபிஸ்ல ஒங்க எல்லாச் செலவையும் நீங்க தான் பாக்கணும், குடுக்குற கொஞ்ச நஞ்ச சம்பலத்திளையும் TAX ன்னு சொல்லி பாதிய புடிங்கிருவானுங்க, நாம ஹவுஸ் ஓனருக்கும், கிரெடிட் கார்டு பில்லுக்கும் ஊர்பய கால்ல விழுவோம் !!

இப்பச் சொல்லுங்க ரெண்டுல எது ஒசத்தி...

இன்னும் எதுக்கு இங்கே முறைச்சு பாத்துக்கிட்டு, சட்டுப் புட்டுன்னு ஒரு மொன்னக் கத்திய எடுத்தோமா..பக்கத்துல இருக்கிறவன போட்டோமா உள்ள போனமான்னு இருக்கணும்...

வெயிட் வெயிட் கொலை பண்றதுன்னு ஆயிப்போச்சு...உங்க ஆள எவனாவது லவடிட்டு போயிருப்பன்ல அவனப் போடுங்க...உங்க பிரமோஷன புடுங்குன புடுங்கிய போடுங்க...இல்ல இருக்கவே இருக்கான் இளிச்சவாயன் டேமேஜர் தக்காளி அவனப் போடுங்க

தப்பிதவறியும் நம்ம ஊரு அரசியல்வாதி எவனையாவது போட்ராதீங்க...பின்ன மக்களுக்கு நல்லது பண்ணீங்கன்னு சொல்லி award குடுத்து உங்களுக்கு சிலையும் வைப்பனுங்க! சாக்கிரத...

யே! ஊஷாரையா உஷாரு! ஓரம் சாரம் உஷாரு!!

உன் வாயில வசம்ப வச்சுத் தேய்க்க!!!!

இந்த நாதாரி பய உதித் நாராயணனும், சுக்விந்தர் சிங்க்க்கும் நாம என்ன பாவம் பண்ணோம்..ஏன் என் தமிழ கடிச்சு மென்னுத் துப்புரானுங்க?.. முதல்ல இவனனுங்களப் பத்தி தப்பா பேசுறேன்னு நெனைக்க வேணாம்..எனக்கு சுக்கவிட உதித்த ரொம்ப புடிக்கும்..வித்தியாசமான வாய்ஸ் SWADES ல ஒரு பாட்டுங்க AAHISTA AAHISATA ன்னு செம பாட்டு..நம்புன நம்புங்க அந்தப் பாட்டக் கேட்டுத்தான் daily தூங்குவான் இந்த பருப்பு...15000 பாட்டுக்கு மேல பாடிருக்காப்ல, அஞ்சு film fare, ஒரு பத்மஸ்ரீ வேற...என்ன பண்ணி என்ன ப்ரோயஜனம்..

பிரியமான பெண்ணை ரசிக்கலாம் ங்கற வரிய, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம்னு பாடுனவந்தான இந்த உதித்து ...

எம்புட்டு பெரிய தப்பு..பண்பாடு பரலோகம் போச்சே...உனக்கு என்ன வருமோ அதப்பண்ணு..மனசுல என்ன பெரிய ஸ்ரேயா க்ஹோசல் ன்னு நெனப்பா...


அந்தப்பொண்ணு TMS பாடுன முத்தைத்திரு பாட்டக்கூட கூட அசால்டா அந்தரா குமால்டியா பாடும்..பொண்ணா அது செஞ்சு வச்ச சிலை..குரலா அது குலோப் ஜாமூன்..இந்த ஜென்மம் பூராம் பாத்துக்கிட்டே இருக்கலாம்..இல்லேங்க அவங்க பாடுறத பாக்கலாம்னு சொன்னேன் ...நாலு பேரு முச்சந்தில வச்சு நம்மள செருப்பால அடிக்கும் போது கூட, அவங்க பாட்ட மெய் மறந்து கேட்கலாம்..அப்டி ஒரு எப்பெக்ட்...அதப் பத்தி நான் இன்னொரு பதிவு வழிஞ்சு எழுதுறேன்...

செம்ம காண்டுல இருக்காங்க பருப்பு இந்த உதித்து மேல... இவரு ஹிந்தில பாடுனா இன்னைக்கு பூராம் கேக்கலாம்..தயவுசெஞ்சு தமிழ விட்ரு...நாராசம் ங்கற வார்த்தைக்கு அர்த்தமே எனக்கு புரியுது...மலையாளம் தெலுங்க கூட வுடளைங்க..என்னடா பாவம் பண்ணோம் உனக்கு...தமிழ ஒரு வழி பண்ணாம நான் உடமாட்டேன்னு சபதம் எடுத்திருப்பான் போல...

இதுக்கு யார் காரணம்..எங்க அண்ணாச்சி A R ரகுமான் தான்..A R ரகுமான எனக்கு புடிக்கும் ன்னு சொன்னா அது கலைங்கருக்கு பாராட்டு விழா புடிக்கும் ன்னு சொல்ற மாதிரி...காது கேக்காதவனுக்கு கூட நம்மால புடிக்கும்..தலைவா தயவுசெஞ்சு இவனுங்கள தமிழ் நாட்டுக்கு கூடிட்டு வராத...

இப்போ எனக்கு என்ன பயம்னா..உங்களுக்கே தெரியும் இளையராஜா திருவாசகம் போட்ட மாதிரி A R R திருக்குரள இசை வடிவத்துல குடுக்கப்போராறு..அதோட trailer தான் மன்னிப்பாயா பாட்டுல வர்ற ஒரு குறள்..எப்டியும் உலகமே திரும்பி பார்க்கும்..ஆனா எங்க இந்த சுக்குவும், உதித்தும் அதுல படிருவாங்கலோன்னு எனக்கு திக் திக் ன்னு இருக்கு..கொஞ்சம் நெனச்சு பாருங்க

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

இந்தக் குறள் அவனுங்க பாடுனா காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்கும், கேப்டனும் கேட் வின்ஸ்லெட்டும் டூயட் பாடுன கூட நான் பாப்பேன் ..ஆனா இதக்கேக்குரதுக்கு, நான் நாண்டுக்கிட்டு செத்த்ருவேன்...கன்னியாக்குமரியே அழிஞ்சு போயுரும்...

அய்யா A R R தயவு செஞ்சு இவனுங்கள ஹம்மிங் கூட பண்ண வச்சிராத....உன்னக் கெஞ்சிக் கேட்டுக்குறேன் ....


டேய் ஒழுங்கா ஓடிப்போயிருங்க.....இன்னொரு தபா உங்க ரெண்டு பேரையும் தமிழ்நாட்டுப் பக்கம் பார்த்தேன்..
ஓடியாந்து ஆட்டோகிராப் வாங்கிடுவேன்...சாக்கிரதை


ஒபாமா என் சித்தப்பா!
யாவரும் கேளீர்! யாவரும் கேளிர்!!
(இதுக்கு தமிழ்ல அர்த்தம் அல்லாரும் கேட்டுக்கோங்கோ! நம்ம அல்லாரும் ஒரே ப்ளட்டு, ரிலேசன்ஸ் !!)

அதாவது மக்களே! நாட்டுல ஏன் உலகத்தில எவனுக்குமே பொறுப்பில்ல...இந்த ஐ நா சபா, லொள்ளு சபா, G6, IR8, SAARC இதெல்லாம் வெறும் கண்துடைப்பு..உலக சமாதானம், உலக சமாதானம் ன்னு மக்கள் பணத்துல நாடு நாடு சுத்தி சம்சா, வட தின்னுட்டு மொக்கை போட்டுட்டு வர்றானுங்க, இந்த உலக டமா கோலிங்க...

நேத்து தீடீர்னு பருப்புக்கு இந்த விஷயத்தில அக்கறை வந்து, அதப் பத்தின STD படிக்கும் போதுதான்...இந்த பனங்கா மண்டயனுங்க நம்ம பதருகள காலம் காலமா ஏமாத்தின விஷயம் தெரிஞ்சு...இந்த மேட்டர்ல டீப்பா இறங்குனான் பருப்பு...அதுல அவன் கண்டு புடிச்ச மேட்டர்ரு ங்கொய்யால ட்டேர்ரர்று.....அப்டியே கரண்டடிச்ச காக்க மாறி பேச்சு மூச்சே இல்லாம கிடந்தான் பருப்பு....இனி எந்த தீவட்டித் தலையன் தடுக்கான்னு பார்ப்போம்....

இனி பருப்பின் அதிரடி.....

ஏலேய் மானிடப் பதர்களா...ஆண்டவன் ஆதம் ஏவால மட்டும் தான் படச்சான்...சோ அவங்க தான் நம்ம ப்ரடுயுசர்...அப்டிப் பாத்தா நாமெல்லாம் யாரு? இன்னும் புரியல இப்ப என் பாட்டியோட மகளை நான் சித்தின்னு கூப்புடுவேன்..எங்க தாத்தா பையன நான் சித்தப்பானு கூப்புடுவேன், அவர் பையன் எனக்கு அண்ணன்/தம்பி...

சோ ஆதம் ஏவாளோட வம்சாவளி நம்ம அப்டினா, ஒபாமா என் சித்தப்பா தான? லேடன் என் மாமன் பையன், அட நம்ம கேட் வின்ஸ்லெட் என் முரப்பொன்னு...தமன்னா வுக்கு நான் மாமன் பையன்..ஐஷு நான் கட்டிக்கிற முறை...இவ்ளோ என் நம்ம நித்தி என் பங்காளி...அப்டினா ரஞ்சிதா என் கொழுந்தியா...இதெல்லாம் என் முரப்போண்ணுங்க...ஏய் சீ சீ நீங்கெல்லாம் என் மாமன், மச்சான் அப்டின்ன இதெல்லாம் உங்களுக்கு சகோதரிகள்யா...போ போய் இனி வர்ற புள்ள குட்டிகளுக்கு இத்த சொல்லு..இனி வர்ற தலைமுறையாவது அடிச்சிக்கமா அண்ணன் தம்பியா பழகட்டும்...

இந்த உண்மை இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்...இனிமேலாவது ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கமா..நல்ல புள்ளைய இருங்க...

எங்கடா அந்த நோபல் கமிட்டி...ங்கொய்யா உலக சமாதானத்துக்கு எவன் எவனுக்கோ பட்டம் குடுத்தீங்களே..இவ்ளோ பெரிய உண்மைய சொல்லிருக்கேன் எனக்கு குடுங்கடா முதல்ல...

பதிவெழுதுவது எப்பூடி?

இதைத்தான் இன்று நாம் கடையப் போகிறோம்! ரெடி ஜூட்....

என்னத்த எழுதுறது, எத எழுதுறது...இதான் இப்டித்தான் பதிவுலகமே விஜய் படம் பார்த்த குடும்பம் மாறித் தறிகெட்டுத் திரியுது...இதுக்கு ஒரு கயித்தப் போட்டுக் கட்டல ங்கொய்யால நான் பருப்பில்லடா...


பதிவுலகமே இப்ப உனக்கு இன்னா பிரச்சின? டாபிக் இல்ல, எழுதுரக்கு மேட்டர்ரு இல்ல...அப்டியும் எழுதிக் கிழிச்சாலும், ஓட்டுப்போட ஒரு மானிடப் பதறும் இல்ல... அம்புட்டுத் தானே...அத்த என்னாண்ட உடுன்றேன்!!! நான் டீல் பண்ணிக்கிறேன்...இன்க்கிரிமென்ட் இன்க்கிரிமென்ட் னா எவன் குடுப்பான்? ஒரு ரிசைன் கடுதாசிய தட்டி வுட்டோம்னு வை! மெர்சிலா ஆயிக் தூக்கிக் குடுத்திருவனுங்கோ!!! பல நேரம் ஆப்போசிட்டா கூட நடக்கும்!!இது நன்றி கெட்ட உலகம்!! எந்த நாதாரியையும் நம்பாத!!! என்னையும் நம்பாத (பருப்பு கோட்டை கம்பெனி பாலிசி அண்டார்டிக்கல கூட பேமஷு...உருட்டு கட்டையில்ல..ஒரு பல்லுக் குத்துற குச்சியத் தூக்கிட்டு, ரெண்டாப்பு படிக்கிற ஒரு பால்வாடிப் பய வந்தாலும்..... கம்பனிய ஆன் தி ஸ்பாட்ல கலைச்சிட்டு, பாலைவனத்துல புல்லுப் புடுங்குற வேலைக்கு போயிடுவேன்...)!!... நானும் உன்ன நம்பமாட்டேன்!!

பதிவெழுத டாபிக் இல்லன்னா என்னப் பத்தி பெருமையா எழுது... பருப்போட அருமை பெருமைகள பத்தி எழுது...சரி வேண்டாம்ப்பா பருப்ப கேவலப்படுத்தி, கலாய்ச்சு, திட்டியாவது எழுது...என் பெருமை உலகறியட்டும்...

டேய் உனக்கு மொக்க போடா நாங்க தான் கிடைச்சோமா? ஏதாவது ஐடியா குடுப்பேன்னு பாத்தா வாய்க்கு வந்தத எழுதிரிக்கியே, பின்ன என்ன மானாவுக்கு இந்த பதிவு?...அப்டின்னு தான திட்றீங்க...

அட பதறுகளா பின்ன எப்டி கம்பனிய ஓட்றது? பாத்தீங்களா இப்போ நான் ஒரு பதிவ எழுதிட்டேன்... இதெல்லாம் ஒரு ஜென்மம் னு நெனைக்கீங்க????..நெனச்சிட்டு போங்க...எனக்கு அவமானப் படறதெல்லாம் விஜய் க்கு அவர் படம் பிளாப் ஆகுற மாதிரி....நானும் சரி...விஜயும் சரி இதெல்லாம் ஒரு மேட்டராவே எடுத்துக்க மாட்டோம்....

இதென்ன நாட்டுக்கு சேவை செய்ற இடமா..மொக்க போட்ற இடம், பொழுது போகாமா கிறுக்குறோம்..நீங்களும் பொழுது போகாம இங்க வந்து படிக்கீறீங்க..இப்பப் பாருங்க ஒரு அஞ்சு நிமிஷம் உங்க பொழுது போச்சா? பருப்பு எதையுமே ஒரு தொலை நோக்குப் பார்வையோட தாங்க எழுதுவான்...வர்ட்டா....வுடு ஜூட்