Pages

வெளக்கமாறு பிஞ்சிரும்!

விஜய் படத்தால் முப்பது கோடி நஷ்டமாம்! 35% நஷ்ட ஈடு கேக்குறாங்க!


தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

******************************************

நான் கேட்பது


அப்போ குருவி 150 நாள், சச்சின் 200 நாள், வேட்டைக்காரன் ஹிட் எல்லாம் பொய்யா?

சன் டிவி லே வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சுறா ன்னு போடுறான், விஜய் படம் வெற்றின்னு பேட்டி கொடுத்தான். இவனுங்க படம் மெகா தோல்வினு சொல்றானுங்க. என்னடா நடக்குது?

அப்போ! வேட்டைக்காரன் வெற்றி படம் என்று கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து எல்லாம் கொடுத்தது எல்லாம் பெரிய பட்டை நாமமா!.

சுறா படம் சூப்பர்ன்னு விமர்சனம் போட்டான் தினகரன் ல. மக்கள் வெள்ளம், ஒரு வருசத்துக்கு டிக்கெட் இல்லன்னு எல்லாம் சொன்னங்க?

முட்டாப் பயலுகளா, 5 படம் படுதுடிச்சு,6 வது படத்த பார்க்காமலே ஏன் வாங்கினீங்க ? உங்க எவன் கிட்டயும் செல் போன், ஈமெயில் கிடையாதா? டெய்லி இவன வச்சு தானடா செல் போன் கம்பனியும், இன்டர்நெட் டீம் பொழப்பு ஓடுது! நீங்க எல்லாம் தமிழ் நாட்டுல தான இருக்கீங்க?


இவன வச்சு எவ்ளோ சம்பாதிச்சிருப்பீங்க, அப்பெல்லாம் இவனைக் கூப்பிட்டு பங்கு குடுத்தீங்களா?

இவன் ஹீரோ தானடா, எவன் உனக்கு படம் வித்தானோ அவனப் போய் கேளுங்க. அதுக்கு தைரியம் இல்லாம ஒருபுள்ளப் பூசியப் போட்டு என்னா அடி?

பாவம் அவனும் எவ்ளோ நாள் தான் வழிக்காத மாதிரி நடிப்பான் (ஆங்! விஜய் என்னைக்கு நடிச்சிருக்கான்?)


எச்சரிக்கை (யாருக்கு யாருக்கோ) :

இந்த பாருங்கடா மேல கேட்ட கேள்வி எல்லாம் சரி, விஜய்க்கு கேக்க நாதி கிடையாது, அதனால அவன்கிட்ட படம் படுத்துக்கிச்சு காசு குடுன்னு கேட்ட மாதிரி எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க...எத்தன கொலை விழும்னு எனக்கே தெரியாது, எவனா இருந்தாலும் அவனுக்கு சாவு தான். குறைந்த பட்சம் தெருவுக்கு ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லைன்னா நாங்க கொளுத்துவோம்.இந்த தந்தி அடிக்கிறது, ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இதெல்லாம் கிடையாது, நாங்கெல்லாம் சோறு திங்கிரவைங்க. தமன்னா
மேல ஒரு தூசி விழுந்தாலும் தமிழ் நாடே பத்தி எரியும், கொளுத்தி விட்டு போயிட்டே இருப்போம். சொல்லிட்டேன், அப்புறம் சொல்லலைன்னு வருத்தப் படக்கூடாது.....

இதையும் மீறி தமன்னாவ இதுல எவனும் இழுத்தீங்க, அப்புறம் தலைப்பு தான் !நாதியத்த விஜய்க்கு :

விடுங்க பாஸ்... இவங்க எப்பவுமே இப்படிதான்... இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?? நீங்க கலைச்சேவையை தொடருங்கள். உங்கள நம்பித்தான் SMS டீமும், சில பல பதிவர்களும் இருக்காங்க!


தல அஜித்:

அடுத்து நம்ம கிட்ட தான் வருவாங்க! உஷாரு!

*******************************************************************


பதிவு போட்டு ஒரு வாரத்துக்கு மேல ஆகுதுங்க. என்ன எழுதன்னு தெரியாம கிறுக்குபபுடிச்ச மாதிரி அலைஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நெனைக்கிறீங்களா?

அதான் இல்ல, நம்ம தங்க தலைவி தமன்னாவுக்காக ஒரு சாப்ட்வேர் எழுதும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். இப்போ சமீபத்தில தமன்னா நடிச்ச சுறா ன்னு ஒரு படம் வந்திருக்கு. அந்தப் படத்த நிம்மதியா பாக்க முடியலைங்க. ஒரு கருவாப்பைய அடிக்கடி ஸ்க்ரீன்ல வந்து இம்சை பண்றான், அவன் தான் படத்தில தமன்னாவ காதலிக்கிறான். சரி கருமம் பண்ணித் தொல, அதுக்காக நம்ம ஆள ரசிக்கலாம்னு பார்த்தா அவனையே அடிக்கடி காமிச்சி கடுப்பேத்துரானுங்க.அதான் ஒரு சாப்ட்வேர் எழுதிக்கிட்டு இருக்கேன், இனிமே தமன்னா நடிச்ச படத்தில தமன்னா வர்ற சீன் மட்டும் நீங்க பார்க்கலாம், கூட எவனாவது வந்தா அவன் மூஞ்சி அழிஞ்சு போய்டும். எல்லா சீன்லயும், எல்லா பாட்டுலயும் கண்ட நாய்ங்க இம்சை இல்லாம தலைவிய ரசிச்சுப் பார்க்கலாம். இது தமன்னா ன்னு இல்ல எல்லா நடிகைகளுக்கும் பொருந்தும், software programming ல எங்கெல்லாம் தமன்னா ன்னு வருதோ அங்கெல்லாம் உங்களுக்கு புடிச்ச நடிகை பேர மாத்திட்டா போதும்.

விலை இன்னும் தீர்மானிக்கல, R&D ல இருக்கு கூடிய சீக்கிரம் மார்க்கெட் ல வந்திடும்.
**************************************************
தங்கத் தலைவி அனுஷ்கா நடிச்ச சிங்கம் படம் ரிலீஸ் ஆயிருக்கு. எல்லாரும் பார்த்து சந்தோசமா இருங்க!

************************************************************

என்னடா இவன் விஜயப்பத்தி இவ்ளோ எழுதிருக்கான், விஜய் போட்டோ ஒன்னு கூட காணோம் ன்னு நினைக்க வேண்டாம். As per company rules, நாதாரி ஆம்பளைங்க படங்கள் எக்காரணம் கொண்டும் உபயோகப்படுத்துவதில்லை ன்னு சத்தியம் பண்ணிருக்கோம் (தலைவர் படம் விதிவிலக்கு). ஆம்பளைங்கள எவ்ளோ திட்டி, கேவலப்படுத்தி எழுதலாம், எவனும் கேள்வி கேக்க மாட்டான்!

பெண்களை திட்டு எழுதுவதில்லை....ஏன்னா தமன்னா, அனுஷ்கா இருவரும் பெண்கள் எனும் காரணத்திற்க்காக......

இப்போ தலைப்பு எனக்கு சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்!

என்ன ஆனாலும்

என்றும் என்றென்றும் தமன்னா, அனுஷ்கா வழியில்,

சினிமா ரொம்ப ஈசிங்க!! லோ பட்ஜெட் படம்

"சினிமா ரொம்ப ஈசிங்க!! - டிரைலர் " இதோட தொடர்ச்சி தான் இந்த பதிவு...


லோ பட்ஜெட் படம் எப்டி எடுக்கிறதுன்னு இப்போ பாப்போம்...

தேவையானவை :

ப்ரோடுயுசர் - 1
நடிகர், நடிகைகள் - தேவையான அளவு
இசை - 1
கேமரா மென் - 1
ஒரு வீடு, ஒரு தெரு, அஞ்சு பாட்டு, மூணு பைட்டு...

நல்ல ஞாபகம் இருக்கட்டும் இது லோ பட்ஜெட் படம்...எவ்ளோ முடியுமோ, அவ்ளோ சிக்கனமா படம் எடுக்குறோம்

ஒரு வீடு அந்த வீட்ல ஒரு கேன்சர் அம்மா ரெண்டு பையன், மூணு பொண்ணுங்க அல்லது ஒரு ஹர்ட் அட்டாக் அப்பா அஞ்சு பொண்ணுங்க...

நமக்கு
முதலாவது ஓகே
ஆர்டிஸ்ட்
எல்லாம் உங்களுக்கு சீரியல், சன் மியூசிக் ல கிடைப்பாங்க...இப்போ கேன்சர் அம்மாவுக்கு படம் முழுக்க ஒரே ஒரு புடவை தான்...மூத்த பையன் தான் ஹீரோ, பாட்டுல மட்டும் புது டிரஸ் போட்டா போதும், சோ பசங்க ரெண்டு பேரையும் மில் தொழிலாளியா காட்டுவோம்...காக்கி & காக்கி தான் யுனிபார்ம்...முடிஞ்சா டூயட் ல கூட அவன் யுனிபார்ம் போட்டு ஆடட்டும்...ங்கொய்யால கனவுல கூட அவன் கடமை தவற மாட்டான்னு சொல்லிடலாம்...

பொண்ணுங்க மூணு பெரும் ஸ்கூல் படிக்கிறாங்க..அவங்களுக்கும் யுனிபார்ம் தான்...அதுல ஒருத்தி 12th படிக்கிறா...அவல ஒருத்தன் லவ் பண்றான்...அவன் அவுங்க ஹவுஸ் ஓனர் பையன்...அவன் பிச்சா ஹுட் ல வேல பாக்குறான்..சோ அவனுக்கும் யுனிபார்ம் இருக்கு...ஒரே ஒரு பைக் மட்டும் எக்ஸ்ட்ரா செலவு, அதுக்கும் எதாவது பண்ணுவோம்...

வேண்டாம் அவன் படிச்சு முடிச்சிட்டு வேல இல்லாம வீட்ல தண்டசோறு திங்குறான்...சூப்பர்.... அவனுக்கு சட்டையே வேண்டாம், ஒரு பனியன் ஒரு கைலி...தொலஞ்சான் அவனும்..இப்போ ஒரு ஹீரோயன் வேணும்...சன் மியூசிக் ல சீப்பா எதாவது எடுத்துப் போடுவோம்..அவ பக்கத்து வீட்ல தையல் காரி பொண்ணு...ரெண்டு தையல் மெசின் போதும்...ஆத்தாளும் மவளும் படம் முழுக்கு அத மிதிச்சு கிட்டே இருக்காளுக...

இப்போ ஹீரோ மேல ஹீரோயின்னுக்கு லவ்...ஆனா ஹீரோ தம்பிக்கு அவ மேல ஒன் சைடு லவ் ...சோ ஆளுக்கு ஒரு டூயட்...அந்த தெருவுக்குள்ள ஒன்னு...அவ வீட்லயம் இவன் வீட்லயும் மாறி மாறி ஒன்னு...ஹீரோ தங்கச்சி டூயட், அவங்க ஸ்கூல் கிரௌண்ட் ல வச்சு...ஒரு பாட்டு தீபாவளி அன்னைக்கு எல்லாக் குடும்பமும் சேர்ந்து பாடுற பாட்டு...ஒரு பாட்டு சோக பாட்டு, அதுக்கென்ன அமெரிக்க வா போக முடியும், கழுத அவன் அவன் வீட்டுக்குள்ளே கதறி அழுது கிட்டே பாடுறானுங்க...செண்டிமெண்ட் ரொம்ப முக்கியம்...ஹீரோ தன் தங்கச்சிக்கு சமைக்கிறது எப்டின்னு சொல்லி குடுக்கிறான் ( அதுக்கு நீங்க நம்ம சமயல் பதிவர்கள் கிட்ட இருக்கிறதிலே சீப்பா என்ன பண்ணலாம் ன்னு கேட்டுக்கோங்க ) இன்னொரு தங்கச்சிக்கு கோலம் போடறது எப்டின்னு சொல்லி குடுக்கிறான்...இதப் பாத்து அவங்க அம்மா சந்தோசத்தில சிரிக்கிறா...நடு நடுவுல ரெண்டு மொக்க காமெடி இந்த குமுதம், குங்குமம் ல வர்ற காமெடியா பாத்து போடுறோம்....

இந்த கேமரா ஆங்கிள் எல்லாம் அந்த வீடு, தெருவ சுத்தியே இருக்கணும்...செண்டிமெண்ட் சீன் ல மியூசிக் போடுறோம்...பாட்டுக்கு மியூசிக் கண்டிப்பா வேணும்..சோ மத்த நேரம், அது வேண்டாம் செலவு மிச்சம்....

இப்போ ஒரு ட்விஸ்ட் வேணும்... ஹவுஸ் ஓனர் தன் பையனுக்கு ஹீரோயின பேசி முடிக்கிறான்...இதக் கேள்விப் பட்ட ஹீரோ தங்கச்சியும், ஹீரோ தம்பியும் விஷம் குடிச்சு செத்துப் போறாங்க..ரெண்டு விக்கெட் அவுட்டு...ஹீரோ ஹவுஸ் ஓனர் கிட்ட சபதம் விடுறான் ...இதே தெருவுல நான் ஒரு வீடு கட்டி வாடகைக்கு விடுறேன்ன்னு....

ஹீரோ தன் குடும்பத்தோட நடுத்தெருவுக்கு வந்திட்டான்...இப்போ ஹீரோ கான்செர் அம்மாவையும், ரெண்டு தங்கச்சியையும் காப்பாத்தணும்...வீடு கட்டி வாடகைக்கு விடனும்...இங்க இண்டர்வல் விடுறோம்...

ஒரு நாள் ஹீரோ சொல்லிக் குடுத்த பலகாரத்த ஹீரோ தங்கச்சி யாருக்கும் தெரியாம செஞ்சு பாக்குறா ...அதப் புடுங்கித் தின்ன அவங்க அம்மா ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுறாங்க...ஹாஸ்பிட்டல்ல டாக்டர் பைத்தியம் புடிச்ச மாதிரி THIS IS MEDICAL MIRACLE ன்னு கத்துறார்...என்னா அவுங்க அம்மாவுக்கு கேன்சர் சரியாப் போச்சு...தங்கச்சி குடுத்த தின்னு தான் அவங்களுக்கு கேன்சர் குணமாச்சு...ஹீரோ சந்தோசத்தில சிரிக்கிறான்..நாடு முழுக்க இந்த நியூஸ் பரவிடுச்சு...வெளி நாட்டு கம்பனிகள் படையெடுத்து வந்து அந்த பலகாரத்தோட காப்பி ரைட்ஸ் கேக்குறாங்க....ஆனா ஹீரோ தான் சொந்தமா தங்கச்சிய வச்சு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு பலகாரம் தயார் பண்ணி எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி பண்றான்...உலக கோடீஸ்வரன் ஆகுறான்...ஜனாதிபதி அவார்ட் குடுக்குறார்...சபதத்தில ஜெயிக்குறான்...சுபம்

இப்போ பாருங்க செலவே இல்லாம ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்தாச்சு....

மீடியம் பட்ஜெட் நாளைக்கு, வர்ர்ட்டா...பின்குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நடிகைகள் லோ பட்ஜெட்டுக்கு லாயக்கற்றவர்கள்....


Copyright © 2010 http://cute-paruppu.blogspot.com. All rights reservedதிருந்துங்கடா டேய்!! நொந்த மனதுடன்....

மனசு வெறுத்து போய் இத எழுதுறேன்.....

நேத்து என்னோட சினிமா பதிவு தமிளிஷ் பிரண்ட் பேஜ் ல upload பண்ணின அரை மணி நேரத்தில் வந்ததுன்னு சந்தோசப் பட்டு அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்...அப்போ தான் ஒரு பதிவர் தன்னுடைய பதிவ upload பண்ணிருக்கார்...

அவர் upload பண்ணிய ஆறாவது நிமிடம் 18 வோட்டு..இது எப்படி சாத்தியம்??? என் கண் முன்னாடி நடந்தது..ரொம்ப ஆச்சர்யப்பட்டு அந்தப் பதிவப் போய் படிச்சேன்...minimum 10 நிமிஷம் வேணும்ங்க அத முழுசா படிக்க...ஆனா ஆறே நிமிசத்தில 18 வோட்டு!!!!!

சரி யார் யாரு வோட்டு போட்டுருக்கான்னு போய் பாத்தா.....ஸ்பெக்ட்ரம் ஏலத்துல எடுத்த கம்பனி பேர் தெரியுமா உங்களுக்கு?...எல்லாம் லெட்டர் பேட் கம்பெனி...அத்தனை ஆயிரம் கோடி ஏலத்தில எடுத்த கம்பனிகள் பேரு SWAN, UNITECH,....இந்த மாதிரி ஒரு கம்பனி இருக்கான்னே தெரியாது...

அதே போல அந்த பதிவுக்கு ஒட்டு போட்டவங்க பேரைப் பார்த்தாலே தெரியுது...ஒரு குரூப் அல்லது அந்த பதிவரே பல fake name ல வோட்டு போட்டுருக்கார்...

என்ன அநியாயம் இது? என்னோட சினிமா பதிவுல நான் போட்ட கமெண்ட் கொஞ்சம் பாருங்க எவ்ளோ சந்தோசமா, எழுதிருக்கேன்...உண்மையான மகிழ்ச்சியிலேழுதியவை...

இந்த மாதிரி பாலிடிக்ஸ் பண்ணி, கேவலம் கள்ள வோட்டு போட்டு தான் நீ பிரபலம் ஆகணுமா?? இந்த வெக்கங்கெட்ட பொழப்பு பொழைக்குறதுக்கு நீ பதிவு எழுதாமலே இருக்கலாமே...இந்த மாதிரி சில பேர் பண்ணும் போது, உண்மையிலே எந்த எதிர்பார்ப்புமின்றி, யார்ன்னே தெரியாதவன் பதிவு, நல்லா இருக்குன்ன்ர ஒரு காரணத்துக்காக வோட்டு போடுற மத்தவங்க ஓட்டுக்கு என்ன மரியாதை????

என்னங்க எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ்...

இது மாதிரி நாம பண்ண எவ்ளோ நேரம் ஆகும்?.... "" அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு, அதுல ""ன்னு மட்டும் எழுதி தமிளிஷ் ல upload பண்ணி ஒரு முப்பது ஐடி create பண்ணி முப்பது வோட்டு போட்டா,

அதுவும் பிரண்ட் பேஜ் ல வரும் ல ?????????

அது பதிவா? திருந்துங்கடா டேய்!!

____________________________________________


என்னடா இவன் இந்த சப்ப மேட்டருக்கு போய் இவ்ளோ பீல் பண்ணி ஒரு பதிவு போடுறான்...இதெல்லாம் ஜுஜுப்பி பாஸ் அப்படின்னு நெனைக்காதீங்க....


சின்ன சின்ன அலட்ச்சியங்கள் மாபெரும் தவறுக்கு வழிவகுக்கும்....


எல்லாத்தையும் சகிச்சிட்டு போறது, தப்பு நடந்தா அத தட்டிக் கேக்காம இருக்கிறது, நமக்கென்னன்னு வாழுறது...இது எல்லாமே தவறுக்கு துணை போகும் செயல்....

அப்புறம் அப்டி ஆகிப்போச்சு, இப்டி ஆகிப்போச்சு..இவனுங்கள திருத்தவே முடியாதுன்னு பொலம்புறது...

உங்களால் தப்ப தட்டி கேக்க முடியலன்னா...கேட்க பயம்மா இருக்குன்னா...நீங்களாவது தப்பு பண்ணாம இருங்க..உங்க வீட்டு குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டு பசங்களுக்கு, உங்க தெரு சிறுவர்களுக்கு சொல்லிக் குடுங்க...அது போதும்...

இனி வரும் தலைமுறைக்கு சாதி, பொய், ஏமாற்றுவது, ஊழல், லஞ்சம் இதெல்லாம் தப்புன்னு சொல்லிக் குடுங்க..அவங்க மனசுல ஆழமா பதியுற மாதிரி சொல்லிக்குடுங்க...

உதாரணம், பிறந்த குழந்தைகிட்ட சாதி அப்டினா மிகப்பெரிய கெட்ட வார்த்தை, உங்க அம்மா, அப்பாவ இழிப்பது போல் ன்னு சொல்லிகுடுங்க...இது அவன் மனசுல ஆழமா பதின்ச்சிட்டா போதும்...

அடுத்து எவனாவது அவன் கிட்ட உன் சாதி என்னன்னு கேட்டான்னு வைங்க...செருப்பக் கழட்டி, ஓட விட்டு அடி வெளுத்து விட்டுடுவான்...அவனப் பொறுத்த வரைக்கும் சாதி மாபெரும் கெட்ட வார்த்தை...

இது தாங்க இப்போ வேணும்..இனி வரும் தலைமுறை தங்களுக்குள்ள சண்டை வந்தாலோ அல்லது உட்சபட்ச கோபத்திலோ திட்டுவதற்கு உபயோகப்படும் வார்த்தையாக இந்த சாதி, லஞ்சம், ஊழல், ஏமாற்றுதல் இருக்கட்டும்....

ரொம்ப சந்தோசமா இருந்தேங்க...கேட்காமலே இத்தன பேரு வோட்டு போடுறாங்களேன்னு...ஆனா அந்த சந்தோசத்தையே கெடுத்து விட்டுட்டான்....


இப்போ மறுபடியும் போய் அவன் பதிவ பார்த்தேன்...மொத்தம் 27 வோட்டு...upload பண்ணின ஆறு நிமிசத்தில 18 வோட்டு..upload பண்ணி கிட்டத் தட்ட 14 மணி நேரம் ஆச்சு இப்போ 27 தான்...இதுல இருந்தே தெரியலையா? அவன் குறுக்குப் புத்தியப் பத்தி...

ச்சே!!!நொந்து போன மனதின் ஓரத்தில் சிறு நம்பிக்கையுடன்,


சினிமா ரொம்ப ஈசிங்க - டிரைலர்என்னோட 23 வருஷ சினிமா அனுபவத்தில நான் இத எழுதப்போறேன் (ஆமாங்க எனக்கு 26 வயசாகுது எனக்கு தெரிஞ்சு 3 வயசுல இருந்து படம் பாக்கிறேன்..இது போதாதா?)...இப்போ நான் உங்க எல்லாருக்கும் டீச்சர் ஆயிட்டேன்...ஆமாங்க ஆமா சினிமா எப்படி எடுப்பதுன்னு உங்களுக்கு கத்துத் தரப் போறேன்...(பய புள்ளைகளுக்கு சந்தோசத்தைப் பாரு ) இதுக்கு எனக்கு குரு தட்சணை எல்லாம் ஒன்னும் வேண்டாம்...

சினிமாங்கிறது ஒரு தவம் மாதிரி...எல்லாருக்கும் வராது..அது ஒரு கலை..நம்மள முழுசா அதுக்கு அர்ப்பணிக்கணும்...கடுமையா உழைக்கணும்...நெறைய சிந்திக்கணும்....எல்லாத்துக்கும் மேல dedication, sincerity, creative mind வேணும்...இப்டி எல்லாம் யாரவது நெனச்சிருந்த்தாலோ, இல்ல உங்களுக்கு யாராவது சொல்லிருந்தாலோ, இது மேல எல்லாம் நம்பிக்க இருந்தாலோ அப்டியே ஓடிப் போய்டுங்க...நீங்க இதுக்கு லாயக்கு இல்ல...

சினிமாவ கெடுக்கிறது சாரி எடுக்கிறது எப்டின்னு நான் சொல்றேன்...இது ஒன்னும் ரூல்ஸ் பலோ பண்ற மாதிரி கஷ்டம் இல்லேங்க...ஓட்டுக்கு துட்டு வாங்குற மாதிரி சப்ப மேட்டர்....

இது சும்மா டிரைலர் தான் உங்களுக்காக நான் கஷ்டப்பட்டு, ரொம்ப ஈசியா சொல்லித் தர்றேன்...சினிமா ல மொத்தம் ஆறு வகை...

லோ பட்ஜெட் - V சேகர், T P கஜேந்திரன் படங்கள்
மீடியம் பட்ஜெட் - K S ரவிக்குமார், விக்ரமன் படங்கள்
ஹை பட்ஜெட் - சங்கர் படம்
அவார்ட் படம் - மணி ரத்னம் , பாலா padangal

ரெண்டு லாஸ்ட் செமஸ்டர் ல வரும்

அவ்ளோ தான்...

இது ஒவ்வொன்னும் எப்டி எடுக்கிறதுன்னு அடுத்த பதிவுல நான் சொல்றேன்...

வர்ட்டா............
இது உங்களால்தான் சாத்தியமாயிற்று.....சாத்தியமாகும்!!


இது
உங்களால்தான் சாத்தியமாயிற்று.....

நேத்துப் போட்ட பதிவு tamilish front page ல வந்ததுன்னு சொல்லி எனக்கு மெயில் அனுப்பிருந்த்தாங்க...மொத்தம் 17 வோட்டு...

இதுதான் என் முதல் பதிவு front page ல வந்தது, அதவும் 17 வோட்டோட...

இதுக்கும் யார் காரணம்? என் எழுத்தா? (சத்திய்யமா இல்லேங்க..)

வேற யாரு??????????????
இவங்கதான்
..

என்னே ஒரு தன்னடக்கம்...எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி எங்கேயோ பாத்து நிக்கிறாங்களே இவங்க தான் இதுக்கு காரணம்...

ஹி! ஹி!! ஹி!!! வாழ்க உங்கள் மக்கள் தொண்டு!

கூடவே 17 வோட்டு போட்டு இத front page ல கொண்டு வந்த நீங்களும் ஒரு சின்ன காரணம்...உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கோங்க!!!

----------------------------------------------------------------நண்பர் ஒருத்தர் கேட்டார் குஷ்பூ DMK ல சேர்ந்ததால நமக்கு என்ன லாபம்ன்னு....

சரியான கேனா.கூனா ங்க அவன்...ஒன்னா? ரெண்டா?

௧. இனி தமிழ் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்யும்
௨. கரண்ட் கட் இனி கிடையாது, அனைவருக்கும் இலவச மின்சாரம்... நீங்க தைரியமா அயன் பாக்ஸ் ஆன் பண்ணி வச்சிட்டு போலாம்
௩. விலைவாசி குறையும், ஜலீலக்கா சமையல் டெய்லி செஞ்சு பாக்கலாம்
௪. பெட்ரோல், டீஸல் உங்க வீட்டுக்கே ப்ரீயா வந்து ஊத்துவாங்க
௫. பணவீக்கம் குறையும்
௬. தமிழகம் சொர்க்க புரியாக மாறும்.
௭. வெளி நாட்டில வேல பாக்குற என்ன மாதிரி நொந்னைங்க, எங்க ஷேக்கையும் கூட்டிட்டு தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்திருவோம்...

என்ன ஒன்னு இந்த பண்பாடு ங்கற வார்த்தைய அகராதில இருந்து அழிக்கனும்...அவ்ளோவே தான்...திமுகவின் வளர்ச்சிக்கு குஷ்புவின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும்?

குஷ்பு பெண்களின் முன்னேற்றத்துக்கும், முற்போக்கான கருத்துக்களுக்காகவும் வாதாட கூடிய உணர்வு, ஆற்றல் படைத்தவர். திமுகவில் உள்ள மகளிர் அணி மற்றும் பல்வேறு அணியினர், எத்தகைய பணியை ஆற்றுகிறார்களோ, குஷ்புவும் அத்தகைய பணிகளை ஆற்றுவார்.


இது நான் சொல்லலைங்க, தமிழக முதல்வர்..தமிழின தலைவர், தமிழ் பண்பாட்டு காவலர் கலைஞர் தனது கர கர குரலில் சொன்னது...


ஆளும் கட்சியால் குஷ்பு நிர்பந்திக்கப்பட்டாரா?

அப்படிப்பட்ட கேவலமான முறையை நாங்கள் கையாள்வதில்லை. அவரும் அந்த முறையை பின்பற்ற கூடியவர் அல்ல. இவ்வாறு கருணாநிதி
கூறினார்.NO COMMENTS...

------------------------------------------------------------------------------

இப்போ கொஞ்சம் சீரியசா பேசுவோம்...

பிளஸ் 2 ரிசல்ட் வந்திடுச்சு, உங்க வீட்ல இந்த வயசு பசங்க இருந்தா, உடனே கழுத கெட்ட குட்டிச் சுவர் ங்கற மாதிரி நேர இன்ஜினியரிங், டாக்டர் ன்னு போய்டாதீங்க...எல்லாரும் டாக்டர் ஆயிட்ட யாருக்கு ஊசி போடுவீங்க...

இல்ல சாப்ட்வேர், போதுங்க சாப்ட்வேர் ஏற்க்கனவே நாறிப் போய் கிடக்கு....

Nano Technology ன்னு ஒரு field இருக்கு...இனி வரும் காலங்களில் அதற்க்கு நல்ல எதிர்காலம் இருப்பதை நான் நம்புறேன் ...நெறைய பேர் இப்போ அதப் பத்தி research பண்றாங்க, அது நல்ல field ன்னு refer பண்றாங்க...அதையும் கொஞ்சம் பாருங்க...இது மாதிரி இப்போ develop ஆகுற field ல உங்க பசங்க படிச்சா அவன் சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வருவான்...

சிட்டி ல படிக்கிற பசங்களுக்கு நெறைய உலக விஷயம் ஸ்கூல் படிக்கும் போதே தெரியுது...ஆனா எங்கள மாதிரி டவுன் பசங்களுக்கு அப்பா friend சொல்லி, தெருப்பையன் சொல்லி, ஸ்கூல் வாத்தியார் சொல்லி தான் கொஞ்ச கொஞ்சமா தெரியுது...அவங்களும் மிஞ்சிப் போன சாப்ட்வேர், இன்ஜினியரிங் தவிர வேற ஏதும் புதுசா சொல்ல மாட்டாங்க...

கொஞ்சம் நெட் ல தேடித் பாருங்க..bio technolgy, Nano Technology, petrochemical ன்னு நெறைய புது விஷயங்கள், இனி வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும்...தொலை நோக்கு பார்வையோட சேர்த்து விடுங்க....நீங்க அப்டியே mechanical அல்லது civil சேத்து விட்டாலும் ஒன்னு ரெண்டு பேரு தான் அதே field ல போவான்..மத்தவன் எல்லாம் BPO, software testing, sales ன்னு சம்பந்தமே இல்ல போவான்...

எது படிச்சாலும் Spoken English இப்பவே படிக்க சொல்லுங்க..நாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு வேண்டாம்...அதோடு கொஞ்சம் extra curricular activities like sports, any type of outdoor indoor sports இது அவர்களின் உடல் நலத்துக்கு மிகவும் உதவும்...

இந்த காலத்துல 25 வயசுல தொப்ப விழுந்திருது...காரணம் ஸ்கூல் ல விளையாடினதூட சரி அடுத்து உடம்ப வளச்சு வேல பாக்குறதே கிடையாது..படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் உக்காந்த இடத்தில வேல...எழுந்து நடமாட கூட நேரம் கிடையாது...

இது எங்கள் சொந்த அனுபவம்..எனக்கு ஒன்னும் அப்டி வயசாயிடல 26 வயசு தான் ஆகுது..ஆனா நாங்கள் சந்திச்ச பிரச்சனை அவர்களுக்கு வேண்டாம்...

Spoken English, Sports, Exercise Must.....

உங்கள் பிள்ளை வாழ்க்கை உங்கள் கையில்...மறந்திராதீங்க!

இது உங்களால் தான் சாத்தியமாகும்!!!!சங்கங்கள் தொல்ல தாங்க முடியல!!!! கைப்புள்ளைய வெளுக்கணும்

சங்கங்கள் தொல்ல தாங்க முடியல!!!! கைப்புள்ளைய வெளுக்கணும்...இதுக்கெல்லாம் காரணம் அவர் தான்..பாருங்க எத்தன சங்கம்ன்னு


ஜன்கிலா இருந்தாலும் சிங்கிளா போவோர் சங்கம்


பிட் அடிச்சும் பைலாவோர் சங்கம்


வெத்தா இருந்தாலும் கெத்தா இருப்போர் சங்கம்

கடலை போடாத காளையர் சங்கம்


சைட் அடிச்சும் சிக்னல் கிடைக்காதோர் சங்கம்


கிடச்சத வச்சிக்கிட்டு வாழுவோர் சங்கம்


பாஸ்ட்டா வந்தாலும் லாஸ்ட்டா வருவோர் சங்கம்


வாசல்ல உக்காந்து வறுத்த கடலை தின்போர் சங்கம்


கொல்லைல உக்காந்து கொய்யாக்கா தின்போர் சங்கம்


நன்கு நங்குன்னு அடி வாங்கினாலும் நெஞ்ச நிமித்தி நடப்போர் சங்கம்


அடி வாங்கியும் அழாதோர் சங்கம்


புல் அடிச்சிட்டு புத்தி சொல்வோர் சங்கம்


தண்ணி போட்டு தள்ளாடினாலும் தடுக்கி விழாதோர் சங்கம்


பனியன் போட்ட சனியன் சங்கம்


வெட்டியா இருக்க யோசிப்போர் சங்கம்


வேலைல இருந்தும் வெட்டியா இருப்போர் சங்கம்


கூட்டதில குரல் குடுப்போர் சங்கம்


ஆபீஸ் நேரத்தில ஆபீஸ் வேலைய தவிர மத்த எல்லா வேலையும் செய்வோர் சங்கம்


அடி வாங்கிட்டு அழாமல் இருப்போர் சங்கம்


மிட் நைட்டில் படித்தும் மண்டையில் ஏராதோர் சங்கம்


alaaraththa ஆப் பண்ணிட்டு தூங்குவோர்


சங்கம்ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...போதும் இப்போ உங்களுக்கு கொஞ்சம் கவித சொல்ல போறேன்.... ரெடியா?


காதல் என்பது காக்க எச்சம் மாதிரி! யார் மேல வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் விழலாம்!! அத துடச்சிட்டு போறதும், தொட்டு தொட்டு பாக்குறதும்... அவன் அவன் இஷ்டம்....உங்களுக்காக ஒரு
information...


Data க்கும் information க்கும் என்ன வித்தியாசம்?

362436 - இது Data

36-24-36 - இது information


அடுத்து ஜோக்ஸ்! தயவு செஞ்சு சிரிங்க...அனுஷ்காவ பார்த்தது போதும்...
தலைவி எங்கயும் போக மாட்டாங்க...கீழ போய் படிங்கையா!!!கணவன்: அடியே! இவன் தான் உன் கள்ள புருசனா?

மனைவி: தண்ணி அடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி உளறாம பொய் படுங்க
ஜோசியர்: உங்க காதலுக்கு எந்த எதிர்ப்பும் வராது..தைரியமா போங்க

பையன்: இத உங்க பொண்ணு கிட்ட சொல்லுங்க...ரொம்பத்தான் பயப்பிடுறா
மனைவி: ஏங்க இப்டியே நான் சமைச்சு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?

கணவன்: என் LIC பணம் சீக்கிரம் கிடைக்கும்
மாணவன் பரிட்சையில் கோபமாக..

"சார் என்ன சார் இது? "

"கொஸ்டின் பேப்பர்"

"அப்போ இது இன்ன சார்?"

"டேய் ஆன்சர் பேப்பர் டா"

"என்ன கொடும சார் இது! கொஸ்டின் பேப்பர் ல கொஸ்டின் இருக்கு..ஆனா ஆன்சர் பேப்பர் ல ஆன்சர் இல்ல"


ஹி! ஹி!! ஹி!!! என்ன எழுதம்ன்னு தெரியாம ஏதேதோ எழுதி வச்சிருக்கேன்...நீங்க படிப்பீங்க அப்டிங்கிற நம்பிக்கைல....தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளம் -ஒரு பார்வை
இன்னைக்கு மெயில் மேல உள்ள மேட்டர் வந்தது...இனி என் பார்வையில் இதைப்பற்றி ஓர் அலசல்


தலைவருக்கு சம்பளம் கம்மி...தலைவர் தகுதிக்கு எல்லாம் ஒரு படத்துக்கு ஒரு ஊரை எழுதி கொடுக்கணும்

கமலுக்கு இது கொஞ்சம் ஓவர் தான்


கருப்பு MGR எவனும் மதிக்கலன்னு நெனைக்கேன்...managing director ஸ்பெல்லிங் கொஞ்சம் பாருங்க


இவனுக்கு எதுக்கு அம்புட்டு துட்டு...நியாயமா மகேஷ் பாபுக்கு தான் இவன் சம்பளத்த குடுக்கணும்..அவராப் பாத்து எதாவது குடுத்தா ஓகே

5
கோடி வரை இவனுக்கு குடுக்கணுமா...ஏன்டா இவனுக்கெல்லாம் இவ்ளோ குடுத்து கோடியோட மதிப்பே போச்சு...குடுக்கலன்னா அவுக அப்பாருக்கு கோவம் வந்து டான்ஸ் ஆடிக்கிட்டே கவித சொல்லுவாரு..அதுக்கு இவனுக்கு குடுத்திரலாம்

இவனுக்கே இவ்ளோ குடுக்கும் போது மத்தவங்களுக்கு ஓகே...


பிஞ்ச மூஞ்சி அசின்னுக்கு இது ரொம்ப டூ மச்..
நயன்தாரா
& த்ரிஷா சிம்ப்லி வேஸ்ட்...


தங்கத் தலைவி தமன்னாவுக்கும், அனுஷ்க்காவுக்கும் இவ்ளோ கம்மிய சம்பளம் குடுப்பதை எதிர்த்து நாளை மெரினா பீச்சில் ஒரு மணி நேரம் அடையாள உண்ணா விரதம் இருக்கப்படும்...இவ்ளோ கம்மிய குடுத்தா பாவம் புள்ள எப்டியா குடும்பத்த நடத்தும் இல்ல கேக்கேன்...இதை கண்டித்து சட்டசபையில் ஒரு வெட்டுத் தீர்மானம் கழக ஆட்சியின் சார்பில் கொண்டு வந்த நல்லா இருக்கும்...

தலைவிகளுக்கு சம்பள உயர்வு வாங்கி குடுத்தா அடுத்த தேர்தல்ல உங்களுக்கே ஓட்டுப் போடுறேன்..ஒரு ஏழை குடிமகனின் ஆசைய நெரவேத்துங்க....


ஐயோ பாவம் ஸ்ரேயா....ரகுமான், யுவன், ஹாரிஸ் இவங்களுக்கு வொர்த் தான்..இன்னும் கொஞ்சம் குடுத்தாலும் தமிழன் சந்தோசப்படுவான்

தமிழர்களே பெருமைப்படுங்கள் உங்களால் தான் இது சாத்தியமாயிற்று....

வாழ்க தமிழன் ! வாழ்க தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்!!