1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
முதல்ல பருப்பு அப்புறம் Phantom Mohan
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
மோகன் என் பேரு. முதல்வன் படம் பார்த்ததில இருந்து சும்மா சும்மா நீ என்ன பெரிய பருப்பான்னு கேட்டுகிட்டே இருப்பேன். அதனால அந்த பேருல ஆரம்பிச்சேன் (நம்மள எவனும் நீ என்ன பெரிய பருப்பான்னு கேக்க முடியாதில்ல.) அப்புறம் அது எனக்கு புடிக்கலை, Rolls Royce Phantom கார் என்னுடைய கனவு, ஏன்னா அந்த காருல மட்டும் தான் குடை வைக்கிறதுக்கு ஒரு தனி இடம் குடுத்திருப்பாங்க. குடை எப்பவோ வாங்கி வச்சிட்டேன், கார் சீக்கிரம் வாங்கணும்.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?
அரபு நாட்டுக்கு
சில பதிவுகளை பார்த்து மெய்மறந்து நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள். நான் சில பல பதிவர்களைப் பார்த்து காண்டாகி நானே ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டேன். சும்மா கம்மென்ட் போடலாமேன்னு ஆரம்பிச்சது, அப்பப்போ எதாவது மொக்கையா ஒரு உபயோகமும் இல்லாத விசயங்களை மட்டுமே எழுதுவேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒரு மண்ணும் பண்ணலை. முதல் பதிவுக்கு அப்போது எனக்கு தெரிந்த சில பதிவுகளில் போய்
நான் புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன், வந்து வாழ்த்துங்கள் என்று போட்டேன்.
அதோடு சரி இன்று வரை வேற ஒன்னும் பண்ணலை. எனது நண்பர்களுக்கோ, எனது குடும்பத்துக்கோ நான் கிறுக்குவது தெரியாது, தெரிஞ்சது நான் செத்தேன்!
,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
NEVER !!! போன பதிலில் சொன்ன மாதிரி யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்த விஷயத்தை பொதுவில் கூறுவது அவ்வளவாக பிடிக்கவில்லை. மற்றொரு காரணம் நான் யார் என்று தெரிந்தால், வேண்டாம்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இங்க துணைக்கு ஆள் இல்லை, அதான் நேரத்தை செலவிடுகிறேன். இதில் சம்பாதிச்சு தான் கஞ்சி குடிக்கணும் என்ற நிலை இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு வராது!
வலையுலகில் என் மனநிலை உள்ள நண்பர்களுடன்
மத்தபடி
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை சில பேரிடம் இருக்கிறது. பட்டாபட்டி, ஹாலிவுட் பாலா சட்டுன்னு நினைவுக்கு வந்தவர்கள். இவர்கள் பதிவை விட கம்மேன்ட்டுக்கு பதில் சொல்லும் விதம் பொறாமையாய் இருக்கும்.
கோபம் பல பேரிடம் இருக்கிறது. தன்னைப் பத்தி பெருமையா எழுதிரவர்கள் இங்கு உண்டு, தான் தான் பெரிய பருப்பு மாதிரி எழுதுவானுங்க, ஏகப்பட்ட நொள்ளை சொல்லுவார்கள், அதற்க்கு ஒரு கூட்டம் ஆமாம் சாமி போடும். அவர்களை எனக்கு பிடிக்காது.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் கமென்ட் வால்பையன். முதல் follower ஜலீலா மேடம். நான் முதன் முதலில் தொடர்பு கொண்டது Dr. கந்தசாமி சார், நெறையா ஐடியா குடுத்தார். நான்தான் அத follow பண்ணலை.
இன்னும் யாரும் என்னை பாராட்டவில்லை என்பதை பெருங்கேவலத்துடன் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்
என்ன பத்தி உங்களுக்கு தெரியாது நான் ரொம்ப கோபக்காரன், மற்றும் பிரபல பதிவர்.
வலையுலகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லோரும் (பொழுது போக்குக்காக எழுதுபவர்கள் மட்டும், சம்பாதிக்க எழுதுபவர்கள் இன்னும் யாரும் இதை எழுதலை!) இதை எழுதி விட்டார்கள். ஆனால் கொஞ்சம் கூட மட்டு மருவாதி இல்லாம, பயம் இல்லாம என்னை யாரும் கூப்பிடலை, நீங்க கூப்பிட்டு தான் எழுதணும்ன்னு ஏதாவது விதி இருக்கா, அதான் என் கெத்தக் காட்ட நானே எழுதிருக்கேன். இதப் பார்த்தாவது யாராவது மறுபடியும் என்ன எழுதக் கூப்பிடுங்க. சந்தோசமா இன்னொருவாட்டி எழுதுறேன்.
இந்த தொடர்பதிவை நான் தொடர அழைப்பவர்கள்...என்னை மதிக்காதவர்களை.
