Pages

பதிவுலகில் நான்...


1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதல்ல பருப்பு அப்புறம் Phantom Mohan

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

மோகன் என் பேரு. முதல்வன் படம் பார்த்ததில இருந்து சும்மா சும்மா நீ என்ன பெரிய பருப்பான்னு கேட்டுகிட்டே இருப்பேன். அதனால அந்த பேருல ஆரம்பிச்சேன் (நம்மள எவனும் நீ என்ன பெரிய பருப்பான்னு கேக்க முடியாதில்ல.) அப்புறம் அது எனக்கு புடிக்கலை, Rolls Royce Phantom கார் என்னுடைய கனவு, ஏன்னா அந்த காருல மட்டும் தான் குடை வைக்கிறதுக்கு ஒரு தனி இடம் குடுத்திருப்பாங்க. குடை எப்பவோ வாங்கி வச்சிட்டேன், கார் சீக்கிரம் வாங்கணும்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அரபு நாட்டுக்கு
வந்தப்புறம், சென்னையில் நண்பர்களுடன் இருந்த மாதிரி சந்தோசமா சிரிச்சு பேச நண்பர்கள் இல்லை. அதனால தமிழில் உள்ள வெப்சைட் தேடி புடிச்சு படிப்பேன். அப்படி நான் ஒரு நாள் பார்த்தது நாஞ்சில் எக்ஸ்பிரஸ். ஒரே மூச்சில் அவருடைய அனைத்து பதிவும் படித்து ரசித்தேன். அப்புறம் அந்தப் பக்கம் மூலம் நெறைய பக்கங்களை தேடி பிடித்து ஆபீசில் சிரிச்சிக்கிட்டே இருப்பேன்.

சில பதிவுகளை பார்த்து மெய்மறந்து நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள். நான் சில பல பதிவர்களைப் பார்த்து காண்டாகி நானே ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டேன். சும்மா கம்மென்ட் போடலாமேன்னு ஆரம்பிச்சது, அப்பப்போ எதாவது மொக்கையா ஒரு உபயோகமும் இல்லாத விசயங்களை மட்டுமே எழுதுவேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒரு மண்ணும் பண்ணலை. முதல் பதிவுக்கு அப்போது எனக்கு தெரிந்த சில பதிவுகளில் போய்
நான் புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன், வந்து வாழ்த்துங்கள் என்று போட்டேன்.

அதோடு சரி இன்று வரை வேற ஒன்னும் பண்ணலை. எனது நண்பர்களுக்கோ, எனது குடும்பத்துக்கோ நான் கிறுக்குவது தெரியாது, தெரிஞ்சது நான் செத்தேன்!

,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

NEVER !!! போன பதிலில் சொன்ன மாதிரி யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்த விஷயத்தை பொதுவில் கூறுவது அவ்வளவாக பிடிக்கவில்லை. மற்றொரு காரணம் நான் யார் என்று தெரிந்தால், வேண்டாம்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இங்க துணைக்கு ஆள் இல்லை, அதான்
வலையுலகில் என் மனநிலை உள்ள நண்பர்களுடன்
நேரத்தை செலவிடுகிறேன்.
மத்தபடி
இதில் சம்பாதிச்சு தான் கஞ்சி குடிக்கணும் என்ற நிலை இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு வராது!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை சில பேரிடம் இருக்கிறது. பட்டாபட்டி, ஹாலிவுட் பாலா சட்டுன்னு நினைவுக்கு வந்தவர்கள். இவர்கள் பதிவை விட கம்மேன்ட்டுக்கு பதில் சொல்லும் விதம் பொறாமையாய் இருக்கும்.

கோபம் பல பேரிடம் இருக்கிறது. தன்னைப் பத்தி பெருமையா எழுதிரவர்கள் இங்கு உண்டு, தான் தான் பெரிய பருப்பு மாதிரி எழுதுவானுங்க, ஏகப்பட்ட நொள்ளை சொல்லுவார்கள், அதற்க்கு ஒரு கூட்டம் ஆமாம் சாமி போடும். அவர்களை எனக்கு பிடிக்காது.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமென்ட் வால்பையன். முதல் follower ஜலீலா மேடம். நான் முதன் முதலில் தொடர்பு கொண்டது Dr. கந்தசாமி சார், நெறையா ஐடியா குடுத்தார். நான்தான் அத follow பண்ணலை.

இன்னும் யாரும் என்னை பாராட்டவில்லை என்பதை பெருங்கேவலத்துடன் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

என்ன பத்தி உங்களுக்கு தெரியாது நான் ரொம்ப கோபக்காரன், மற்றும் பிரபல பதிவர்.

வலையுலகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லோரும் (பொழுது போக்குக்காக எழுதுபவர்கள் மட்டும், சம்பாதிக்க எழுதுபவர்கள் இன்னும் யாரும் இதை எழுதலை!) இதை எழுதி விட்டார்கள். ஆனால் கொஞ்சம் கூட மட்டு மருவாதி இல்லாம, பயம் இல்லாம என்னை யாரும் கூப்பிடலை, நீங்க கூப்பிட்டு தான் எழுதணும்ன்னு ஏதாவது விதி இருக்கா, அதான் என் கெத்தக் காட்ட நானே எழுதிருக்கேன். இதப் பார்த்தாவது யாராவது மறுபடியும் என்ன எழுதக் கூப்பிடுங்க. சந்தோசமா இன்னொருவாட்டி எழுதுறேன்.

இந்த தொடர்பதிவை நான் தொடர அழைப்பவர்கள்...என்னை மதிக்காதவர்களை.


37 comments:

Rajakanna (Software Engineer) said...

மிஸ்டர் பருப்பு சார், நேர்மையான சுய விமர்சனம்.

அருண் பிரசாத் said...

நான் பாராட்டுறேன் தோழா! நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க நான் படிக்கறேன்.

அருண் பிரசாத் said...

வலை ஜஸ்டு மிஸ்சு

Maduraimohan said...

நீங்க எழுதுங்க பாஸு நான் படிக்கிறேன் :)

Jey said...

”பருப்பு” என்ன அழகான கருத்துள்ள பேரு அத ஏன்யா மாத்துன, எனக்கு நீரு எப்பயும் பருப்புதான்ய்யா.

Jey said...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்///

உம்ம கடைசி ஆசை என்னானுதான் கேள்வி அதுக்கு என்ன உளறியிருக்கீரு..... கும்முறதுக்கு முன்னா எதாவது சொல்ரதா இருந்தா சொல்லுனு அர்த்தம்....

கக்கு - மாணிக்கம் said...

இந்த நேர்மை .....எனக்கு பிடிச்சது.
மிக எதார்த்தமான பிள்ளை.
கும்மி கொட்ட ஆள் இருக்கறப்போ எதுக்கைய்யா கவலை.
இங்கே ரொம்பவும் அலட்டிக்கொள்ளும் ஆட்களில் நம் கூட்டம்....கவனிக்க "நம் கூட்டம் "
தனி ரகம். carry on yaaaaar!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜெய்லானி said...

இருய்யா படிச்சுட்டு வரேன் . மகனே மாட்டினே இன்னைக்கு..!!!

Jey said...

//கோபம் பல பேரிடம் இருக்கிறது//

அடக் கோவக்காரனாய நீரு... சொல்லவே இல்லை..., ஜ்ய்லானி இந்த பீஸ கொஞ்சம் கவனி...ஒரு மாச லீவுல ரெஸ்ட் எடுத்துட்டு ஃபிரஸ்ஸா வந்திருக்கு ஆடு, அப்படியே அடிச்சி எனக்கு எப்படி சமைக்கத்தெரியும்மெ அப்படி சமைச்சி அடுத்த சமயல் குறிப்புல எழுதிரு...

DrPKandaswamyPhD said...

யோவ், பருப்பு, Phantom, நம்மளை மறக்காம நன்றியுடன் இருக்கும் நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க, உம் பதிவு, உலகம் உள்ள மட்டும் வாழ்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்.

விந்தைமனிதன் said...

பருப்பு சாம்பார் வைக்கிறது எப்புடி?!

நாஞ்சில் பிரதாப் said...

ரோஸ்ல் ராய்ஸ் குடை வைக்கிறதுக்காக வாங்குன முதல் மனுசன் நீருதாம்யா... புல்லரிக்குது...

உங்கள் சரித்திர புகழ் நிகழ்வான வலைபதிவின் ஆரம்பித்திற்கு நானும் ஒரு காரணமா???
நெஞ்சை நக்கிப்புட்டியே ராசா... நல்லாருடே....

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வாழ்த்துக்கள்.
///////////////////////////

இது டபுள் மீனிங்கா??? இதில ஏதும் உள்குத்து இருக்கா? ஒன்னும் புரியலையே? நம்ம பய புள்ளைக இந்த மாதிரி எழுத மாட்டானுங்களே???

Phantom Mohan said...

Rajakanna (Software Engineer) said...
மிஸ்டர் பருப்பு சார், நேர்மையான சுய விமர்சனம்.

August 7, 2010 7:18 PM
அருண் பிரசாத் said...
நான் பாராட்டுறேன் தோழா! நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க நான் படிக்கறேன்.

August 7, 2010 7:22 PM
அருண் பிரசாத் said...
வலை ஜஸ்டு மிஸ்சு

August 7, 2010 7:23 PM
Maduraimohan said...
நீங்க எழுதுங்க பாஸு நான் படிக்கிறேன் :)
///////////////////////////////

உசுப்பேத்திவுட்டு வேடிக்க பாக்கிறதுல அப்பிடி ஒரு சுகம், சிக்க மாட்டேண்டி...

Phantom Mohan said...

@ Jey, கக்கு மாணிக்கம், ஜெய்லானி

வெளங்காத கூட்டணில சேர்ந்து நாம நல்ல பதிவு எழுதிருவோமா என்ன??? எவன் தடுத்தாலும், எத்தனை பேர் காறித் துப்பினாலும் மொக்க போடுவது சத்தியம், புடிச்சா படிக்கட்டும் இல்லாட்டி போகட்டும்,.... லாஸ் அவங்களுக்கு மச்சி நமக்கு இல்ல.

(இந்த வீராப்பு எங்க கொண்டு போய் விடுமோ, முருகா....அரோகரா!)

Phantom Mohan said...

டாக்டர் சார் உங்கள மறப்பேனா?

நாஞ்சில் பிரதாப் : உன் புண்ணியத்தில தான்யா இந்த மொக்க பதிவர்கள் பழக்கம் கிடைச்சது, அதுக்காகவே உனக்கு ஒரு நன்றி. Rolls Royce Phantom கூடிய சீக்கிரம் வாங்கி, டாப்ப கழட்டி மண்ணு லோடு அடிக்கிறோம்!

சௌந்தர் said...

எனது நண்பர்களுக்கோ, எனது குடும்பத்துக்கோ நான் கிறுக்குவது தெரியாது, தெரிஞ்சது நான் செத்தேன்//

நல்லவேளை இதை உங்க வீட்டில் படிக்கலை....

அடுத்து நான் தொடர் பதிவு எழுதுறேன் கவலை படாதீங்க நான் கூப்பிடுறேன் அது வேற தொடர்...

சௌந்தர் said...

நம்ம நாஞ்சில்லை பார்த்து கெட்டு போன பையனா நீ...

பட்டாபட்டி.. said...

கார் வாங்கினதும் சொல்லியனுப்பு.. கண்டிப்பா அந்த குடையோட ஒரு ரவுண்ட்(?) அடைக்கனுமுனு ஆசையா இருக்குயா !!!!
ஹி..ஹி

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...
கார் வாங்கினதும் சொல்லியனுப்பு.. கண்டிப்பா அந்த குடையோட ஒரு ரவுண்ட்(?) அடைக்கனுமுனு ஆசையா இருக்குயா !!!!
ஹி..ஹி
///////////////////////

வாய்யா என் செல்லக்குட்டி, நல்லா இருக்கியா? நான் Rolls Royce வாங்கி மண் லோடு அடிக்கப்போறேன், உனக்கு ஒரு மண் லோடு வேணும்னா இலவசமாக குடுக்குறேன்.

ஐந்திணை said...

உங்களை மட்டுமா கூப்பிடல? அட விடுங்க.

Phantom Mohan said...

ஐந்திணை said...
உங்களை மட்டுமா கூப்பிடல? அட விடுங்க.
/////////////////////////////

பாஸ் இவங்க கூப்பிடலைன்னு எவன் வருத்தப்பட்டான். அப்படி வருத்தப்பட்டிருந்தா இத எழுதிருக்கவே மாட்டேன். இதெல்லாம் சும்மா, நமக்கு பொழுது போகுறதுக்கு என்னத்தையாவது எழுதணும்ன்னு எழுதுறதுதான்.

வெத்து சீனுக்கு தான் பாஸ் இந்த பதிவு, கண்டிப்பாக எதையும் சாதிப்பதற்கு அல்ல...!

அடிக்கடி வாங்க இந்த மாதிரி ஒன்னத்துக்கும் உபயோகம் இல்லாத நெறையா விஷயம் எழுதுவேன். மனசுல பட்டத சொல்லிட்டுப் போங்க.

அஹமது இர்ஷாத் said...

தலைப்பில் வார்த்தைகளில் கவனம் வேண்டும் நண்பா..

Phantom Mohan said...

அஹமது இர்ஷாத் said...
தலைப்பில் வார்த்தைகளில் கவனம் வேண்டும் நண்பா..
///////////////////////

என்னை "யாரும்" கூப்பிடலைன்னு போட்டிருக்கணும் அதானே?....

"மதியாதார் தலைவாசல் மிதியாதே".... :) DON'T WORRY...BE HAPPY

அடுத்த தடவை மரியாதையா திட்டுறேன் :)

செந்தழல் ரவி said...

சார் மதிக்காதவங்க எழுதலாம் மிதிக்காதவங்க ?

பதிவு ? சரவெடி. !

Phantom Mohan said...

செந்தழல் ரவி said...
சார் மதிக்காதவங்க எழுதலாம் மிதிக்காதவங்க ?

பதிவு ? சரவெடி. !
/////////////////////////////////////

நன்றி தல... உங்களோட நிறைய பதிவு படிச்சிருக்கேன், இதுவரைக்கும் கம்மென்ட் போட்டதில்ல...ஏனோ தெரியல! :)

V.Radhakrishnan said...

ஹா ஹா. அசத்தல்

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே.

நிறைய எழுதுங்கள்.

பட்டாபட்டி.. said...

செந்தழல் ரவி said...

சார் மதிக்காதவங்க எழுதலாம் மிதிக்காதவங்க ?

பதிவு ? சரவெடி. !
//

செந்தழல் ரவி வாழ்க...

பட்டாபட்டி.. said...

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...
//

அ..ஆ..இ..ஈ..உ..ஊ..எ..ஏ..ஐ...ஒ..ஓ..உவ்வே..அக்கூ....

இப்பத்தான் பாதி பாரம் இறங்கிச்சு... மீதிக்கி அப்பால வரேன்

கண்ணா.. said...

என்னாது நாஞ்சிலு ப்ளாக்கை படிச்சுத்தான் ப்ளாக் ஆரம்பிக்கணும்னு ஐடியாக்கே வந்தியா...

அது சரி... இவ்ளோ கேவலமா ஓருத்தன் எழுதிட்டு இருக்கானே..... இவனுக்கு நாமளே எவ்வளவோ தேவலாம்ணுதான..... புரிஞ்சுது

:))

மங்குனி அமைசர் said...

Rolls Royce Phantom கார் என்னுடைய கனவு, ///

யோவ் கார் வாங்கிய உண்டனே எனக்கு ஒரு ரவுண்டு குடுய்யா

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

நான் பாராட்டுறேன் தோழா! நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க நான் படிக்கறேன்.
///

என்ன ஒரு நம்பிக்கை

மங்குனி அமைசர் said...

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...
//

அ..ஆ..இ..ஈ..உ..ஊ..எ..ஏ..ஐ...ஒ..ஓ..உவ்வே..அக்கூ....

இப்பத்தான் பாதி பாரம் இறங்கிச்சு... மீதிக்கி அப்பால வரேன்///

A ,B,C,D E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z

அப்பாடா நானும் என் கடமைய செய்துட்டேன்

பாலா said...

தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்...ஹி ஹி...
நன்றி..
http://balapakkangal.blogspot.com/2010/08/blog-post_16.html

பாலா said...

இவ்வளவு லேட்டா, அதுவும் நாம எழுதுனதுக்கப்புறம் கூப்பிட்டிருக்கானே அப்படின்னு நினைக்காதீங்க. வேற ஒண்ணுமில்ல. என்னையே லேட்டாதான் கூப்பிட்டாங்க.... ஹி ஹி...

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...