
ஆமாங்க ஒரு மாசம் நிபந்தனை ஜாமீனில் thailand (அதாங்க தாய் மண்) செல்கிறேன். ஊர்ல எங்க வீட்டில இன்டர்நெட் கிடையாது, இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி அவங்க பசங்க கூட சந்தோசமா பொழுதை கழிக்க, நண்பர்களுடன் ஊர் சுற்றவே ஒரு மாசம் பத்தாது.
இதனால் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு மாத காலம் எங்கும் கம்மென்ட் இட இயலாது, கும்மி அடிக்க இயலாது, மெயில் செக் பண்ண முடியாது!!
"அப்போ பதிவு"
உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலை. நான் பதிவு போட்டா மட்டும்???????
எனவே பதிவும் போட இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். அப்பபோ என் கடை பக்கம் வந்து அதுக்கு உயிர்குடுங்க, இல்லைன்னா ஒரு மாசம் யாருமே பார்க்காத கடைன்னு சீல் வச்சிருவானுங்க. அதனால, உங்கள நம்பித்தான் கடைய விட்டுட்டு போறேன், பத்திரமா பாத்துக்கோங்க!
தமிழ் புத்தாண்டு அன்று எழுத ஆரம்பித்தேன் (கலைஞர் என்ன, எவன் சொன்னாலும் நமக்கு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 தான்) இதுவரை 26 பதிவுகள் எழுதியுள்ளேன். அதில ஒன்னு ரெண்டு உங்களுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி வோட்டு போட்டு தமிளிஷ் முதல் பக்கம் வரவைத்தீர்கள், நன்றி!
இது வரை என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் 48 பேர்! இன்னும் நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளனர், அவர்கள் இன்னும் என்னை தன் நண்பனாக ஏற்க்கொள்ளவில்லையே தவிர எனக்கு பதில் சொல்கிறார்கள், எனக்கு ஊக்கமளிக்கிறார்கள், என்னை கிண்டல் செய்கிறார்கள், என்னை திட்டுகிறார்கள். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! (முக்கா முக்கா மூணு வாட்டி சொல்லியாச்சு)

வழக்கமா எல்லாரும் நூறு, இருநூறு பதிவுக்குத்தான் இந்த மாதிரி நன்றி சொல்லுவார்கள், எனக்கு இன்னைக்கு சொல்லனும்ன்னு தோணியது, சொல்லிட்டேன்.
அனைவருக்கும் நன்றி! அப்பபோ மெயில் செக் பண்ணுவேன், அப்போ உங்கள் அனைவருக்கும் கம்மென்ட் போடுகிறேன்!
அடுத்த மாதம் சந்திப்போம்! எங்க எல்லோரும் டாட்டா காட்டுங்க பார்ப்போம்! நல்லா சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க,
டாட்டா! டாட்டா!
பின்குறிப்பு:
எனக்கு புடிக்காத பதிவா இந்தப் பதிவு ஆயிடுமோன்னு பயமா இருக்கு, ரொம்ப நல்லவன் மாதிரி பதிவு எழுதிருக்கேன்.
பெண்கள், குழந்தைகள், இளகிய மனம் படைத்தோர் அப்பிடியே சிரிச்சிக்கிட்டே டாட்டா காட்டிட்டு போய்டுங்க, அதான் உங்களுக்கு நல்லது. இதுக்கு மேல படிக்காதீங்க, அப்புறம் மோகன் ரொம்ப கெட்டவன், மோசமானவன்னு சொல்லக் கூடாது!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஜெய்லானி என் மேல் கடுங்கோபத்தில் உள்ளார், என் கடந்த பதிவில் அனுஷ்கா படம் இல்லை என்று, அன்னாரின் வேண்டுகோளை ஏற்று, யோவ் ஜெய்லானி இந்த அனுஷ்கா படம் உன் ஒருத்தனுக்காக மட்டும்....


போதுமா சந்தோசமா!
அடுத்து இது என் சாய்ஸ், தமன்னா போட்டோ மட்டும் பார்த்தது போதும்...
தமன்னாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தம் திருத்தொண்டு பற்றிய ஒரு வீடியோஉங்களுக்காக!
தமன்னா வரலாறு 1:
தமன்னா வரலாறு 2:
மறுபடியும் எல்லாரும் ஒரு தடவை டாட்டா காட்டுங்க!
Take Care,
Cheers!

30 comments:
தமிழ்நாடு உருப்டாப்ள தான் விளங்கிடும்
ok buddy have a wonderful vacation
மோகன் - எஸ்கேப் கிரேட் எஸ்கேப் ஒரு மாசம் போதுமா? ஹீஹீ சும்மா, Have a safe and pleasant trip!
போகும்போதும் மொக்கையைப்போட்டுட்டு போறாம்யா
போய்ட்டு வாய்யா ராசா...பெரிய கும்பிடு...
have a wonderful vacation.
டாட்டா............
Have a great vacation! Enjoy.....!!!
Enjoy well with your family and friends.Have a exuberant vacation friend. :)
// அப்பபோ என் கடை பக்கம் வந்து அதுக்கு உயிர்குடுங்க,//
மாப்பி கமெண்ட் மாட்ரேஷனை எடுத்து விட்டு போகவும் ..
//ஜெய்லானி என் மேல் கடுங்கோபத்தில் உள்ளார், என் கடந்த பதிவில் அனுஷ்கா படம் இல்லை என்று,//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//அன்னாரின் வேண்டுகோளை ஏற்று, யோவ் ஜெய்லானி இந்த அனுஷ்கா படம் உன் ஒருத்தனுக்காக மட்டும்.//
இது நல்ல பிள்ளைக்கு அழகு.. இல்லாட்டி பிளாக்கையே ஹேக் பன்னிடுவோமுல்ல..
சந்தோஷமாக , இனிமையாக , குதுகலத்துடன் விடுமுறையை கழித்து விட்டு வர வாழ்த்துக்கள்...!!
சீக்கிரம் வா பருப்பு, நம்ம மீட் பன்னலாம். வந்ததும் கால் பன்னு.
Thanks a bunch uddy-nnu சொல்ற உங்க போட்டோ சூப்பர்
பரவாயில்லை இத்தனை பேரு வாழ்த்திருக்கீங்க, மிக்க நன்றி!
@முத்து
தமிழ்நாட்ட கெடுக்க ஒரு கூட்டமே இருக்கு, நான் தனி ஆளா என்ன பண்ணப் போறேன்.
@software Engineer
ஒரேயடியா அங்க இருக்கலாம், சின்ன வயசில இருந்தே ஒரு வெறி பாஸ், வெளிநாட்டுல வேல பார்க்கனும்ன்னு, வேற ஒன்னும் இல்ல.
@நாஞ்சில் பிரதாப்
பாருங்க மக்களே இவர் தான் எனக்கு பதிவுலகத்த அறிமுகம் பண்ணிய புண்ணியவான். அதெப்படி ஆசானே, மொக்கை நமது குலத்தொழில் அன்றோ!
@ரஞ்சித்
டாட்டா..இவர் தான்யா பெரிய மனுஷன், என் சொல்ல மதிச்சு டாட்டா காட்டின ஒரே ஜீவன், நன்றி நண்பா.
@சித்ரா
நன்றி மேடம், உங்களுக்கு எப்போ விடுமுறை? திருநெல்வேலி அல்வா சாப்பிடும் போது உங்க பங்குக்கு ஒரு ரெண்டு கிலோ வாங்கிடுறேன்.
@illuminati
நன்றி நண்பா, வந்து கும்மில கலந்துக்கிறேன்.
@ஜெய்லானி
வாய்யா, உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன் பார்த்தியா, comment moderation எப்பவோ தூக்கி விட்டுட்டேன். உங்களுக்கு எப்போ விடுமுறை? அனுஷ்காவ கேட்டதா சொல்றேன், சரியா.
@jey
கண்டிப்பா மூணவது வாரம் மீட் பண்ணலாம், பார்ட்டி ல ஒரு சின்ன மாத்தரம், venue அதேதான் date மாறும், நான் கால் பண்றேன்.
@ரமேஷ்
வாங்க போலீஸ், அது சின்ன வயசில எடுத்தது...எப்போ இன்னும் டேர்ரர்ர்ரா இருப்பேன். நீங்க சென்னை தானே, மீட் பண்ணுவோம் பாஸ்.
அப்பாடி கத்தார் தப்பிச்சிருச்சு..
சந்தோசமா போயிட்டு வா மாப்பி, நமக்கு அடுத்த வாரம், சென்னைல சந்திப்போம்!
///ஜெய்லானி said...
//ஜெய்லானி என் மேல் கடுங்கோபத்தில் உள்ளார், என் கடந்த பதிவில் அனுஷ்கா படம் இல்லை என்று,//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//அன்னாரின் வேண்டுகோளை ஏற்று, யோவ் ஜெய்லானி இந்த அனுஷ்கா படம் உன் ஒருத்தனுக்காக மட்டும்.//
இது நல்ல பிள்ளைக்கு அழகு.. இல்லாட்டி பிளாக்கையே ஹேக் பன்னிடுவோமுல்ல..///
அப்போ இன்னும் பன்ணலையா? கடைல ஒரு மாசம் ஆள் இருக்காதாம், பாத்துக்கிடுங்க ஆமாம்!
சகா பயணம் இனிதே அமைய வாழ்துக்கள்..
@அஹ்மத் இர்ஷாத்
ஆகஸ்ட் ல வந்து கத்தாரை கலக்குவோம்! VIP ஆகிட்டீங்க வாழ்த்துக்கள் பாஸ்!
@ப.கு.ராமசாமி
நன்றி நண்பரே. யோவ் உன்னோட இந்திய நம்பர் மெயில் பண்ணு, மூணாவது வாரம் ஒரு பார்ட்டி இருக்கு! ஹோட்டல் கிரீன் பார்க் ல மீட் பண்ணுவோம்.
@ponkarthik
நன்றி நண்பா. விரைவில் சந்திப்போம்.
ஏழு வோட்டு புண்ணியவான்களுக்கு:
இதுக்கும் ஒட்டு போட்டுருக்கீங்க பார்த்தீங்களா, உங்க கடமை உணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குது.
ஐம்பதாவதாக யார் என்னை நண்பனாக ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
சனிக்கிழமை..சனிக்கிழமை.. நீராடனும்..
வெயில்ல சுற்றக்கூடாது..
தலைக்கு எண்ணெய் வெக்க மறந்துடாதே..
கண்ட காலிப்பயலுகளுடன் சுத்தாதே..
விளக்கு வைக்கும்முன் வீடு போய் சேரு..
வேற ஏதாவது ஞாபகம் வந்தா தந்தி அடிக்கிறேன்..பை..பை..
@பட்டாப்பட்டி
தெய்வமே..........என் மேல இம்புட்டு அக்கறையா??????? உங்கள் தாயுள்ளம் கண்டு பேருவுவகை அடைகிறேன். நீங்க மட்டும் பொம்பளையா பொறந்திருந்தா நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்.
நன்றி தல.
///Phantom Mohan said...
@பட்டாப்பட்டி
தெய்வமே..........என் மேல இம்புட்டு அக்கறையா??????? உங்கள் தாயுள்ளம் கண்டு பேருவுவகை அடைகிறேன். நீங்க மட்டும் பொம்பளையா பொறந்திருந்தா நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்.///
இப்பக்கூட ஒண்ணும் பிரச்சனையில்ல பருப்பு, பாம்பேல அந்த ஆப்பரேசன் ரொம்ப சல்லிசா பண்றாங்களாம்!
யோவ் பருப்பு, எந்த ஊருன்னு சொல்லையா, வந்து கவனிச்சுக்கிறோம்.
DrPKandaswamyPhD said...
யோவ் பருப்பு, எந்த ஊருன்னு சொல்லையா, வந்து கவனிச்சுக்கிறோம்.
/////////////////////////////////////////////////////////////
சென்னையில் இறங்குகிறேன் டாக்டர் சார்! வீண் ஆடம்பரச் செலவுகள் வேண்டாம், அது எனக்கு பிடிக்காது. மக்களுக்கு இடையூறு இல்லாமல் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் :)
போயிட்டு வாங்க.
டாட்டா..
இது வரை என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் 48 பேர்!//
இப்ப 50...
நான் தான் 50 தாவது... வரலாறுல குறிச்சிவச்சிக்கங்க.
சி. கருணாகரசு said...
இது வரை என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் 48 பேர்!//
இப்ப 50...
நான் தான் 50 தாவது... வரலாறுல குறிச்சிவச்சிக்கங்க.
/////////////////////////////////////////////////////////
ஆஹா ஆஹா, வரலாறில் இடம் பிடித்து விட்டீர்கள் நண்பரே, அதை விட என் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்.
ரொம்ப ஓவரா இருக்கோ? இருந்தாலும் 50 வதாக வந்து என்னை நண்பனாக ஏற்றக்கொண்ட உங்கள் மனதைரியத்தைப் பாராட்டி,..... நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கோங்க :)
நன்றி நண்பரே.
//@ரமேஷ்
வாங்க போலீஸ், அது சின்ன வயசில எடுத்தது...எப்போ இன்னும் டேர்ரர்ர்ரா இருப்பேன். நீங்க சென்னை தானே, மீட் பண்ணுவோம் பாஸ்.//
kandippaa
/////Phantom Mohan said...
@பட்டாப்பட்டி
தெய்வமே..........என் மேல இம்புட்டு அக்கறையா??????? உங்கள் தாயுள்ளம் கண்டு பேருவுவகை அடைகிறேன். நீங்க மட்டும் பொம்பளையா பொறந்திருந்தா நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்.///
தாய்லாந்தில் இன்னும் சீப்பா ஆப்பரேஷன் நடக்குது. வரும் போது மெட்ராசிலிருந்து அங்க ஒரு ரவுண்டு போய்ட்டு வா.. ஐயம் வெய்டிங் ஃபார் யூ...
பருப்பு பேர மாத்தின மாதிரி வரும் போது மோகன்ன்னு இருக்கிற பேர ’மோகினி’ன்னு மாத்திடுறேன்...
//@ஜெய்லானி
வாய்யா, உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன் பார்த்தியா, comment moderation எப்பவோ தூக்கி விட்டுட்டேன். உங்களுக்கு எப்போ விடுமுறை? அனுஷ்காவ கேட்டதா சொல்றேன், சரியா.//
ஒரே அழுகாச்சியா வருது..அவ்வ்வ்வ்வ்வ்வ் .
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...