Pages

பிடிக்கலை! பிடிக்கலை!! பிடிக்கலை!!!


விடை இது தான்!

செம்மொழி பாடல்
முதல்ல இந்தப் பாட்டுல உள்ள நல்ல விசயங்களப் பத்தி என் கருத்தை நான் சொல்லிடுறேன்...

வழக்கம்
போல ARR பாட்டு முதல் முறை கேக்கும் பொது செம காண்டா இருக்கும், என்னடா எழவு பாட்டு இதுன்னு தோணும். அதே போல, ஆனா இது இன்னும்கொஞ்சம் எல்லை மீறிப்போய் சுவத்துல நங்கு நங்குன்னு முட்டுற அளவுக்கு, படு கேவலமா இருந்தது. என் நண்பன் எனக்கு போன் பண்ணி அழுகுறான், என்னடா பாட்டு இதுன்னு. அப்புறம் கேக்க கேக்க எப்பவும் போல ரஹ்மான் கலக்கிட்டாரு. அவர் பாட்டப் பத்தி நான் என்ன சொல்ல, அதான் உலகமே சொல்லுதே!

TMS, சுஷீலா இவங்க ரெண்டு பேரையும் ரொம்ப வருஷம் கழிச்சுபாக்குறேன், சுஷீலா அவங்களுக்கு குரல் அப்பிடியேஇருக்கு..."மாலைப்பொழுதின் மயக்கத்திலே" பாட்டுல என்ன குரலோ அதேகுரல். அவங்க சிரிச்சிக்கிட்டே பாடுறது இன்னும் அருமை. TMS க்கு கையெல்லாம் உதறுது, வயசு ரொம்ப இருக்கும்ல...ஆனா அதே கம்பீரம்.

பாட்டுல
03:19 இருந்து 03:56 வரைக்கும் சும்மா புல்லரிக்க வச்சிட்டாரு ARR. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சௌம்யா என்னமா ராகத்தோட பாடுறாங்க! இசையப்பத்தி ஒரு மண்ணும் தெரியாத எனக்கே, இதப் பாத்ததும் கத்தார்ல எங்கடா சங்கீதம் சொல்லிகுடுக்கிராங்கன்னு தேட வச்சிட்டாங்க! (இதே போல டூயட் படம் வந்தப்போ, sax கத்துக்கனும்ன்னு தெரு தெருவா அலைஞ்சேன், 3000 ரூபா பீஸ், sax நாம தான் கொண்டு வரணுமாம்! ஆசையைகுழி தோண்டி உப்புப்போட்டு புதைச்சிட்டேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சது வெளக்கமாறு பிய்ய பிய்ய அடிப்பாங்க)

இதுக்கப்புறம்
எங்க அண்ணாச்சி ஜாக்சன் துரையும் (Blaze), எலிசபெத் இளவரசியும் வந்து பாடுவாங்க. நல்லாத் தான் இருக்கும்.

அப்புறம்
ஸ்ரீநிவாஸ் சப்பாத்திக்கு மாவு பிசஞ்ச்சு கிட்டே பாடி, ஒரே நேரத்தில ரெண்டு வேலை செய்வது எப்படின்னு காமிப்பாரு. பாடும் போது என்னன்னா சேட்டையெல்லாம் பண்ணுறாங்க.

இந்த
மொத்தப் பாட்டுல, எனக்கு ரொம்ப புடிச்சது ஸ்ருதி! ங்கொய்யால தொண்டை நரம்பு எல்லாம் தெறிக்கிற மாதிரி, என்னமா ஹை பிட்ச்ல பாடுவாங்க. சும்மா சொல்லக்கூடாது சூப்பரப்பு!!

இது
ஜொள்ளு. எனக்கு ரொம்பப் புடிச்ச அஞ்சலி, சமந்தா ரெண்டு பேரையுமே காமிச்சிருக்கார். சந்தோசம்!

பினிஷிங்
டச்சப் பத்தி சொல்ல ஒரு மண்ணும் இல்ல!

*******************************************************************************

இப்போ எனக்கு தோணிய விஷயங்கள்,

இந்தப் பாட்டு தமிழ் மொழியப் பத்தி மட்டுமா, இல்ல மொத்த தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் பத்தியுமா? எனக்குத் தெரிஞ்சு ரெண்டுமே!

இதுல எங்க தமிழப் பத்தி, பாரம்பரியத்தைப் பத்தி, கலாச்சாரத்தப்பத்தி காட்டிருக்காங்க? என்னய்யா இது? கௌதம்முக்கு யார் மேல கோபம்? இந்தப் பாடலை எப்படி ஒத்துக்கொண்டார்கள்? இதுல எங்கய்யா தமிழனப்பத்தி சொல்லிருக்காங்க?

அட இந்தப் பாட்டுல தமிழ் முகத்தையே தேட வேண்டி இருக்குது! கௌதம் வழக்கம் போல A சென்டர் குறிவச்சு எடுத்திருக்கார்! பேருக்கு தாவணி, இமைக்கிற நேரத்துக்குள்ள வயல், ஒரு கிராமத்துப் பெருசு வந்திட்டு போறாரு!

கிரிக்கெட் விளையாடுறத காமிக்கிறான்! கபடி, ஜல்லிக்கட்டு, பல்லாங்குழி, தாயம், கொல கொலையா முந்திரிக்க, பச்சக் குதிர தாண்டுறது (எங்கூர்ல இது கால்தாண்டி), இன்னும் எவ்வளவோ இருக்கு இது எதுவுமே காட்டல. கிரிக்கெட் இப்போ ரொம்ப முக்கியம்! கிரிக்கெட் எந்த அளவு விளயாடுரோமோ அத விட அதிகமா மேல சொன்னத சந்தோசமா விளையாடுவோம். தமிழனோட விளையாட்டு அதுதான், ஆனா அது எதுவுமே காட்டல, அடப்போங்கடா!

கிராமம், வயக்காடு, மாட்டுவண்டி, திருவிழா, வில்லுப்பாட்டு, சிலம்பம், தமிழ் பெண்கள், பொங்கல், முளைப்பாரி, கும்மியடிக்கிறது , குலவை போடுறது, காவடி, தல வாழை இல்லை சாப்பாடு...இன்னும் எவ்வளவோ இருக்கு, இது எதுவுமே காட்டல. ஹை கிளாஸ் குடும்பத்த தான் காமிச்சிருக்கார். இது எதுவுமே இல்லாம அது என்ன கருமம் தமிழன் பாரம்பரியம், பண்பாடு!

பாரம்பரியத்தக் காட்டுய்யான்னா வடகம் சுடுறத காமிக்கிரைங்க, அதுவும் தமிழ் எழுத்துக்கள் வடிவில வடகம்! கொடுமை.

விஜயலட்சுமி நவநீதக்ருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, எனக்கு தெரிஞ்சு இவங்க ரெண்டு பேரு...இன்னும் ஏகப்பட்ட பேரு இருப்பாங்க...அவங்க யாருமே காட்டல, பாடல. இந்த நரேஷ் ஐய்யர், ங்கொய்யால அவன் ஸ்க்ரீன் வர்ற சீன கொஞ்சம் பாருங்க, எனக்கு வந்த கோபத்துக்கு மானிட்டர உடச்சிருப்பேன். கிறுக்கன் மாதிரி கையப் பொளந்துக்கிட்டு, கேவலமா சிரிச்சுக்கிட்டு..ராமா, ராமா!! அவன் மண்டையும், முடியும்...அப்டியே பிச்சு எடுத்திரலாம்ன்னு தோணிச்சு. (உயிரிலே என் உயிரிலே ன்னு உருகி உருகிப் பாடுனவான்னு நெனைக்கும் பொது அடங்கிப் போக வேண்டி இருக்கு)

Blaze & crew அவங்கள காட்டுறதுக்கு மேல சொன்னவங்கள காட்டிருக்கலாம். இல்ல எதுக்கு இவங்கள எல்லாம் காட்டனும்? எந்தப் பாடகரையும் காட்டாமலே சூப்பரா எடுத்திருக்கலாம். அப்போ, நாம நெனைக்கிற அத்தனையையும் படத்தில கொண்டு வந்திரலாம். கடைசி சீன் மட்டும் அவங்க ரொம்ப அடம் புடிச்சா, பாடுனவங்க எல்லாரையும் நிக்க வச்சு ஒரு சாட் எடுக்கலாம்.

பீச்சு கிட்ட நின்னு அவனுங்க எல்லாம் பாடுறத எவ்வளவு நேரம் காட்டுறாங்க! சுனாமி எங்கய்யா போச்சு? வேணும்ன்னும் போது வராது.

யோவ் கௌதம் என்ன நெனப்புல எடுத்த? maximum பாடுறவங்கள தான் காமிக்கிற. bharat bala ஏன் பாடுறவங்கள காமிச்சார்ணா, அத மொத்த இந்தியாவப் பத்தி, சோ, இந்தியாவில இருக்கிற முக்கியமான பாடகர்கள் எல்லாரையும் காமிச்சார். இது எதுக்கு இந்தப் பாட்டு, செம்மொழி தேசியப் பாட்டாம்...இல்ல, இது ரஹ்மான் crew மெம்பெர்ஸ் குரூப் பாட்டு, அப்பிடித் தான் எடுத்து வச்சிருக்க!

வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?

ஒரு நல்ல விசயத்த, அருமையாய் வர வேண்டிய ஒரு படத்தை...கெடுத்து கேவலப்படுத்தி, சிதச்சு, சின்னாபின்னமாக்கிட்டாங்க! அவ்ளோ தான்!

இன்னும் நெறையா திட்டனும்ன்னு தோணுது, பதிவுலக இறையாண்மை கருதி இத்தோட முடிச்சிக்கிறேன்!

கலைஞர்! என்ன சொல்ல, எப்பிடி சாமி இந்தப் படத்த ஒத்துக்க மனசு வந்தது? என்ன நெனப்புல இத சரின்னு சொன்னீங்க?

இது எத்தன பேருக்கு புடிச்சதோ தெரியாது. எனக்கு சுத்தமா, அறவே, கொஞ்சம் கூட பிடிக்கலை! பிடிக்கலை!! பிடிக்கலை!!!75 comments:

Ajith Bsc MBA said...

I too dislike this song, It is not expected from ARR&co....

Chitra said...

////வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?///

...... ஓ....... நீங்க அந்த ரூட்டுல வரீங்களோ...... ம்ம்ம்ம்......

ப்ரியமுடன்...வசந்த் said...

காட்சி அமைப்புகள் நன்றாக இருந்தது பாடல் மனதில் பதியவில்லை...

உங்க பெயரே வித்யாசமா இருக்கு பாஸ்...

பட்டாபட்டி.. said...

எல்லாவற்றுக்கும் காரணம் மனசு பிரதர்..

தமிழனாக பேசி..சிந்தித்தால் இப்படித்தான் தோணும்..
இதே...இத்தாலியனாக..இப்போது படி... எங்காவது பிரச்சனை தெரிகிறதா?

Anonymous said...

Makkal TV Vilambaram Kooda oralavu tamil kalacharaththai kaatturaanga!! aana tamil semmozhi maanattula kaanom.

நாஞ்சில் பிரதாப் said...

வீடியோவை ஏன் அப்லோட் பண்றீங்க...பாஸ்...
யுடியுப்ல கிடைக்கும் எம்பட் கோடை வெட்டி ஒட்டிட வேண்டியதுதானே...

//இன்னும் நெறையா திட்டனும்ன்னு தோணுது, பதிவுலக இறையாண்மை கருதி இத்தோட முடிச்சிக்கிறேன்!//

அதான் இப்படி நாறடிச்சிட்டீரே... இதுக்கும்லே என்னவோய் இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் கேக்கலை, இன்னும் பாக்கலை, பாத்துட்டு வந்து கும்மொவோம், பாஸ், நம்ம கடைல இன்னிக்கு புதுச் சரக்கு போட்டிருக்கேன், வந்து பாருங்கப்பு!

Phantom Mohan said...

நாஞ்சில் பிரதாப் said... வீடியோவை ஏன் அப்லோட் பண்றீங்க...பாஸ்...
யுடியுப்ல கிடைக்கும் எம்பட் கோடை வெட்டி ஒட்டிட வேண்டியதுதானே...
///////////////////////////////////////////////////////////////////

நன்றி அய்யா! நன்றி அய்யா! என் பதிவுக் கண்ணத் தொறந்து வச்சிட்டீங்க! இதுக்குத்தான் படிச்சவன் வேணும், படிச்சவன் படிச்சவந்தான்னு காட்டிட்டீங்களே நண்பா! மிக்க நன்றி! நேத்து புல்லா மண்ட காஞ்சி திரிஞ்சி கிட்டு இருந்தேன். அப்பப்போ டவுட் கேக்குறேன், சொல்லிக் குடுங்க பாஸ். சும்மாவா, பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பிரதாப், மறுபடியும் நன்றி!

Phantom Mohan said...

ப்ரியமுடன்...வசந்த் said...

காட்சி அமைப்புகள் நன்றாக இருந்தது பாடல் மனதில் பதியவில்லை...உங்க பெயரே வித்யாசமா இருக்கு பாஸ்...
///////////////////////////////////////////////////////////////////////////////////////

இதென்ன பாப் அல்பமா பாஸ். எனக்கு என்ன கடுப்புன்னா, இது செம்மொழி தேசியப் பாட்டாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!
வர்ற கோபத்துக்கு, விடுங்க பாஸ். இதெல்லாம் சாதாரணம். எதோ சொல்ல நெனச்சு சொல்லியாச்சு.

இன்னும் எனக்கு ஒரு நல்ல பெயர் சிக்கல பாஸ், எதோ வேகத்தில ஆரம்பிச்சது. போகப் போக தான் தெரியுது, நான் எவ்ளோ லூசுத் தனமா இருக்கேன்னு. உதாரணம் உங்க பேர்! நல்ல பேர் இந்த மாதிரி சிம்பிளா, அழகா, வச்சிருக்கலாம். பார்ப்போம் பாஸ் , எதாவது சிக்குனா மறுபடியும் பெயர் சூட்டு விழா தான்

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

எல்லாவற்றுக்கும் காரணம் மனசு பிரதர்..
தமிழனாக பேசி..சிந்தித்தால் இப்படித்தான் தோணும்..
இதே...இத்தாலியனாக..இப்போது படி... எங்காவது பிரச்சனை தெரிகிறதா?
/////////////////////////////////////////////////////////////////////////

ஒ அப்போ இது இத்தாலி வேலையா? தமிழ் னா அன்னைக்கு அவ்ளோ இஸ்டமா?

ரிஷபன்Meena said...

பெரியவருக்கு இது பெண்சிங்கம் மாதிரி பொழுது போக்கு.

ரஹ்மான் கெளதம் -க்கு இது தட்டமுடியாத அசைண்ட்மெண்ட் ஆக இருக்கலாம்.

இந்த மாநாடு பிசினஸே ஒரு விளம்பரத்துக்கு தான்.

தமிழ் தமிழன்னு உருகாதல, உடம்புக்கு ஆவாது.

ஆமா பருப்புன்னு நல்ல பெயர ஏன் மாத்தின ? ஆணாதிக்கத்துக்கும் இதுக்கும் இன்னா வித்தியாசம் ,எப்ப மன்னிப்புக் கேட்கப்போற.(அப்படீன்னு நாட்டாமை யாராவது கேட்டுடப் போறாங்கோ)

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

ILLUMINATI said...

தல,இவனுங்க வச்சுக்குற செம்மொழி மாநாட்டுக்கும்,ஒரிஜினல் தமிழ் மாநாட்டிர்க்குமே சம்பந்தம் கிடையாது.அப்புறம் எப்புடி,தமிழ்,தமிழர் பண்பாடோட சம்பந்தம் வரும்?ப்ரீ யா விடுங்க.இதை விடக் கேவலங்கள் மாநாட்டில் நடக்கும்.

ஜெய்லானி said...

//ஆமா பருப்புன்னு நல்ல பெயர ஏன் மாத்தின ? ஆணாதிக்கத்துக்கும் இதுக்கும் இன்னா வித்தியாசம் ,எப்ப மன்னிப்புக் கேட்கப்போற.(அப்படீன்னு நாட்டாமை யாராவது கேட்டுடப் போறாங்கோ)//

அதானே அத பாத்துதானே ஃபாலோயரா சேர்ந்ததே!!

அப்புறம் எனக்கும் பிடிக்கல...பிடிக்கல... அனுஷ்கா படம் போடாத இந்த பதிவு பிடிக்கல.....

ஜெய்லானி said...

//மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க..//

அதனாலதான் எழுதினேன் பின்ன திட்டக்கூடாது இப்பவே சொல்லிட்டேன் ஆமா..

ஜெய்லானி said...

இது ஒரு விளம்பரம் தன்னைதானே பாராட்ட வச்சது இதுல போய் குற்றம் குறை பாக்கக்கூடாது தல...

பிரியமுடன் பிரபு said...

ஸ்ருதி குரல்மட்ட்டும் தனியா தெரியுது
பாட்டு நல்லாத்தான் இருக்கு

Anonymous said...

இத பாத்துட்டு மு.க. நாலு நாள் தூங்கலையாமே..... இந்த கூத்த என்ன சொல்றது.

siragu said...

brother, idhula namma SPB sir kaanum. note it that.vilambaram banner perusulla

soundr said...

எந்த படைப்புமே இன்னும் நல்லா பண்ணீருக்கலாம்ன்னு யாருக்காவது தோணிக்கிட்டேதான் இருக்கும்.
ஆனா, இந்த படைப்பு பெரும்பான்மையான தமிழர்களுக்கு திருப்திகரமானதக்கூட இல்லாமல் போனது என்றே என்க்கும் தோன்றுகிறது.

//Makkal TV Vilambaram Kooda oralavu tamil kalacharaththai kaatturaanக!!//

நியாயம் தான்.‌

முத்து said...

நல்லா தானே இருந்த இப்போ என்னா ஆச்சு

ஏன் இந்த வில்லத்தனம்

ஒழுங்கா அனுஷ்கா படத்தை போட்டு ஜெய்லானி மனசையாவது குளிரவை

முத்து said...

The French Flag: the Tricolore. The Tricolore (tricolour, tricoleur, tricolor) is only visual symbol in France with the official sanction of article 2 of the French Constitution of 1958. Click here for more on the Tricolore

The National Anthem of France: the Marseillaise. La Marseillaise was composed in Strasbourg in 1792 and originally known as the Battle Hymn of the Army of the Rhine; it became the national anthem on 14 July 1795 and is sanctioned in article 2 of the French Constitution of 1958. Click here for more on the Marseillaise

The French National Motto. The motto of the French Republic is "Liberty, Equality, Fraternity". It is sanctioned in article 2 of the French Constitution of 1958. Click here for more on the French motto

The French National MottoThe French National Logo. A modern logo for the French Republic has been in use since 1999.
Click here for more on the French logo

The French Cypher: RF. France is officially referred to as the Republique Francaise, hence the use of the "RF" monogram. Click here for more on the "RF" cypher

The French National Holiday. The commemorates the storming of an old building, erroneously thought to hold political prisoners, on 14th July 1789. Click here for more on Bastille Day

Marianne, personified here by Brigit BardotThe Seal of the French RepublicThe Great Seal of France. The French State Seal used for sealing important state documents.
Click here for more on French State Seal

Marianne, Personification of France. The French revolution was symbolised by a variety of women, in various headgears, but the one that has become best known is Marianne. Click here for more on Marianne

Liberty. Another female figure used by French Revolutionaries was the Roman goddess Liberty or Liberté.
Click here for more on the goddess Liberty

The Phrygian Cap or Liberty Cap. One of the symbols associated with eighteenth and nineteenth century revolutions - and especially the French Revolution was the red Liberty Cap, an ancient Roman symbol of freedom.
Click here for more on the Liberty Cap

The French Cockerel. The Cockerel (US Rooster) has long been part of French national culture because the Latin words for cockerel and inhabitant of Gaul are similar.
Click here for more on the French Cockerel

[© Pierre Gay Click on the image to open Pierre Gay's excellent site (in English and French) on French symbols of state in a new window] The Arms of France. The old Kingdom of France used coats of arms and so, informally, does the Modern French Republic.
Click here for more on the arms of France

Fasces. The modern French Republic like many other republics mades extensive use of an ancient Roman symbol, the fasces.
Click here for more on the fasces symbol and its use

The French Panthéon. The monument which comes closest to being a symbol of the Republic is the Pantheon in Paris, built under Louis XV as the Sainte Geneviève Church.
Click here for more about the Panthéon

French stamp 2.30 Francs, 1990The Cross of Lorraine. The Second World War was fought by the Free French under the sign of the Cross of Lorraine , the emblem chosen by the Resistance to distinguish their flag from the tricolour which had been kept by the Vichy Government. The Cross of Lorraine is therefore used regularly on monuments commemorating the 1940-1945 period, from the greatest monuments to the humblest places marking the fighting in the maquis. Click here for more on the Cross of Lorraine

முத்து said...

எதுக்கு மேல ஒரு கமெண்ட் சம்மந்தம் இல்லாமல் போட்டேன்னு பார்கிறியா

அது ஒன்னும் இல்லை நீதானே
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க..போட்டு இருக்கே


மேலே உள்ளது போல் ஒரு நூறு கமெண்ட் போட்டால் என்னவாகும் உன் கதி

Phantom Mohan said...

அனைவருக்கும் வணக்கம், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கருத்திட்ட அனைவரும் என் மனநிலையில் தான் உள்ளீர்கள் என அறிந்து கொண்டேன்.

(எப்பா சாமி, எப்டிடா தூய தமிழ்ல எழுதுறீங்க, மூச்சு முட்டுது, இத எழுதுரதுக்குள்ள எனக்கு தாவு தீந்து போச்சு)

============================================

நெறைய பேரு உங்க கருத்த சொல்லிருக்கீங்க நன்றி. ஒன்னு புரியுது, இங்க எழுதின யாருக்குமே இந்தப் பாட்டு முழுசாப் புடிக்கல.

ஒரு பெரிய சந்தேகம், எண்ணப் பாத்தா உங்களுக்கு எல்லாம் லூசு மாதிரி இருக்கா????????? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்? இன்னைக்கு ஒரு பதிவர் செம்மொழி பாட்டு சூப்பர், அவங்க வெள்ளை சட்ட சூப்பர், ஹெலிகாப்டர் ல எடுத்தது மெய்சிலிருக்குது, அப்டி இப்டின்னு புகழ்ந்து தள்ளிருக்கார். (அது அவர் கருத்து, எல்லாருக்கும் தமன்னா புடிக்கும். தமன்னாவுக்கு எல்லாரையும் புடிக்குமா??)

அதுக்கும் போய் வோட்டும் போட்டு கம்மன்ட் ல பாட்டு பார்க்க கண் கொள்ளா காட்ச்சியா இருக்குன்னு வேற எழுதிருக்கீங்க.

நாங்க எதை நம்ப? உங்களுக்கு இந்த படம் புடிச்சிருக்கா? இல்லையா? என்னடா நடக்குது இங்க!

Phantom Mohan said...

முத்து said...

எதுக்கு மேல ஒரு கமெண்ட் சம்மந்தம் இல்லாமல் போட்டேன்னு பார்கிறியா,
அது ஒன்னும் இல்லை நீதானே
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க..போட்டு இருக்கே
மேலே உள்ளது போல் ஒரு நூறு கமெண்ட் போட்டால் என்னவாகும் உன் கதி

/////////////////////////////////////////////////////////////

எனக்கு ஒன்னும் ஆகாது, உனக்கு தான் கரண்ட்டு பில்லும், நெட் பில்லும் கூடும்.

Phantom Mohan said...

முத்து said...

நல்லா தானே இருந்த இப்போ என்னா ஆச்சு. ஏன் இந்த வில்லத்தனம்.
ஒழுங்கா அனுஷ்கா படத்தை போட்டு ஜெய்லானி மனசையாவது குளிரவை
///////////////////////////////////////

யோவ் நீ என் கேரக்டரையே புரிஞ்ச்சிக்கள, அஞ்சலி, சமந்தாவப் பத்தி தான் எழுத நெனச்சேன். அத மட்டும் எழுதினா செருப்பால அடிப்பிங்க, அதான் கூட ரெண்டு வரி சேர்த்து எழுதிருக்கேன்.

Phantom Mohan said...

siragu said...

brother, idhula namma SPB sir kaanum. note it that.vilambaram banner பெருசுள்ள
/////////////////////////////////////////////////////

SPB இப்போ ரொம்ப முக்கியம், தமன்னா கூட தான் இல்ல. எல்லாம் அந்த கெளதம் சேட்டை!

Phantom Mohan said...

ஜெய்லானி said...

//ஆமா பருப்புன்னு நல்ல பெயர ஏன் மாத்தின ? ஆணாதிக்கத்துக்கும் இதுக்கும் இன்னா வித்தியாசம் ,எப்ப மன்னிப்புக் கேட்கப்போற.(அப்படீன்னு நாட்டாமை யாராவது கேட்டுடப் போறாங்கோ)//
அதானே அத பாத்துதானே ஃபாலோயரா சேர்ந்ததே!!
அப்புறம் எனக்கும் பிடிக்கல...பிடிக்கல... அனுஷ்கா படம் போடாத இந்த பதிவு பிடிக்கல.....
//////////////////////////////////////////

பேர்ல என்னய்யா இருக்கு? அடுத்த வாரம் "தமன்னாதாசன்" ன்னு பேர மாத்தப்போறேன்! அப்போ என்ன பண்ணுவ?

நீ உன் ப்ளோக்ல நல்ல புள்ள மாதிரி நடிக்கிற, வெளிய வந்தா உன் அக்கப்போரு தாங்க முடியல.

Phantom Mohan said...

soundr said...

எந்த படைப்புமே இன்னும் நல்லா பண்ணீருக்கலாம்ன்னு யாருக்காவது தோணிக்கிட்டேதான் இருக்கும்.
ஆனா, இந்த படைப்பு பெரும்பான்மையான தமிழர்களுக்கு திருப்திகரமானதக்கூட இல்லாமல் போனது என்றே என்க்கும் தோன்றுகிறது.
////////////////////////////

அதே சூப்பரப்பு !

Phantom Mohan said...

பிரியமுடன் பிரபு said...

ஸ்ருதி குரல்மட்ட்டும் தனியா தெரியுது
பாட்டு நல்லாத்தான் இருக்கு
/////////////////////

பாட்டு நல்லாத் தான் இருக்கு, ஆனா படமாக்கியவிதம் படு மட்டம்.

Phantom Mohan said...

ILLUMINATI said...

தல,இவனுங்க வச்சுக்குற செம்மொழி மாநாட்டுக்கும்,ஒரிஜினல் தமிழ் மாநாட்டிர்க்குமே சம்பந்தம் கிடையாது.அப்புறம் எப்புடி,தமிழ்,தமிழர் பண்பாடோட சம்பந்தம் வரும்?ப்ரீ யா விடுங்க.இதை விடக் கேவலங்கள் மாநாட்டில் நடக்கும்.
///////////////////////////////

ரொம்ப சரி, இது ட்ரைலர் தான் மாநாட்டுல தான் மெயின் பிச்சரே இருக்கு!

Phantom Mohan said...

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
/////////////////////////////////

யாருயா நீ?? உன்ன நெறைய இடத்தில பாத்திருக்கேனே? உங்க பேருக்கு என்ன அர்த்தம் பாஸ்?

Phantom Mohan said...

ரிஷபன்Meena said...

ஆமா பருப்புன்னு நல்ல பெயர ஏன் மாத்தின ? ஆணாதிக்கத்துக்கும் இதுக்கும் இன்னா வித்தியாசம் ,எப்ப மன்னிப்புக் கேட்கப்போற.(அப்படீன்னு நாட்டாமை யாராவது கேட்டுடப் போறாங்கோ)
///////////////////////////////////////////////////////

நெறைய பேரு புடிக்கலைன்னு சொன்னாங்க. அதான்.

மன்னிப்பா?????????????? அவ்ளோ பெரிய பிரச்சனைக்கே நாலு வரில மன்னிப்பு கேட்ட்டாயங்க. இதுக்கு "ம" ன்னு சொன்ன போதும். மத்தபடி யாரு அது நாட்டாமை? அந்த முகரக்கட்டைய கொஞ்சம் பாப்போம்!

Phantom Mohan said...

Chitra said...

////வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?///

...... ஓ....... நீங்க அந்த ரூட்டுல வரீங்களோ...... ம்ம்ம்ம்......
////////////////////////////////////////////

நான் சொல்றது சரி தானே மேடம். உங்களுக்கு இது புடிச்சிருக்கா? பெருசு எப்டி ஒத்துக்கிச்சு ன்னு தான் தெரியல.

Phantom Mohan said...

Ajith Bsc MBA said...

I too dislike this song, It is not expected from ARR&co....
///////////////////

Exactly! விருப்பமில்லாம போட்ட பாட்டு மாதிரி தான் தெரியுது.

சரவணகுமரன் said...

உங்க பதிவு செம ஜாலியா இருந்தது. உங்களுக்கு பிடிக்காம போன காரணம் புரியுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிலிங். :-)

சரவணகுமரன் said...

கைவசம் நீங்க எவ்ளோ ஐடியா வெச்சிருக்கீங்க!!! உங்கள விட்டுட்டு கௌதம்கிட்ட போயி பாட்ட கொடுத்து கெடுத்துட்டாங்களே?!!! :-)

Phantom Mohan said...

சரவணகுமரன் said...

கைவசம் நீங்க எவ்ளோ ஐடியா வெச்சிருக்கீங்க!!! உங்கள விட்டுட்டு கௌதம்கிட்ட போயி பாட்ட கொடுத்து கெடுத்துட்டாங்களே?!!! :-)
//////////////////////////////////

என்னங்க பண்றது நான் வளர்ந்த விதம் அப்படி, சோத்துல உப்பு போட்டு தின்னு பழகிருச்சு :) :)

அதனால, மானங்கெட்டு போய் இந்த மாதிரி எல்லாம் பண்ணவும் முடியாது, பாராட்டவும் முடியாது :(

அப்புறம், நான் சொன்னது ஐடியாவா????????? அனேகமா நான் சொன்னதெல்லாம் தமிழர்கள் தமிழர்கள் ன்னு ஒரு கூட்டம் இருக்குமே அவங்களோட பழக்கவழக்கத்தில லட்ச்சத்தில ஒன்னு.

Anonymous said...

today only i visited your blog first time very very nice and enjoyable, padikka romba jollya irukku incluning the comments. best wishes

philosophy prabhakaran said...

தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html

முத்து said...

Phantom Mohan said...

யோவ் நீ என் கேரக்டரையே புரிஞ்ச்சிக்கள, அஞ்சலி, சமந்தாவப் பத்தி தான் எழுத நெனச்சேன். அத மட்டும் எழுதினா செருப்பால அடிப்பிங்க, அதான் கூட ரெண்டு வரி சேர்த்து எழுதிருக்கேன்.//////


ரெண்டு வரி சேர்த்து எழுதியதில் பிரச்னை இல்லை,ஏன் இதை பற்றி எழுதினாய்?

முத்து said...

Phantom Mohan said...

எனக்கு ஒன்னும் ஆகாது, உனக்கு தான் கரண்ட்டு பில்லும், நெட் பில்லும் கூடும்.////////


எனக்கு ப்ரீ மாமு

Phantom Mohan said...

முத்து said...

Phantom Mohan said...

எனக்கு ஒன்னும் ஆகாது, உனக்கு தான் கரண்ட்டு பில்லும், நெட் பில்லும் கூடும்.////////


எனக்கு ப்ரீ மாமு
/////////////////////////

அது ப்ரீ இல்ல ராசா,

ஓசி, திருட்டுத்தனம், திமிருத்தனம், நம்பிக்கை துரோகம், உன் கம்பனிக்கு நீ பண்ணுவது பச்சத் துரோகம் .

உடனே நீ பெரிய வெண்ணையான்னு கேக்கக்கூடாது. அட்வைஸ் பண்ணா கேக்கணும், அட்வைஸ் பன்னவனப் பத்தி ஆராயக்கூடாது.

முத்து said...

Phantom Mohan said...
அது ப்ரீ இல்ல ராசா,

ஓசி, திருட்டுத்தனம், திமிருத்தனம், நம்பிக்கை துரோகம், உன் கம்பனிக்கு நீ பண்ணுவது பச்சத் துரோகம் ./////////


கம்பெனி இல்லை வீட்டிலும் ப்ரீ தான்,

Phantom Mohan said...

முத்து said...

Phantom Mohan said...
அது ப்ரீ இல்ல ராசா,

ஓசி, திருட்டுத்தனம், திமிருத்தனம், நம்பிக்கை துரோகம், உன் கம்பனிக்கு நீ பண்ணுவது பச்சத் துரோகம் ./////////


கம்பெனி இல்லை வீட்டிலும் ப்ரீ தான்,
//////////////////////////

அடப்போய்யா, எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசிக்கிட்டு! வேற என்ன விசேசம்? அடுத்து யாரப் போட்டுத் தள்ளப் போற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பருப்பு நம்ம கடைப் பக்கம் வந்து பாருய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

The word quantum derives from Latin meaning "how great" or "how much".[1] In quantum mechanics, it refers to a discrete unit that quantum theory assigns to certain physical quantities, such as the energy of an atom at rest (see Figure 1). The discovery that particles are discrete packets of energy with wave-like properties led to the branch of physics that deals with atomic and subatomic systems which is today called quantum mechanics. It is the underlying mathematical framework of many fields of physics and chemistry, including condensed matter physics, solid-state physics, atomic physics, molecular physics, computational physics, computational chemistry, quantum chemistry, particle physics, nuclear chemistry, and nuclear physics. The foundations of quantum mechanics were established during the first half of the twentieth century by Werner Heisenberg, Max Planck, Louis de Broglie, Albert Einstein, Niels Bohr, Erwin Schrödinger, Max Born, John von Neumann, Paul Dirac, Wolfgang Pauli, David Hilbert, and others.[2] Some fundamental aspects of the theory are still actively studied.[3]
Quantum mechanics is essential to understand the behavior of systems at atomic length scales and smaller. For example, if classical mechanics governed the workings of an atom, electrons would rapidly travel towards and collide with the nucleus, making stable atoms impossible. However, in the natural world the electrons normally remain in an uncertain, non-deterministic "smeared" (wave–particle wave function) orbital path around or through the nucleus, defying classical electromagnetism.[4]
Quantum mechanics was initially developed to provide a better explanation of the atom, especially the spectra of light emitted by different atomic species. The quantum theory of the atom was developed as an explanation for the electron's staying in its orbital, which could not be explained by Newton's laws of motion and by Maxwell's laws of classical electromagnetism.
In the formalism of quantum mechanics, the state of a system at a given time is described by a complex wave function (sometimes referred to as orbitals in the case of atomic electrons), and more generally, elements of a complex vector space.[5] This abstract mathematical object allows for the calculation of probabilities of outcomes of concrete experiments. For example, it allows one to compute the probability of finding an electron in a particular region around the nucleus at a particular time. Contrary to classical mechanics, one can never make simultaneous predictions of conjugate variables, such as position and momentum, with accuracy. For instance, electrons may be considered to be located somewhere within a region of space, but with their exact positions being unknown. Contours of constant probability, often referred to as "clouds", may be drawn around the nucleus of an atom to conceptualize where the electron might be located with the most probability. Heisenberg's uncertainty principle quantifies the inability to precisely locate the particle given its conjugate.[6]
The other exemplar that led to quantum mechanics was the study of electromagnetic waves such as light. When it was found in 1900 by Max Planck that the energy of waves could be described as consisting of small packets or quanta, Albert Einstein further developed this idea to show that an electromagnetic wave such as light could be described by a particle called the photon with a discrete energy dependent on its frequency. This led to a theory of unity between subatomic particles and electromagnetic waves called wave–particle duality in which particles and waves were neither one nor the other, but had certain properties of both. While quantum mechanics describes the world of the very small, it also is needed to explain certain macroscopic quantum systems such as superconductors and superfluids.

MUTHU said...

Phantom Mohan said...
அடப்போய்யா, எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசிக்கிட்டு! வேற என்ன விசேசம்? அடுத்து யாரப் போட்டுத் தள்ளப் போற?///////

நீ சரின்னு சொல்லு நம்ம பன்னிக்கு நாள் குறிச்சுடலாம்

MUTHU said...

நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி////


இரு போயிட்டு நடு நிசிக்கு வரேன்

பட்டாபட்டி.. said...

பருப்பு..இந்த பாட்டை தேசியகீதமா அறிவிப்பதற்க்குள் அடுத்த பதிவப்போடு...

பட்டாபட்டி.. said...

பாட்டு நல்லாத்தான் இருக்கு..
என்ன ஒரு குறை...சாரிப்பா..ரெண்டு குறை...

1.. செம்மொழி பாட்டுல..கனிமொழி எங்கேப்பா?
2.. குஷ்புவ குதிரைமேல் உக்காரவெச்சு ஆடச்சொல்லியிருக்கலாம்..

கக்கு - மாணிக்கம் said...

எனக்கு இதில் காட்டப்பட்ட visuals எதுவுமே பிடிக்கல.முதல் தடவை பாட்டை கேட்டபோது Rahman மேல் கோபம்தான் வந்தது. "என்ன எழவு இது பாடலின் வரிகள் ஒன்றுமே புரியலையே" என்று. பின்னர் உங்கள் பதிவில் பல முறை இந்த வீடியோ வை பார்த்து, ஒன்றும் என்னை கவர்ததாக உணரவில்லை இந்தனை அமர்க்களம், ஆடம்பரங்கள், ஆர்பாட்டம் இல்லாமல் எத்தனையோ திரைப்படங்களில் இதே கருத்துள்ள எளிமையான இனிமையான பாடல்கள் வந்து நம் கருத்தை கவர்ந்துள்ளன.இதில் தமிழும் இல்லை, தமிழ் இசையும் இல்லை,தமிழ் எழுத்துக்களை புதுமண தம்பதிகள் வடகம் பிழிவது மகா அசட்டுத்தனமான கற்பனை.
யார் மண்டையில் வந்ததோ?!மொத்தத்தில் தண்டம். !

ஜெய்லானி said...

//நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி////


இரு போயிட்டு நடு நிசிக்கு வரேன்//

முத்து எப்படியா சேம் பிளட்

ஜெய்லானி said...

//பேர்ல என்னய்யா இருக்கு? அடுத்த வாரம் "தமன்னாதாசன்" ன்னு பேர மாத்தப்போறேன்! அப்போ என்ன பண்ணுவ?

நீ உன் ப்ளோக்ல நல்ல புள்ள மாதிரி நடிக்கிற, வெளிய வந்தா உன் அக்கப்போரு தாங்க முடியல.//


என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே..

தமன்னா தாசந்தானே . அப்பவும் அனுஷ்கா ஃபிரி..அது எனக்குதான் இப்ப என்ன பன்னுவே... இப்ப என்ன பன்னுவே....

Dr.P.Kandaswamy said...

அடேங்கப்பா, காப்பிரைட்டெல்லாம் வாங்கியாச்சு போல இருக்கு. வாழ்க, வளர்க.

Phantom Mohan said...

@ முத்து, பட்டாபட்டி, கக்கு-மாணிக்கம், ஜெய்லானி

யோவ் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, உங்க மனசுல என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னைப் பார்த்தா உங்களுக்கு கேனப்பய மாதிரி தெரியுதா?

பதிவப் போட்டு பத்து வருஷம் கழிச்சு வந்து கம்மென்ட் அடிச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்னால முடியல!

Phantom Mohan said...

Dr.P.Kandaswamy said...

அடேங்கப்பா, காப்பிரைட்டெல்லாம் வாங்கியாச்சு போல இருக்கு. வாழ்க, வளர்க.
////////////////////////

வாழ்த்துக்கு நன்றி டாக்டர் சார்! ஆனா நான் ஒன்னும் காப்பி ரைட்ஸ் வாங்கலையே சார்! உண்மைய சொல்லுங்க, "இது என் படைப்பு இதுக்கு காப்பி ரைட்ஸ் குடுங்கன்னு" நான் யார்கிட்டயாவது வேண்டாம் உங்க கிட்ட கேட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

இதுக்கு எவன் சார் காப்பி ரைட்ஸ் குடுப்பான்!

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

பாட்டு நல்லாத்தான் இருக்கு..
என்ன ஒரு குறை...சாரிப்பா..ரெண்டு குறை...

1.. செம்மொழி பாட்டுல..கனிமொழி எங்கேப்பா?
2.. குஷ்புவ குதிரைமேல் உக்காரவெச்சு ஆடச்சொல்லியிருக்கலாம்..
////////////////////////////////////////

நியாயமான கேள்விகள் ஆனா இதுக்கு என் கிட்ட பதில் இல்லையே.....நான் இப்போ என்ன பண்ணுவேன். குதிரை பாவம் ராசா, ப்ளு க்ரச்சுக்கு தெரிஞ்சா உன் மேல கேஸ் போடுவாங்க!

Phantom Mohan said...

கக்கு - மாணிக்கம் said...

எனக்கு இதில் காட்டப்பட்ட visuals எதுவுமே பிடிக்கல.முதல் தடவை பாட்டை கேட்டபோது Rahman மேல் கோபம்தான் வந்தது. "என்ன எழவு இது பாடலின் வரிகள் ஒன்றுமே புரியலையே" என்று. பின்னர் உங்கள் பதிவில் பல முறை இந்த வீடியோ வை பார்த்து, ஒன்றும் என்னை கவர்ததாக உணரவில்லை இந்தனை அமர்க்களம், ஆடம்பரங்கள், ஆர்பாட்டம் இல்லாமல் எத்தனையோ திரைப்படங்களில் இதே கருத்துள்ள எளிமையான இனிமையான பாடல்கள் வந்து நம் கருத்தை கவர்ந்துள்ளன.இதில் தமிழும் இல்லை, தமிழ் இசையும் இல்லை,தமிழ் எழுத்துக்களை புதுமண தம்பதிகள் வடகம் பிழிவது மகா அசட்டுத்தனமான கற்பனை.
யார் மண்டையில் வந்ததோ?!மொத்தத்தில் தண்டம். !
////////////////////////////

வேற யாரு தமிழினத் தலைவர் தான்! செம்மொழி பாடல் எனக்கு சுத்தமா புடிக்கலை. ஒரு வேலை சம்பளம் குடுக்கலைன்னு சொல்லி இந்த மாதிரி பண்ணிட்டானா கெளதம்?

Phantom Mohan said...

தமன்னா தாசந்தானே . அப்பவும் அனுஷ்கா ஃபிரி..அது எனக்குதான் இப்ப என்ன பன்னுவே... இப்ப என்ன பன்னுவே....
////////////////////////////////////

யோவ் ஜெய்லானி, தமன்னாவும், அனுஷ்காவும் என் இரு கண்கள். என் கிட்ட இருந்து அனுஷ்காவ யாராலும் பிரிக்க முடியாது.

எம் அப்துல் காதர் said...

//யோவ் ஜெய்லானி, தமன்னாவும், அனுஷ்காவும் என் இரு கண்கள். என் கிட்ட இருந்து அனுஷ்காவ யாராலும் பிரிக்க முடியாது.//

//யோவ் ஜெய்லானி, தமன்னாவும், அனுஷ்காவும் என் இரு கண்கள். என் கிட்ட இருந்து அனுஷ்காவ யாராலும் பிரிக்க முடியாது.//

பிரிக்க முடியாதுன்னா எப்படி சார்!! சும்மா பொத்தி பொத்தி வச்சு அழகு பார்க்கவா.. போங்க சார் சும்மா விளையாடாதீங்க!! ஏற்கனவே ரிசர்வ்டு பார் மீ அண்ட் ஜெய்லானி.. சுப்ரீம் கோர்டே சொல்லிடுசுல!!

Phantom Mohan said...

எம் அப்துல் காதர் said...

பிரிக்க முடியாதுன்னா எப்படி சார்!! சும்மா பொத்தி பொத்தி வச்சு அழகு பார்க்கவா.. போங்க சார் சும்மா விளையாடாதீங்க!! ஏற்கனவே ரிசர்வ்டு பார் மீ அண்ட் ஜெய்லானி.. சுப்ரீம் கோர்டே சொல்லிடுசுல!!
////////////////////////

என்னய்யா அப்துல், வக தக தெரியாம வாசல்லே வந்து பேசுறீரு! ஏற்க்கனவே நான் நெறையா பேரு கூட சண்ட போட்டுக்கிட்டு இருக்கேன், இதுல நீறு வேறயா?

"ஆண்டவன வேண்டிக்கோங்க இன்னொரு தடவ என்னையும் அனுஷ்க்காவையும் பிரிக்க நினைக்கக் கூடாதுன்னு"

மீறி நெனச்ச..........................

எம் அப்துல் காதர் said...

"ஆண்டவன வேண்டிக்கோங்க இன்னொரு தடவ என்னையும் அனுஷ்க்காவையும் பிரிக்க நினைக்கக் கூடாதுன்னு" மீறி நெனச்ச.................

கால்ல விழுந்திடுவீக... அதான் தெரிந்த விசயமாச்சே! சரி சரி யாரும் பார்க்கிறதுக்கு முந்தி எழுந்திரிங்க -:))) நா யார் கிட்டேயும் சொல்லமாட்டேன்!!

Phantom Mohan said...

எம் அப்துல் காதர் said...

கால்ல விழுந்திடுவீக... அதான் தெரிந்த விசயமாச்சே! சரி சரி யாரும் பார்க்கிறதுக்கு முந்தி எழுந்திரிங்க -:))) நா யார் கிட்டேயும் சொல்லமாட்டேன்!!
//////////////////////////

ஹி ஹி...உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.

Phantom Mohan said...

மவனே நீ எங்கயாவது கும்மில மாட்டு, அன்னைக்கு இருக்கு உனக்கு!

DrPKandaswamyPhD said...

உங்க பிரம்மாஸ்திரம் திரும்பவும் தெரிகிறது. "எடிட்- போஸ்ட்"டுல வெளயாடாதீங்க. இந்த மாதிரி ரகளை எல்லாம் நடக்கும்.

முத்து said...

புது போஸ்ட் போடுறியா இல்லையா

ஜெய்லானி said...

//இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி //

யோவ் நீயாவது முழிச்சிகிட்டு இருக்கியா இல்லையா..?

ஜெய்லானி said...

என்னய்யா புதுசா அப்ரூவல் கேக்குது..நாசமா போவ நா போரேன்..பன்னிகுட்டி வீட்டுக்கு

ஜெய்லானி said...

//@ முத்து, பட்டாபட்டி, கக்கு-மாணிக்கம், ஜெய்லானி

யோவ் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, உங்க மனசுல என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னைப் பார்த்தா உங்களுக்கு கேனப்பய மாதிரி தெரியுதா?//இல்ல மாம்ஸூ ரசம் கொஞ்சம் சூடு அதான் கொஞ்சம் ஆறட்டுமேன்னு

ஜெய்லானி said...

////யோவ் ஜெய்லானி, தமன்னாவும், அனுஷ்காவும் என் இரு கண்கள். என் கிட்ட இருந்து அனுஷ்காவ யாராலும் பிரிக்க முடியாது.//

அடுத்த போஸ்ட் அனுஷ்கா இல்லாம வந்தா ஓட்டு கிடையது மச்சி இப்பவே சொல்லிட்டேன் பின்னால..ச்சே முன்னால வருத்தப்படக்கூடாது.

Phantom Mohan said...

ஜெய்லானி said...

என்னய்யா புதுசா அப்ரூவல் கேக்குது..நாசமா போவ நா போரேன்..பன்னிகுட்டி வீட்டுக்கு
///////////////////////////

யோவ் பதிவப் போட்டு பதினாறு நாள் ஆச்சு, இப்போ கம்மென்ட் போட்ட அப்டித்தான் அப்ரூவல் கேக்கும்.

Karthick Chidambaram said...

Thalaiva No tension relax. Ithu oru ad
Amputtuthaan. Neenga romba aasapattaa eppadi.

LONG LIVE TAMIL.

முத்து said...

இப்போ நீ பதிவ போடுறியா இல்லை ஸ்பாம் அனுப்பி விடவா

Anonymous said...

she is divya (Villu deem thankana dilana) not shruthi hasan

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...