Pages

உன் வாயில வசம்ப வச்சுத் தேய்க்க!!!!

இந்த நாதாரி பய உதித் நாராயணனும், சுக்விந்தர் சிங்க்க்கும் நாம என்ன பாவம் பண்ணோம்..ஏன் என் தமிழ கடிச்சு மென்னுத் துப்புரானுங்க?.. முதல்ல இவனனுங்களப் பத்தி தப்பா பேசுறேன்னு நெனைக்க வேணாம்..எனக்கு சுக்கவிட உதித்த ரொம்ப புடிக்கும்..வித்தியாசமான வாய்ஸ் SWADES ல ஒரு பாட்டுங்க AAHISTA AAHISATA ன்னு செம பாட்டு..நம்புன நம்புங்க அந்தப் பாட்டக் கேட்டுத்தான் daily தூங்குவான் இந்த பருப்பு...15000 பாட்டுக்கு மேல பாடிருக்காப்ல, அஞ்சு film fare, ஒரு பத்மஸ்ரீ வேற...என்ன பண்ணி என்ன ப்ரோயஜனம்..

பிரியமான பெண்ணை ரசிக்கலாம் ங்கற வரிய, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம்னு பாடுனவந்தான இந்த உதித்து ...

எம்புட்டு பெரிய தப்பு..பண்பாடு பரலோகம் போச்சே...உனக்கு என்ன வருமோ அதப்பண்ணு..மனசுல என்ன பெரிய ஸ்ரேயா க்ஹோசல் ன்னு நெனப்பா...


அந்தப்பொண்ணு TMS பாடுன முத்தைத்திரு பாட்டக்கூட கூட அசால்டா அந்தரா குமால்டியா பாடும்..பொண்ணா அது செஞ்சு வச்ச சிலை..குரலா அது குலோப் ஜாமூன்..இந்த ஜென்மம் பூராம் பாத்துக்கிட்டே இருக்கலாம்..இல்லேங்க அவங்க பாடுறத பாக்கலாம்னு சொன்னேன் ...நாலு பேரு முச்சந்தில வச்சு நம்மள செருப்பால அடிக்கும் போது கூட, அவங்க பாட்ட மெய் மறந்து கேட்கலாம்..அப்டி ஒரு எப்பெக்ட்...அதப் பத்தி நான் இன்னொரு பதிவு வழிஞ்சு எழுதுறேன்...

செம்ம காண்டுல இருக்காங்க பருப்பு இந்த உதித்து மேல... இவரு ஹிந்தில பாடுனா இன்னைக்கு பூராம் கேக்கலாம்..தயவுசெஞ்சு தமிழ விட்ரு...நாராசம் ங்கற வார்த்தைக்கு அர்த்தமே எனக்கு புரியுது...மலையாளம் தெலுங்க கூட வுடளைங்க..என்னடா பாவம் பண்ணோம் உனக்கு...தமிழ ஒரு வழி பண்ணாம நான் உடமாட்டேன்னு சபதம் எடுத்திருப்பான் போல...

இதுக்கு யார் காரணம்..எங்க அண்ணாச்சி A R ரகுமான் தான்..A R ரகுமான எனக்கு புடிக்கும் ன்னு சொன்னா அது கலைங்கருக்கு பாராட்டு விழா புடிக்கும் ன்னு சொல்ற மாதிரி...காது கேக்காதவனுக்கு கூட நம்மால புடிக்கும்..தலைவா தயவுசெஞ்சு இவனுங்கள தமிழ் நாட்டுக்கு கூடிட்டு வராத...

இப்போ எனக்கு என்ன பயம்னா..உங்களுக்கே தெரியும் இளையராஜா திருவாசகம் போட்ட மாதிரி A R R திருக்குரள இசை வடிவத்துல குடுக்கப்போராறு..அதோட trailer தான் மன்னிப்பாயா பாட்டுல வர்ற ஒரு குறள்..எப்டியும் உலகமே திரும்பி பார்க்கும்..ஆனா எங்க இந்த சுக்குவும், உதித்தும் அதுல படிருவாங்கலோன்னு எனக்கு திக் திக் ன்னு இருக்கு..கொஞ்சம் நெனச்சு பாருங்க

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

இந்தக் குறள் அவனுங்க பாடுனா காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்கும், கேப்டனும் கேட் வின்ஸ்லெட்டும் டூயட் பாடுன கூட நான் பாப்பேன் ..ஆனா இதக்கேக்குரதுக்கு, நான் நாண்டுக்கிட்டு செத்த்ருவேன்...கன்னியாக்குமரியே அழிஞ்சு போயுரும்...

அய்யா A R R தயவு செஞ்சு இவனுங்கள ஹம்மிங் கூட பண்ண வச்சிராத....உன்னக் கெஞ்சிக் கேட்டுக்குறேன் ....


டேய் ஒழுங்கா ஓடிப்போயிருங்க.....இன்னொரு தபா உங்க ரெண்டு பேரையும் தமிழ்நாட்டுப் பக்கம் பார்த்தேன்..
ஓடியாந்து ஆட்டோகிராப் வாங்கிடுவேன்...சாக்கிரதை


3 comments:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//
இந்தக் குறள் அவனுங்க பாடுனா காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்கும், கேப்டனும் கேட் வின்ஸ்லெட்டும் டூயட் பாடுன கூட நான் பாப்பேன் ..ஆனா இதக்கேக்குரதுக்கு, நான் நாண்டுக்கிட்டு செத்த்ருவேன்...கன்னியாக்குமரியே அழிஞ்சு போயுரும்...//

சான்செ இல்ல மாப்ள.. பின்னீட்ட....

அம்மம்பா.. சுக்கு பாடுனா திக்குன்னு தான் இருக்குது..

பருப்பு The Great பருப்ப்பு said...

அவன் பாடலென்ன இங்க மழை பெய்யாதா..இல்ல வேற யாருமே இல்லையா..கடுப்ப கேளப்புரனுங்க..எல்லாம் நான் ரகுமானுக்கு கொடுத்த செல்லம்

"ராஜா" said...

//கேப்டனும் கேட் வின்ஸ்லெட்டும் டூயட் பாடுன கூட நான் பாப்பேன்

பாவம் விட்டுட்டு அழுதிடுவேன் ...
----இப்படிக்கு கேட் வின்ஸ்லெட்

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...