
ஒரு சேஞ்சுக்கு Interview-ல உண்மைய சொன்னா எப்புடி இருக்கும்...
நீங்கள் எதற்க்காக இந்த வேலைக்கு விண்ணப்பிதுள்ளீர்கள்?
எத்தனையே நாதாரிகளுக்கு அனுப்புனேன், எவனும் கூப்பிடல, நீ லூசு கூப்பிட்ட தோ வந்தாச்சு
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்க்காக நீ இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேரணும்?
எப்பிடியும் எவன் டவுசரயாவது உருவனும், நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்..இந்த கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு சுயநலமா யோசிக்கிரதில்லப்பா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எதற்கு உனக்கு வாய்ப்பு தரணும்?
வரும் போதே பாத்தேன்..நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு, அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது...எப்டியும் எவனுக்காவது குடுக்க போற, அத எனக்கே குடுத்துறேன்
உனக்கு ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி, நான் வேலை குடுத்தேன்னு வை..அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?
உனக்கு சனியன் புடிச்சது ன்னு நெனைப்பேன், அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...டக்குனு எந்திரிச்சு ஆடுவேன், சொல்ல முடியாது..ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன் ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே வெளிய நிக்குது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை நினைக்கிறீர்கள்?
(அத சொன்னா ரொம்ப அசிங்கமாயிரம்..வேண்டாம்)
எவன் சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன், அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுடைய பலகீனம்?
ஒன்னும் இல்ல சார்..வேலை செய்யும் போது தூங்கிருவேன்..என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு போய் முட்ட, தகுடு எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான் வேற பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க பண்ணதிலே மிகப் பெரிய தப்பு எது? எவ்வாறு அதை சரி செய்தீர்கள்/செய்வீர்கள்?
பண்ணதிலே மிகப் பெரிய தப்புன்னா, போன கம்பனில சேந்தது..கம்பெனியா அது சனியன் எப்பபாரு வேலை வேலைன்னுட்டு, நிம்மதியா you tube பாக்க முடியாது..Orkut பிளாக் பண்ணிட்டனுங்க..சாட்டிங் பண்ண முடியாது..
அத சரி செய்யத் தான் தோ இங்க இருக்கேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய சாவல் எது? எப்படி அதை எதிர்கொண்டீர்கள்?
மிகப்பெரிய சவால்னா மூதேவிங்க எல்லா interview ளையும் "எதுக்கு வேற வேலை தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க" அதான் சார்..
விஜய் படம் பாத்த மாதிரி முழிப்பேன்..வேர்த்துக் கொட்டும், அதுக்கு பதில் சொல்ல முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார் ..என் டவுசர் கிழிஞ்சிரும்..பே பே பே ன்னு ஏதேதோ உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்காக உங்கள் பழைய கம்பனில இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?
நீ என்ன மானாவுக்கு உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ அதுக்குத்தான்..போதுமா
அதுவும் இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..எனக்கே போர் அடிக்குது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கம்பனில நீ என்ன மாதிரி வேலை எதிர்பாக்குற?
வேலையே இருக்கக் கூடாது..மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்..மாச மாசம் Increment குடுக்கணும்..நெறைய பிகருங்க இருக்கணும்..டேடிங் ஏற்பாடு பண்ணிக்குடுத்தா ரொம்ப சந்தோசம் சார்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுடைய லட்சியம் என்ன? அதற்க்கு உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?
நெறையா சம்பாதிக்கணும், அதுக்கு வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா தாவனும் ...நான் ஒருத்தன் நல்லா இருக்கணும்னா, எத்தன கம்பனி நாசமா போனாலும், எது பண்ணாலும் தப்பில்ல
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன சம்பளம் எதிர்பாக்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்..அதே சம்பளத்துக்கு எவன் வருவான்..ஒரு 30 ௦% கூட்டிக் குடு (தப்ப நெனைக்காதீங்க சார்)...
எனக்கு தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு பேசுவேன்னு..அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட 30% ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்

இதெப்புடி இருக்கு?
11 comments:
நல்ல காமெடி பாஸு..! அதுவும் லேபிள்ஸ் கலக்கல்.
:-)
@@@ஜெய்லானி சொன்னது…
யோவ் பருப்ப்ப்ப்ப்பு எதுவுமே படிக்க முடியலயா!! பிண்ணாடி ஒரே ஓட்டையா தெரியுது .முதல்ல அத மாத்து/////
அன்னாரின் வேண்டுகோளுக்கிணங்க கோட்டை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது...ஜெய்லானி அண்ணே! இப்போ நல்லத் தெரியுதா? நன்றி//
இப்ப நல்லா தெரியுது அண்ணாச்சி ஃபாலோயர் போட்டாச்சி அடியேய் இனி கச்சேரிதான் . ரெடியா இரு .
பருப்ப்பு...ப்ப்பு .எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது. நீ குடிச்சிட்டு ப்ளாகுக்கும் ஊத்திட்டியா அதுவும் ரெண்டடா இருக்கு. மாத்துயா
பருப்பு, நெஜமாலமே பாரு, நீ எங்கேயோ போய்த்தான் நிப்ப, அதாவது உலகப்புகழ் பதிவர் அப்டீன்னு
//என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு போய் முட்ட, தகுடு எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன்
அட்ரா சக்க...
அட்ரா சக்க...
ராஜு ♠ சொன்னது…
நல்ல காமெடி பாஸு..! அதுவும் லேபிள்ஸ் கலக்கல்.
:-)/////
நன்றி ராஜு! அடிக்கடி வாங்க
ஜெய்லானி சொன்னது…
இப்ப நல்லா தெரியுது அண்ணாச்சி ஃபாலோயர் போட்டாச்சி அடியேய் இனி கச்சேரிதான் . ரெடியா இரு .
பருப்ப்பு...ப்ப்பு .எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது. நீ குடிச்சிட்டு ப்ளாகுக்கும் ஊத்திட்டியா அதுவும் ரெண்டடா இருக்கு. மாத்துயா
/////////////////////////////////
கச்சேரிக்கு நாங்க ரெடி...அது ஒன்னும் இல்லேங்க்னா புதுசுல்ல கைய வச்சு சும்மா இல்லாம, கண்டத மத்தினதால் வந்த விளைவு..கொஞ்சம் போருத்துன்க்கொங்க கூடிய சீக்கிரம் சரி பண்ணிடுவேன்
Dr.P.Kandaswamy சொன்னது…
பருப்பு, நெஜமாலமே பாரு, நீ எங்கேயோ போய்த்தான் நிப்ப, அதாவது உலகப்புகழ் பதிவர் அப்டீன்னு
/////////////////
டாக்டர் சார் நன்றி..இன்னும் நல்லா எழுத ஆசீர்வாதம் பண்ணுங்க
ha ha ha siripputhan varuthu
ஏம்பா பருப்பு பையா!! பலோயர்ஸ் ஆப்ஷன் வச்சா மட்டும் போதுமா,
//நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியபடுத்தவும்!//
இது மாதிரி ஏதாவது அறிவிப்பை சைடு பாரில் போட்டு வச்சாத் தானே நம்ம கடைக்கும் நாலு கஷ்டமர் வந்து நாமளும் முன்னேற முடியும்.
சூதானமா இரு பருப்பு , சீக்கிரம் உன் புகழ் பரப்பு.
வால்டர் வெற்றிவேல்
Good One!!!!
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...