Pages

ஒபாமா என் சித்தப்பா!




யாவரும் கேளீர்! யாவரும் கேளிர்!!
(இதுக்கு தமிழ்ல அர்த்தம் அல்லாரும் கேட்டுக்கோங்கோ! நம்ம அல்லாரும் ஒரே ப்ளட்டு, ரிலேசன்ஸ் !!)

அதாவது மக்களே! நாட்டுல ஏன் உலகத்தில எவனுக்குமே பொறுப்பில்ல...இந்த ஐ நா சபா, லொள்ளு சபா, G6, IR8, SAARC இதெல்லாம் வெறும் கண்துடைப்பு..உலக சமாதானம், உலக சமாதானம் ன்னு மக்கள் பணத்துல நாடு நாடு சுத்தி சம்சா, வட தின்னுட்டு மொக்கை போட்டுட்டு வர்றானுங்க, இந்த உலக டமா கோலிங்க...

நேத்து தீடீர்னு பருப்புக்கு இந்த விஷயத்தில அக்கறை வந்து, அதப் பத்தின STD படிக்கும் போதுதான்...இந்த பனங்கா மண்டயனுங்க நம்ம பதருகள காலம் காலமா ஏமாத்தின விஷயம் தெரிஞ்சு...இந்த மேட்டர்ல டீப்பா இறங்குனான் பருப்பு...அதுல அவன் கண்டு புடிச்ச மேட்டர்ரு ங்கொய்யால ட்டேர்ரர்று.....அப்டியே கரண்டடிச்ச காக்க மாறி பேச்சு மூச்சே இல்லாம கிடந்தான் பருப்பு....இனி எந்த தீவட்டித் தலையன் தடுக்கான்னு பார்ப்போம்....

இனி பருப்பின் அதிரடி.....

ஏலேய் மானிடப் பதர்களா...ஆண்டவன் ஆதம் ஏவால மட்டும் தான் படச்சான்...சோ அவங்க தான் நம்ம ப்ரடுயுசர்...அப்டிப் பாத்தா நாமெல்லாம் யாரு? இன்னும் புரியல இப்ப என் பாட்டியோட மகளை நான் சித்தின்னு கூப்புடுவேன்..எங்க தாத்தா பையன நான் சித்தப்பானு கூப்புடுவேன், அவர் பையன் எனக்கு அண்ணன்/தம்பி...

சோ ஆதம் ஏவாளோட வம்சாவளி நம்ம அப்டினா, ஒபாமா என் சித்தப்பா தான? லேடன் என் மாமன் பையன், அட நம்ம கேட் வின்ஸ்லெட் என் முரப்பொன்னு...தமன்னா வுக்கு நான் மாமன் பையன்..ஐஷு நான் கட்டிக்கிற முறை...இவ்ளோ என் நம்ம நித்தி என் பங்காளி...அப்டினா ரஞ்சிதா என் கொழுந்தியா...



இதெல்லாம் என் முரப்போண்ணுங்க...ஏய் சீ சீ நீங்கெல்லாம் என் மாமன், மச்சான் அப்டின்ன இதெல்லாம் உங்களுக்கு சகோதரிகள்யா...போ போய் இனி வர்ற புள்ள குட்டிகளுக்கு இத்த சொல்லு..இனி வர்ற தலைமுறையாவது அடிச்சிக்கமா அண்ணன் தம்பியா பழகட்டும்...

இந்த உண்மை இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்...இனிமேலாவது ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கமா..நல்ல புள்ளைய இருங்க...

எங்கடா அந்த நோபல் கமிட்டி...ங்கொய்யா உலக சமாதானத்துக்கு எவன் எவனுக்கோ பட்டம் குடுத்தீங்களே..இவ்ளோ பெரிய உண்மைய சொல்லிருக்கேன் எனக்கு குடுங்கடா முதல்ல...

4 comments:

நாடோடி said...

க‌மெடியா எழுதி இருந்தாலும் மெசேஜ் ந‌ல்லா இருக்கு தொட‌ர்ந்து எழுதுங்க‌....

நாடோடி said...

என்ன‌ ப‌லோய‌ர்ஸ் க‌ணோம், வோட்டு ப‌ட்டை க‌ணோம் எல்லாத்தையும் சீக்கிற‌மா இணையுங்க‌ள்..

கண்ணா.. said...

வருக...வருக பதிவுலகிற்கு வருக...வாழ்க...

//என்ன‌ ப‌லோய‌ர்ஸ் க‌ணோம், வோட்டு ப‌ட்டை க‌ணோம் எல்லாத்தையும் சீக்கிற‌மா இணையுங்க‌ள்.//

ரிப்பீட்டேய்ய்...

அதான் தம்பி இங்கன நொம்ப முக்யம்...

பருப்பு The Great பருப்ப்பு said...

நாடோடி & கண்ணா நன்றி

அட்ரா சக்க..பருப்பு இப்போ followers & Tamilish Vote add பண்ணிட்டான்

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...