Pages

ஹ்ம்ம், இதெல்லாம் வெளங்கறதுக்கா?

என்னங்க அக்கிரமம் இது..எங்க பாத்தாலும் ஆணாதிக்கத் திமிர், பெண்களை கேவலப்படுத்தவதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. ஆம்பளைன்னா என்ன பெரிய பருப்பா? எப்போப் பாரு பெண்கள குறை சொல்றது, அவ நடத்தையைப் பத்தி தப்பு தப்பா பேசுறது, எழுதிறது...ஏண்டாங்கடா டேய்! கேக்க ஆளு இல்லைன்னு திமிரா? ஒரு லேப்டாப்பும்,இன்டர்நெட் கனேக்சனும் இருந்தா என்ன வேணும் நாளும் எழுதி நெட்ல விடுவியா?

பெண்களைப் பத்தி தப்பா எழுதிறதுல இவனுங்களுக்கு அப்பிடி ஒரு சந்தோசம், நாரப்பயலுக...நீ எழுதிறதா எல்லாம் நம்புறதுக்கு நாங்க ஒன்னும் காசுக்கு ஓட்டுப் போடுற கூட்டம் இல்லடா. , பாவம்ங்க அந்த அப்பிராணிப் பொண்ணு, அது
என்ன பண்ணுச்சி இவனுங்கள, ஒருபொண்ணு நல்ல நிலைமல இருந்த இவனுங்களுக்கு பொறுக்காது, எதாவது தப்பு தப்பா எழுதி அந்தப் பொண்ணு மானத்த வாங்கிரலாம்ன்னு இவனுங்களுக்கு ஒரு நப்பாசை...நடக்காதுடி, நடக்க விட
மாட்டேண்டா.... அந்தப் பொண்ணு மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.


எவன் என்ன சொன்னாலும், இந்த உலகமே எதிர்த்து நின்னாலும் நாங்க அந்தபொண்ணு பின்னாடி நிப்போம். அந்தப் பொண்ணுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவோம். படுவா இன்னொரு தரம் எவனாவது அந்தப் பொண்ணப்பத்தி தப்பா எழுதினீங்க...*&^&%^&$%$%#$#%$#%$#%$

கூல், கூல், கூல் மச்சி..ஏன் இவ்ளோ கோபப்படுற, நம்ம பாடிக்கு கோபப்பட்டா தாங்குமா?

யோவ் எவ்ளோ நாள் தான்யா பொறுமையா போகுறது, எதோ சும்மா டைம் பாசுக்கு எழுதுறாங்கன்னு பார்த்த, ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு கடைசில இங்கயும் வந்திட்டாங்க... எங்க பார்த்தாலும் அதப்பத்தியே பேசிக் கொல்றானுங்க, மனசு வலிக்கிதுடா! இவனுங்கல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலை? நான் எப்பவுமே பெண்கள் பக்கம் (ஆனா ஒரு பொண்ணு கூட என் பதிவப் படிக்கல, அதான் ஏன்னு தெரியலை!)

சரி விடு அதான் நீயே களத்துல இறங்கி மிரட்டிட்டேள்ள இனி எவனும் இந்த மாதிரி தப்பா எழுதமாட்டான்!

எது எப்பிடியோ, கடைசியா கடுங்கோபத்தோட ஒன்னு சொல்றேன்,

இன்னொரு தடவ தமன்னாவுக்கும், கார்த்திக்கும் லவ்வு, அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க, ஜோவும் அதுக்கு சப்போர்ட்டுன்னு எவனாவது அள்ளி விட்டீங்க, நான் மனுசனாவே இருக்க மாட்டேன்!


சிவனேன்னு இலையைப் பாத்துக்கிட்டு இருக்கிற இந்தப்புள்ளையப்பத்தி தப்பா எழுத இவனுங்களுக்கு எப்பிடித்தான் மனசு வருதோ!
இவனுங்கள அடிக்க கவட்டை எதுக்குடா செல்லம், நாங்க இருக்கோம்..நாங்க பாத்துக்கிறோம்!


*****************************************************************************

""தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.""

ஒரு வேலை இதுதான் விஜய்யோட அடுத்த படக் கதையா? ஏன்னா அதுவும் பாடிகார்டு, இதுவும் பாடிகார்டு !!!!!!!!!!!!!!

இதுதான் கதைன்னா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு, இப்பவே உங்க தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்றேன்...ஏன்னாஅட இந்தப் பொண்ணு படத்தோட ஹீரோயின் அவ்வளவு தான், நீங்க கீழ படிங்க...


"சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது"

சோ, விஜய் படத்தோட பாதியிலேயே தற்கொலை பண்ணிக்கிறாரு,
அதான் !!!!!!!!!!!!!!!!!!!

******************************************************************************

அனுப்புனர்
பாரதப் பிரதமர்,
புது டெல்லி, இந்தியா

பெறுநர்
தமிழக முதல்வர்
தமிழ்நாடு

சப்: தமிழர் மறுகுடியேற்றத்தை விரைவுபடுத்த ராஜபக்சேவுக்கு அறிவுறுத்துங்கள் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

மதிப்பிற்குரிய அய்யா,

நலம் நலமறிய ஆவல். அங்கு உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா, தனியாக கட்சியைப் பற்றி விசாரிக்க தேவை இல்ல. உங்கள் குடும்பத்தை நலம் விசாரித்தாலே உங்கள் கட்ச்சியையும் விசாரித்தது போல தானே.

மேற்கண்ட தங்கள் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.
கடிதத்தில் உள்ள உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது.


நீங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன், முதலமைச்சர்களுக்கு தனி விமானம் உண்டு, அது இலவசப் பயணமே. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேணுமானாலும் செல்லலாம், சமீபத்தில் நீங்கள் புது டெல்லி வந்தீர்களே, அது போல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்...நீங்கள் நினைத்தால்!!

இத்துடன் எனது கையொப்பம் இட்ட புகைப்படம் இணைத்துள்ளேன், இந்திய இறையான்மைப்படி இவ்வளவு தான் தற்பொழுது என்னால் செய்ய முடியும். வேறு எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும். இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப் போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.*************************************************************************


என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே, இந்த எழவு பதிவ எழுதி முடிச்சுப் பார்த்த பிறகு தான், இதுல தங்கத் தலைவி அனுஷ்கா போட்டோ போட முடியாதுன்னு தெரிஞ்சது, இத நெனச்சு நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கேன், இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லவும்!

மத்தவங்களுக்கு:

என்னோட பதிவுகளப் படிச்சிட்டு, என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதத்தான் நான் இப்பல்லாம் தலைப்பா வைக்கிறேன்! சோ, என்ன நெனச்சு மீண்டும் ஒருமுறை தலைப்ப படிச்சிட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க!


48 comments:

மதுரை சரவணன் said...

எப்படி இப்படி....அருமை. பாதியில படிப்ப நிறுத்தி கமண்டு போட வேண்டாம் இது ஒரு நகைச்சுவையான்னு நினைத்த போது ரியலி சூப்பர். கல்க்கல் தம்மண்ணா...

கக்கு - மாணிக்கம் said...

ஹய்யா ...நான் தான் பஸ்ட்!!

பேர மாத்தினதும் நானும் வந்துட்டேன்.
எப்டீ??

அடிக்க வர மாட்டீங்கள?!
இந்தக்கா கூட நல்லாத்தான் இருக்கண்ணா இல்ல??

கக்கு - மாணிக்கம் said...

ஹய்யா ...இல்ல சகெண்டு ,
மதுர சரவணன் முந்திகிட்டார்

பேர மாத்தினதும் நானும் வந்துட்டேன்.
எப்டீ??

அடிக்க வர மாட்டீங்கள?!
இந்தக்கா கூட நல்லாத்தான் இருக்கண்ணா இல்ல??

நசரேயன் said...

கலக்கல்

இராமசாமி கண்ணண் said...

//உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது. //

ஹா. ஹா. ஹா. கலக்கல் நக்கல்.

Dr.P.Kandaswamy said...

//ஒரு லேப்டாப்பும்,இன்டர்நெட் கனேக்சனும் இருந்தா என்ன வேணும் நாளும் எழுதி நெட்ல விடுவியா?//

இதைவிட வேற என்ன வேலை, பருப்பு ?

Kousalya said...

நல்ல நகைசுவை ....வாழ்த்துகள்

Chitra said...

புதிய பெயரில், நல்ல நகைச்சுவை உணர்வுடன் ஒரு உற்சாக இடுகை. :-)

பட்டாபட்டி.. said...

எப்பூடி! பேர மாத்திட்டோம்ல. "பருப்பு" ங்கற பேரு நெறைய பேருக்கு புடிக்கலை. அதான்//

ஓ.. அடுத்தவங்களுக்காக வாழும் அண்ணன் பருப்பு வாழ்க..வாழ்க

mygopalan@gmail.com said...

very good. all the best

ரோஸ்விக் said...

புரிஞ்சு போச்சுயா... புரிஞ்சு போச்சு...

ஹ்ம்ம், இதெல்லாம் வெளங்கறதுக்கா?

:-))) (பகடிடா சாமி) பல்லக்கை தூக்கிடாதீங்க...

அனுஸ்கா போட்டா எப்பயா வரும்??

Phantom Mohan said...

மதுரை சரவணன் said...

எப்படி இப்படி....அருமை. பாதியில படிப்ப நிறுத்தி கமண்டு போட வேண்டாம் இது ஒரு நகைச்சுவையான்னு நினைத்த போது ரியலி சூப்பர். கல்க்கல் தம்மண்ணா...
//////////////////////////////////////

முழுசாப் படிச்சிட்டீங்கள்ள, அது போதும். ஏன் சார் தமன்னாவ தப்பா பேசுறாங்கன்னு கொந்தளிச்சு எழுதினா, நகைச்சுவைன்னு சொல்லீட்டீங்களே!!!!!!

Phantom Mohan said...

கக்கு - மாணிக்கம் said...

ஹய்யா ...நான் தான் பஸ்ட்!!

பேர மாத்தினதும் நானும் வந்துட்டேன்.
எப்டீ??

அடிக்க வர மாட்டீங்கள?!
இந்தக்கா கூட நல்லாத்தான் இருக்கண்ணா இல்ல??
////////////////////////////////

VIP னா எப்பவாவது தான் சார் வரணும்! அடிக்கடி வந்த மக்களுக்கு போரடிச்சிடும்!

உங்களுக்கு எனது காட்டுத்தனமான கண்டனங்கள்! தமன்னா உங்களுக்கு அக்காவா??????????????

Phantom Mohan said...

நசரேயன் said...

கலக்கல்
//////////////////////

ஒரு வார்த்தை தானா? என்ன நியாயம் சார் இது?

Phantom Mohan said...

இராமசாமி கண்ணண் said...

//உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது. //

ஹா. ஹா. ஹா. கலக்கல் நக்கல்.
//////////////////////////////////

நக்கல் இல்ல தலைவரே, ஒவ்வொரு தடவ அவர் அறிக்கையப்படிக்கும் போதும் தன்னால "பிற்போக்கு" பீலிங்க்ஸ் வருது

Phantom Mohan said...

Dr.P.Kandaswamy said...

//ஒரு லேப்டாப்பும்,இன்டர்நெட் கனேக்சனும் இருந்தா என்ன வேணும் நாளும் எழுதி நெட்ல விடுவியா?//

இதைவிட வேற என்ன வேலை, பருப்பு ?
//////////////////////////////

நீங்க சொன்ன சரி சார்! நான் பெண்களை மதிப்பது போல் பெரியவங்களையும் மதிப்பேன்!

Phantom Mohan said...

Kousalya said...

நல்ல நகைசுவை ....வாழ்த்துகள்
/////////////////////////////////

ஏரியாவுக்கு புதுசா இருக்கீங்க! என்ன வேற வாழ்த்துறீங்க? நீங்க ரொம்ப நல்லவரோ?

Phantom Mohan said...

Chitra said...

புதிய பெயரில், நல்ல நகைச்சுவை உணர்வுடன் ஒரு உற்சாக இடுகை. :-)
//////////////////////////////

தமிழ் விளையாடுதுங்க உங்ககிட்ட!

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

எப்பூடி! பேர மாத்திட்டோம்ல. "பருப்பு" ங்கற பேரு நெறைய பேருக்கு புடிக்கலை. அதான்//

ஓ.. அடுத்தவங்களுக்காக வாழும் அண்ணன் பருப்பு வாழ்க..வாழ்க
////////////////////////////////////

வாய்யா நீ இப்போ தான் பேர் மாத்தினப் பத்தி எழுதிற, இன்னும் பதிவப்படிச்சிட்டு என்னைக்கு எந்த மாதிரி கருத்து சொல்லப் போறியோ?

பருப்பு நல்ல பேரு, அர்த்தமுள்ள பேரு, ஆனா பாருங்க மக்களுக்கு புடிக்கலை...

people must be crazy!!

Phantom Mohan said...

mygopalan@gmail.com said...

very good. all the best
//////////////////////////

Thank you so much! I look forward to receive your comments in all my posts!

Phantom Mohan said...

ரோஸ்விக் said...

புரிஞ்சு போச்சுயா... புரிஞ்சு போச்சு...

ஹ்ம்ம், இதெல்லாம் வெளங்கறதுக்கா?

:-))) (பகடிடா சாமி) பல்லக்கை தூக்கிடாதீங்க...

அனுஸ்கா போட்டா எப்பயா வரும்??
/////////////////////////////

என்ன தல, நம்மப் பத்தி தெரிஞ்சும், நம்ம என்னைக்கு சண்டைக்கு போயிருக்கோம்? அனுஷ்கா கூடிய விரைவில் வருவாங்க!

Phantom Mohan said...

மக்களே இது என்னுடைய 25 வது பதிவு!

கொடுமை என்னன்னா, நானே இப்போ தான் பார்த்தேன்!

Bala said...

//எப்பூடி! பேர மாத்திட்டோம்ல

முதலில் கவுதம், பிறகு கவுதம் மேனன் ஆகி, பிற்காலத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் ஆனாரே அது மாதிரியா இதுவும்?

Phantom Mohan said...

Bala said...

//எப்பூடி! பேர மாத்திட்டோம்ல

முதலில் கவுதம், பிறகு கவுதம் மேனன் ஆகி, பிற்காலத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் ஆனாரே அது மாதிரியா இதுவும்?
////////////////////////////

இந்த மாதிரி எல்லாம் கேக்க சொல்லி யாரு சார் உங்கள தூண்டி விட்டது? பயப்படாம சொல்லுங்க, மவனே நானா அவனான்னு பாத்திருவோம்...என்னா வில்லத்தனம்?

உங்க முகம் ரொம்ப பழகின முகமா இருக்கு, உங்களுக்கு எந்த ஊரு? விருதுநகர் மாவட்டதில இருக்கீங்களா? இல்ல அங்க படிச்சீங்களா?

Bala said...

பிறந்தது, படித்தது எல்லாம் விருதுநகர்தான். என்ன ஆட்டோ அனுப்பறதா உத்தேசமா?

Phantom Mohan said...

Bala said...

பிறந்தது, படித்தது எல்லாம் விருதுநகர்தான். என்ன ஆட்டோ அனுப்பறதா உத்தேசமா?
///////////////////////////////

நெருங்குன பங்காளி ஆகிட்டீங்க, இந்த id க்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்க...

cute.paruppu@gmail.com

I think we met before. I couldn't recognize, we'll discuss in mail.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// தங்கத் தலைவி அனுஷ்கா போட்டோ போட முடியாதுன்னு தெரிஞ்சது, இத நெனச்சு நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கேன், இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லவும்!//

மாப்பு இதுக்கு ஒரு சூப்பர் பரிகாரம் வெச்சிருக்கேன், நம்ம கடைல கேப்டன் படம் ஒண்ணு மாட்டியிருக்கேன், அத போட்டு விடு, எல்லா தோசமும் கழிஞ்சுடும்!

Phantom Mohan said...

யோவ் பன்னி, எதோ பதிவு போட்டுருக்கேன்னு ஆர்வமா வந்தேன்யா....ஆனா............எப்போ அந்த படத்தப் பார்த்தேனோ என்னால கம்மென்ட் கூட போட முடியாம ஓடோடி வந்திட்டேன்! உசிர் முக்கியம்யா!!!! இனிமே இந்த மாதிரி படம் போட்டு என்ன மாதிரி பிஞ்சு மனசுல நஞ்ச வெதைக்காத....

soundar said...

இதை இரண்டு பதிவ போட்டு இருக்கலாம். இருந்தாலும் சூப்பர்.

MUTHU said...

Charu Nivedita
Charu Nivedita

www.charuonline.com


யுத்தம் செய்
June 8th, 2010

மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் யுத்தம் செய் என்ற படத்தில் வரும் ஒரு குத்துப் பாடல் காட்சியில் அமீர், நீது சந்த்ரா ஆகியோருடன் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலை நான்கு மணி. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை சந்திப்போம்.


http://charuonline.com/blog/?p=642

MUTHU said...

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் எழுதுற

MUTHU said...

Phantom Mohan

எப்பூடி! பேர மாத்திட்டோம்ல. "பருப்பு" ங்கற பேரு நெறைய பேருக்கு புடிக்கலை. அதான்//////////////

எதுக்கும் முகத்தில் ஒரு மருவு வைச்சுகோயா,ஒரு குரூப் உன்னை கொலை வெறியுடன் தேடி அலையுது

MUTHU said...

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க.../////////////


பருப்பு 1 கிலோ
புலி 500 கிராம்
அரிசி 2 கிலோ
.
.
.
.
.
.
.
.
.
.

Phantom Mohan said...

யோவ் முத்து இந்த சாரு எப்போ திருந்துவாறு?

Phantom Mohan said...

எதுக்கும் முகத்தில் ஒரு மருவு வைச்சுகோயா,ஒரு குரூப் உன்னை கொலை வெறியுடன் தேடி அலையுது
////////////////////////

இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடியா, எந்த குரூப்ப்ன்னு தெளிவா சொல்லு..
செய்வினை, செயப்பாட்டுவினை எல்லாம் வச்சிருவோம், யாருகிட்ட?

Phantom Mohan said...

பருப்பு 1 கிலோ
புலி 500 கிராம்
அரிசி 2 கிலோ
////////////////////////////

பருப்பு, அரிசி ஓகே...புலி எந்த மாதிரி வேணும்?

MUTHU said...

Phantom Mohan said...

எதுக்கும் முகத்தில் ஒரு மருவு வைச்சுகோயா,ஒரு குரூப் உன்னை கொலை வெறியுடன் தேடி அலையுது
////////////////////////

இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடியா, எந்த குரூப்ப்ன்னு தெளிவா சொல்லு..
செய்வினை, செயப்பாட்டுவினை எல்லாம் வச்சிருவோம், யாருகிட்ட?////////அத சொல்ல மறந்துட்டேனே.......


அது.................................


அது வந்து....................................யோவ் இங்க சரியாய் சிக்னல் கிடைக்கிலஅப்புறம் வந்து சொல்லுறேன்

MUTHU said...

Phantom Mohan said...

பருப்பு 1 கிலோ
புலி 500 கிராம்
அரிசி 2 கிலோ
////////////////////////////

பருப்பு, அரிசி ஓகே...புலி எந்த மாதிரி வேணும்?//////////////////பன்னிகுட்டி ராமசாமி விக்குதே அந்த புலி தான்யா

MUTHU said...

Phantom Mohan said...

யோவ் முத்து இந்த சாரு எப்போ திருந்துவாறு?////////////உன் கேள்வியே தப்பு,அந்த ஆள் எப்போ ஒழுங்கா இருந்தாரு

Phantom Mohan said...

MUTHU said...

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் எழுதுற
////////////////////////////

எவன்டா அவன் முத்து பேர்ல வந்து இந்த மாதிரி அசிங்கமா எழுதிறது? IP கண்டுபுடிச்சேன், மவனே @#$$@%#%^%#%#%^

Phantom Mohan said...

இந்தியாவில இருந்துகிட்டு சிக்னலா எதுக்கு மதிக்கிற, நிக்காம சீக்கிரம் வாய்யா...

Phantom Mohan said...

உன் கேள்வியே தப்பு,அந்த ஆள் எப்போ ஒழுங்கா இருந்தாரு
///////////////////////////////

ஒழுங்கா? இல்ல ஒழுக்கமா??

ஒழுக்கம் உயிரினும்.... உயிரினும்...... அதுக்கப்புறம் என்ன முத்து?

MUTHU said...

Phantom Mohan said...

இந்தியாவில இருந்துகிட்டு சிக்னலா எதுக்கு மதிக்கிற, நிக்காம சீக்கிரம் வாய்யா.../////////////


உனக்கு யாருயா சொன்னது நான் இந்தியாவில் இருக்கேன் என்று நான் சிங்கார சென்னையில் இருக்கிறேன் ஒ..............அதுவும் இந்தியா தானா!!

MUTHU said...

Phantom Mohan said...

உன் கேள்வியே தப்பு,அந்த ஆள் எப்போ ஒழுங்கா இருந்தாரு
///////////////////////////////

ஒழுங்கா? இல்ல ஒழுக்கமா??

ஒழுக்கம் உயிரினும்.... உயிரினும்...... அதுக்கப்புறம் என்ன முத்து?////////////////
இதுமாதிரி கேள்வி கேட்ட உன் ப்ளாக் பக்கமே வரமாட்டேன்,
கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக நான் ஸ்கூல் பக்கம் கூட நான் போனது இல்லை

MUTHU said...

யோவ் அந்த குரூப் உன் வீடு பக்கம் வாராங்கையா ஓடிடு

Phantom Mohan said...

soundar said...

இதை இரண்டு பதிவ போட்டு இருக்கலாம். இருந்தாலும் சூப்பர்.
////////////////////////////////

கவுன்டிங் முக்கியம் இல்ல பாஸ், கருத்து தான் முக்கியம்! (பின்னிட்ட போ!)

எப்போவாவது தான் எழுதுறேன், என்ன தோணுதோ அப்டியே எழுத வேண்டியதுதான்.

மங்குனி அமைச்சர் said...

கரக்ட்டு . பருப்பு சரியான பேர் இல்லை , அப்புறம் அந்த தமானா ???????

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அடுத்த விவேக் . நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...