Pages

வெளக்கமாறு பிஞ்சிரும்!

விஜய் படத்தால் முப்பது கோடி நஷ்டமாம்! 35% நஷ்ட ஈடு கேக்குறாங்க!


தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

******************************************

நான் கேட்பது


அப்போ குருவி 150 நாள், சச்சின் 200 நாள், வேட்டைக்காரன் ஹிட் எல்லாம் பொய்யா?

சன் டிவி லே வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சுறா ன்னு போடுறான், விஜய் படம் வெற்றின்னு பேட்டி கொடுத்தான். இவனுங்க படம் மெகா தோல்வினு சொல்றானுங்க. என்னடா நடக்குது?

அப்போ! வேட்டைக்காரன் வெற்றி படம் என்று கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து எல்லாம் கொடுத்தது எல்லாம் பெரிய பட்டை நாமமா!.

சுறா படம் சூப்பர்ன்னு விமர்சனம் போட்டான் தினகரன் ல. மக்கள் வெள்ளம், ஒரு வருசத்துக்கு டிக்கெட் இல்லன்னு எல்லாம் சொன்னங்க?

முட்டாப் பயலுகளா, 5 படம் படுதுடிச்சு,6 வது படத்த பார்க்காமலே ஏன் வாங்கினீங்க ? உங்க எவன் கிட்டயும் செல் போன், ஈமெயில் கிடையாதா? டெய்லி இவன வச்சு தானடா செல் போன் கம்பனியும், இன்டர்நெட் டீம் பொழப்பு ஓடுது! நீங்க எல்லாம் தமிழ் நாட்டுல தான இருக்கீங்க?


இவன வச்சு எவ்ளோ சம்பாதிச்சிருப்பீங்க, அப்பெல்லாம் இவனைக் கூப்பிட்டு பங்கு குடுத்தீங்களா?

இவன் ஹீரோ தானடா, எவன் உனக்கு படம் வித்தானோ அவனப் போய் கேளுங்க. அதுக்கு தைரியம் இல்லாம ஒருபுள்ளப் பூசியப் போட்டு என்னா அடி?

பாவம் அவனும் எவ்ளோ நாள் தான் வழிக்காத மாதிரி நடிப்பான் (ஆங்! விஜய் என்னைக்கு நடிச்சிருக்கான்?)


எச்சரிக்கை (யாருக்கு யாருக்கோ) :

இந்த பாருங்கடா மேல கேட்ட கேள்வி எல்லாம் சரி, விஜய்க்கு கேக்க நாதி கிடையாது, அதனால அவன்கிட்ட படம் படுத்துக்கிச்சு காசு குடுன்னு கேட்ட மாதிரி எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க...எத்தன கொலை விழும்னு எனக்கே தெரியாது, எவனா இருந்தாலும் அவனுக்கு சாவு தான். குறைந்த பட்சம் தெருவுக்கு ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லைன்னா நாங்க கொளுத்துவோம்.இந்த தந்தி அடிக்கிறது, ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இதெல்லாம் கிடையாது, நாங்கெல்லாம் சோறு திங்கிரவைங்க. தமன்னா
மேல ஒரு தூசி விழுந்தாலும் தமிழ் நாடே பத்தி எரியும், கொளுத்தி விட்டு போயிட்டே இருப்போம். சொல்லிட்டேன், அப்புறம் சொல்லலைன்னு வருத்தப் படக்கூடாது.....

இதையும் மீறி தமன்னாவ இதுல எவனும் இழுத்தீங்க, அப்புறம் தலைப்பு தான் !நாதியத்த விஜய்க்கு :

விடுங்க பாஸ்... இவங்க எப்பவுமே இப்படிதான்... இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?? நீங்க கலைச்சேவையை தொடருங்கள். உங்கள நம்பித்தான் SMS டீமும், சில பல பதிவர்களும் இருக்காங்க!


தல அஜித்:

அடுத்து நம்ம கிட்ட தான் வருவாங்க! உஷாரு!

*******************************************************************


பதிவு போட்டு ஒரு வாரத்துக்கு மேல ஆகுதுங்க. என்ன எழுதன்னு தெரியாம கிறுக்குபபுடிச்ச மாதிரி அலைஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நெனைக்கிறீங்களா?

அதான் இல்ல, நம்ம தங்க தலைவி தமன்னாவுக்காக ஒரு சாப்ட்வேர் எழுதும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். இப்போ சமீபத்தில தமன்னா நடிச்ச சுறா ன்னு ஒரு படம் வந்திருக்கு. அந்தப் படத்த நிம்மதியா பாக்க முடியலைங்க. ஒரு கருவாப்பைய அடிக்கடி ஸ்க்ரீன்ல வந்து இம்சை பண்றான், அவன் தான் படத்தில தமன்னாவ காதலிக்கிறான். சரி கருமம் பண்ணித் தொல, அதுக்காக நம்ம ஆள ரசிக்கலாம்னு பார்த்தா அவனையே அடிக்கடி காமிச்சி கடுப்பேத்துரானுங்க.அதான் ஒரு சாப்ட்வேர் எழுதிக்கிட்டு இருக்கேன், இனிமே தமன்னா நடிச்ச படத்தில தமன்னா வர்ற சீன் மட்டும் நீங்க பார்க்கலாம், கூட எவனாவது வந்தா அவன் மூஞ்சி அழிஞ்சு போய்டும். எல்லா சீன்லயும், எல்லா பாட்டுலயும் கண்ட நாய்ங்க இம்சை இல்லாம தலைவிய ரசிச்சுப் பார்க்கலாம். இது தமன்னா ன்னு இல்ல எல்லா நடிகைகளுக்கும் பொருந்தும், software programming ல எங்கெல்லாம் தமன்னா ன்னு வருதோ அங்கெல்லாம் உங்களுக்கு புடிச்ச நடிகை பேர மாத்திட்டா போதும்.

விலை இன்னும் தீர்மானிக்கல, R&D ல இருக்கு கூடிய சீக்கிரம் மார்க்கெட் ல வந்திடும்.
**************************************************
தங்கத் தலைவி அனுஷ்கா நடிச்ச சிங்கம் படம் ரிலீஸ் ஆயிருக்கு. எல்லாரும் பார்த்து சந்தோசமா இருங்க!

************************************************************

என்னடா இவன் விஜயப்பத்தி இவ்ளோ எழுதிருக்கான், விஜய் போட்டோ ஒன்னு கூட காணோம் ன்னு நினைக்க வேண்டாம். As per company rules, நாதாரி ஆம்பளைங்க படங்கள் எக்காரணம் கொண்டும் உபயோகப்படுத்துவதில்லை ன்னு சத்தியம் பண்ணிருக்கோம் (தலைவர் படம் விதிவிலக்கு). ஆம்பளைங்கள எவ்ளோ திட்டி, கேவலப்படுத்தி எழுதலாம், எவனும் கேள்வி கேக்க மாட்டான்!

பெண்களை திட்டு எழுதுவதில்லை....ஏன்னா தமன்னா, அனுஷ்கா இருவரும் பெண்கள் எனும் காரணத்திற்க்காக......

இப்போ தலைப்பு எனக்கு சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்!

என்ன ஆனாலும்

என்றும் என்றென்றும் தமன்னா, அனுஷ்கா வழியில்,

31 comments:

ILA(@)இளா said...

//வழிக்காத/
தாடியைத்தானே?

பனங்காட்டான் said...

//விடுங்க பாஸ்... இவங்க எப்பவுமே இப்படிதான்... இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?? நீங்க கலைச்சேவையை தொடருங்கள். உங்கள நம்பித்தான் SMS டீமும், சில பல பதிவர்களும் இருக்காங்க!//
:)

விஜய் வெச்சுத்தான் நம்ம பொழப்பும் ஓடிக்கிட்டு இருக்கு. சார் நீங்க சுறாக்கடியால் பலமாகப் பாதிக்கப்பட்டு இருக்கீங்க. நம்ம கடைப்பக்கம் வந்து ட்ரீட்மென்ட் எடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்

மசக்கவுண்டன் said...

Software ல எனக்கு ஒரு காப்பி ரிசர்வ் பண்ணீடுங்க.

ஜெய்லானி said...

அனுஷ்கா படம் போட்டதால போனாப்போவுது ஒரு நல்ல ஓட்டும் ஒரு கள்ள ஓட்டும் போடரேன் பொழச்சு போவுது.

மசக்கவுண்டன் said...

அப்பறம் பருப்பு, எங்க ஊர்ல வெளக்குமாறு சலீசா கெடைக்கும், வாங்கி அனுப்பட்டுமா? கொஞ்சம் அட்வான்ஸ் வேணும், ஒரு C அனுப்பினா போதும், பருப்பு.

பட்டாபட்டி.. said...

என்னாய்யா இந்த காச்சு காச்சியிருக்கே..
எழுது..எழுது.. சாப்ட்வேர் எழுதுறயா?..

அதை கிராக் பண்ணி, ரூபாக்கு மூணுனு விக்கல, வெளியூர்காரன் பேரை மாத்திக்கலாம்..

ILLUMINATI said...

//பாவம் அவனும் எவ்ளோ நாள் தான் வழிக்காத மாதிரி நடிப்பான் (ஆங்! விஜய் என்னைக்கு நடிச்சிருக்கான்?)
//
மாப்ள.செம காமெடி.இந்த வாரு வாருறியே...
அப்புறம் அந்த சாப்ட்வேர சீக்கிரம் ரிலீஸ் பண்ணுயா.அப்பத்தான crack போட்டு வித்து நாங்க காசு பாக்க முடியும்.... :)

நாஞ்சில் பிரதாப் said...

//உங்க எவன் கிட்டயும் செல் போன், ஈமெயில் கிடையாதா? டெய்லி இவன வச்சு தானடா செல் போன் கம்பனியும், இன்டர்நெட் டீம் பொழப்பு ஓடுது!//


ஹஹஹ யோவ் பருப்பு...சான்ஸே இல்ல ரொம்ப சிரிச்சுட்டேன். இந்த புள்ளையாண்டான் இவ்ளோ அடிவாங்கனப்புறமும் திருந்த மாட்டுறானே...அதானே அதிர்ச்சியா இருக்கு...

என்ன எழவோ... நான் அவன் நடிச்ச படத்தோட போஸ்டரை கூட பார்க்கிறது கிடையாது...

அப்புறம் சாப்ட்வேர் சீக்கிரம் எழுதி ஒரு டெஸ்ட் காப்பி எனக்கு அனுப்வி வைய்யா... மறந்துடாதே...

அஹமது இர்ஷாத் said...

நல்லாருக்கே இது.. இளைய தலைவலி'க்கு எவ்ளோ சொன்னாலும் பிரியாது... ஆனா தல சைலன்ட் தெரியுமில்லே சாது மிரண்டா காடு.......

எம் அப்துல் காதர் said...

//எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க........ இதையும் மீறி தமன்னாவ இதுல எவனும் இழுத்தீங்க, அப்புறம் தலைப்பு தான்!//

- அது..... அப்படி போடு தல!

இருந்தாலும் அனுஷ்காவை சேலையோடு உள்ள போட்டோவை போட்டதால வோட்டு போடா யோசனையா இருக்கு பாஸு! அந்த சாப்ட்வேர் எனக்கு ஒன்னு ரிசர்வ் பண்ணிடு தல!

Phantom Paruppu said...

ILA(@)இளா said...

//வழிக்காத/
தாடியைத்தானே?
///////////////////////////////////////////

தடியும், அப்புறம் வலிக்காத "ழ" நாறிப் போச்சு.

Phantom Paruppu said...

மசக்கவுண்டன் said...

Software ல எனக்கு ஒரு காப்பி ரிசர்வ் பண்ணீடுங்க.
//////////////////////////////////////////////

சாப்ட்வேர் க்கு இப்பவே பொது மக்கள் கிட்ட மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கு, மதத்தவன மாதிரி இத வச்சு காசு பார்க்காம, குஷ்பூ கிட்ட சொல்லி கழக ஆட்சியின் மூலம் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவசமாக தரப்படும்

Phantom Paruppu said...

மசக்கவுண்டன் said...
/////////////////

சார் C ன்ன என்ன சார் சாக்லேட்டா?

Phantom Paruppu said...

பட்டாபட்டி.. said...

என்னாய்யா இந்த காச்சு காச்சியிருக்கே..
எழுது..எழுது.. சாப்ட்வேர் எழுதுறயா?..அதை கிராக் பண்ணி, ரூபாக்கு மூணுனு விக்கல, வெளியூர்காரன் பேரை மாத்திக்கலாம்..
////////////////////////////////////////////

பின்ன என்ன பட்டா, இன்னைக்கு விஜய் "நடிச்சு" ஒடலைன்னு காசு கெட்டவங்க, நாளைக்கு குஷ்பூ நடிக்காததால ஒடலைன்னு காசு கேப்பானுங்க! அதப் பாத்திட்டு சும்மா இருக்க நம்ம என்ன சொம்பையா?

எதுக்குய்யா சரக் பண்ணிக்கிட்டு, குஷ்பூ கிட்ட சொல்லி இலவசமா வீட்டுக்கு வீடு குடுக்குறோம்! Don't worry, Be happy... அப்புறம் வெளியூர்க்காரன் என்ன ஆளையே காணும்?

Phantom Paruppu said...

ILLUMINATI said...
மாப்ள.செம காமெடி.இந்த வாரு வாருறியே...
//////////////////////////
என்ன மச்சான் பண்றது, நாதியத்த அம்பாளைய எவ்ளோ கேவலப்படுத்துனாலும் எவனும் கேக்க மாட்டேங்கிறானே?

Phantom Paruppu said...

நாஞ்சில் பிரதாப் said...
என்ன எழவோ... நான் அவன் நடிச்ச படத்தோட போஸ்டரை கூட பார்க்கிறது கிடையாது...
////////////////////////////////////////

அடப்பாவி உன் வாழ்க்கையில் பொன்னான தருணங்களை நீ வேஸ்ட் பண்ணிட்ட? உங்களுக்காக தான் ஒரே நேரத்தில மூணு படம் நடிக்கிறானாம்.

Phantom Paruppu said...

ஜெய்லானி said...

அனுஷ்கா படம் போட்டதால போனாப்போவுது ஒரு நல்ல ஓட்டும் ஒரு கள்ள ஓட்டும் போடரேன் பொழச்சு போவுது.
////////////////////////////////////////////////

அனுஷ்காதாசனே வருக வருக! உனக்காகத்தான்யா அனுஷ்கா படம் போட்டு சும்மா ரெண்டு வரி எழுதினேன்! இல்லன்னா தெய்வ குத்தம் ஆயிறாது

Phantom Paruppu said...

அஹமது இர்ஷாத் said...

நல்லாருக்கே இது.. இளைய தலைவலி'க்கு எவ்ளோ சொன்னாலும் பிரியாது... ஆனா தல சைலன்ட் தெரியுமில்லே சாது மிரண்டா காடு.......
///////////////////////////////////////

நீங்க நம்மாளா? ஹி ஹி ஹி சந்தோசம் சந்தோசம்

Phantom Paruppu said...

எம் அப்துல் காதர் said...

//எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க........ இதையும் மீறி தமன்னாவ இதுல எவனும் இழுத்தீங்க, அப்புறம் தலைப்பு தான்!//

- அது..... அப்படி போடு தல! இருந்தாலும் அனுஷ்காவை சேலையோடு உள்ள போட்டோவை போட்டதால வோட்டு போடா யோசனையா இருக்கு பாஸு! அந்த சாப்ட்வேர் எனக்கு ஒன்னு ரிசர்வ் பண்ணிடு தல!
/////////////////////////////////////////

பாஸ் அனுஷ்கா குடும்பப் பொண்ணுன்னு காட்டத்தான் இந்த சேலை. உங்கள் கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்! don't worry.. எங்க சொல்லுங்க அனுஷ்கா வாழ்க! தமன்னா வாழ்க!

யோவ் ஜெய்லானி, நம்ம தாசன்கள் படை கூடிட்டே போகுத்துய்யா! ஹய் ஜாலி, 2011 நம்ம கைல தான்.

ஜெய்லானி said...

//யோவ் ஜெய்லானி, நம்ம தாசன்கள் படை கூடிட்டே போகுத்துய்யா! ஹய் ஜாலி, 2011 நம்ம கைல தான்./

அப்ப சீக்கிரமா ஒரு பிளாக் போட்டுட வேண்டியதுதான்.பாத்தியா அனுஷ்கா போட்டோ பாத்தே ஒட்டு எத்தனை விழுது..கண்டினியூ....கண்டினியூ...

Ponkarthik said...

என்ன சகா உங்களுக்கும் விஜய்க்கும் எதாவது முன்விரோதமா? ஒருவன் குனிந்தால் குனியக் குனியக் கொட்டும் சமுதாயம்தானே சகா இது? விஜய் ஒரே மாதிரி நடிகின்றார் என்பது தானே மூல காரணம். நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் அவரை கிண்டல் செய்யும் சாக்கில் திரும்ப திரும்ப அதே (மற்றவர் எழுதுவது போல்) எழுதுகிறீர்? கொஞ்சம் யோசிங்க சகா.

Phantom Paruppu said...

Ponkarthik said...
//////////////////////////////

இன்னைக்கு நேத்து இல்ல, எப்போ "இவன் பாத்தா சின்ன ரஜினி தான்" ன்னு பிர்யமுடன் படத்தில பாடுனானோ, அப்பவே மானசீகமா அவன் ஜென்ம விரோதி ஆகிட்டான்!

எல்லாரும் மூணு வேளை சாப்பிடுறாங்கன்னு சொல்லி நாம ஒரு வேளை சாப்பிட முடியுமா பாஸ்! (அடங்கோனியா தத்துவம் பயங்கரமா இருக்கே!). அதுவும் இல்லாம விஜய நக்கல் பண்ணி எழுதலைன்னா நம்மள பதிவர் லிஸ்ட் ல சேர்த்துக்க மாட்டாங்களாம். நான் இதுல உண்மையத்தான் எழுதிருக்கேன், அவன நக்கல் பண்ணவே இல்லையே!!! தமன்னா மேல எனக்கு உள்ள அன்பை காட்டினேன்!!!!!!!!!

டீசன்ட்டா சொல்லனும்னா காய்ச்ச மரத்தில தான் பாஸ் கல்லடி படும்!

--------------------------------------------------------------------------------------------------
மனசு கேக்காம இத எழுதுறேன்.

இருபது வருசமா நம்ம கண்ணு முன்னாடி நம்ம சொந்த பந்தங்களை திரும்ப திரும்ப அழிச்சான்களே, நாம எதுவுமே கேக்கலையே பாஸ்!

என்ன பண்ணாலும் எவனும் கேள்வி கேக்க மாட்டான், தைரியமா என்ன வேணும்னாலும் எழுதலாம்!

Phantom Paruppu said...

Ponkarthik i forgot to say something.

My posts are all just time pass! Please, Don't take it as serious! If i write anything important, then my way of writing will be totally different. You can easily feel.

Thanks & Cheers!

Mohan

பட்டாபட்டி.. said...

Ponkarthik said...

என்ன சகா உங்களுக்கும் விஜய்க்கும் எதாவது முன்விரோதமா? ஒருவன் குனிந்தால் குனியக் குனியக் கொட்டும் சமுதாயம்தானே சகா இது? விஜய் ஒரே மாதிரி நடிகின்றார் என்பது தானே மூல காரணம். நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் அவரை கிண்டல் செய்யும் சாக்கில் திரும்ப திரும்ப அதே (மற்றவர் எழுதுவது போல்) எழுதுகிறீர்? கொஞ்சம் யோசிங்க சகா.
//

பாஸ்.. சும்மா லூஸ்ல விடுங்க..
விஜய் என்ன சுதந்திரப்போராட்ட தியாகியா?..

படிங்க..சிரிங்க.. ரிலாக்ஸா இருங்க அப்பு....

( சீரியஸ் பதிவுல, பருப்பு சீறட்டும்....அதுவரை என்ஜாய்...)

மங்களூர் சிவா said...

சூப்பர்ணா!
தமன்னா போட்டாவை சொன்னேன்!

Phantom Mohan said...

மங்களூர் சிவா said...

சூப்பர்ணா!
தமன்னா போட்டாவை சொன்னேன்!
/////////////////////////////

மிக்க நன்றி!! நானும் தமன்னாவுக்கு தான் சொன்னேன்!

ஹி ஹி சும்மா... வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க

Ponkarthik said...

\\இன்னைக்கு நேத்து இல்ல, எப்போ "இவன் பாத்தா சின்ன ரஜினி தான்" ன்னு பிர்யமுடன் படத்தில பாடுனானோ, அப்பவே மானசீகமா அவன் ஜென்ம விரோதி ஆகிட்டான்!

..........................................
என்ன பண்ணாலும் எவனும் கேள்வி கேக்க மாட்டான், தைரியமா என்ன வேணும்னாலும் எழுதலாம்!\\\


சகா நீங்கள் சொல்லிய அனைத்துமே உண்மை தான் சகா! யாரையும் அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாமே? தமன்னாவை மட்டும் அவர் என்று கூறுகிறீர். ஆனால் மற்ற அனைவரையும்?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம கடைய இன்னிக்கும் தொறந்தாச்சுங்கோவ்!

Anonymous said...

very funny

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//என்னாய்யா இந்த காச்சு காச்சியிருக்கே..
எழுது..எழுது.. சாப்ட்வேர் எழுதுறயா?..

அதை கிராக் பண்ணி, ரூபாக்கு மூணுனு விக்கல, வெளியூர்காரன் பேரை மாத்திக்கலாம்..//

//விலை இன்னும் தீர்மானிக்கல, R&D ல இருக்கு கூடிய சீக்கிரம் மார்க்கெட் ல வந்திடும்.//

நாங்க ரிலீஸே பண்ணிட்டோம் .அதுக்குள்ள தெரியாதா ?

கருந்தேள் கண்ணாயிரம் said...

//முட்டாப் பயலுகளா, 5 படம் படுதுடிச்சு,6 வது படத்த பார்க்காமலே ஏன் வாங்கினீங்க ? உங்க எவன் கிட்டயும் செல் போன், ஈமெயில் கிடையாதா? டெய்லி இவன வச்சு தானடா செல் போன் கம்பனியும், இன்டர்நெட் டீம் பொழப்பு ஓடுது! நீங்க எல்லாம் தமிழ் நாட்டுல தான இருக்கீங்க?//

;-) பயங்கரமா உளுந்து உளுந்து சிரிச்சேன் . . . :-) செம டயலாக்கு . . இத ஒலக அண்டவெளி நாயகன் ஜோஸஃப் ச்சேண்ட்ரா நடிக்கும் எல்லாப் படங்களுக்கும் தியேட்டர் வாசல்ல பேனர் எளுதி வெக்கலாமே :)

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...