தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
******************************************
நான் கேட்பது
அப்போ குருவி 150 நாள், சச்சின் 200 நாள், வேட்டைக்காரன் ஹிட் எல்லாம் பொய்யா?
சன் டிவி லே வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சுறா ன்னு போடுறான், விஜய் படம் வெற்றின்னு பேட்டி கொடுத்தான். இவனுங்க படம் மெகா தோல்வினு சொல்றானுங்க. என்னடா நடக்குது?
அப்போ! வேட்டைக்காரன் வெற்றி படம் என்று கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து எல்லாம் கொடுத்தது எல்லாம் பெரிய பட்டை நாமமா!.
சுறா படம் சூப்பர்ன்னு விமர்சனம் போட்டான் தினகரன் ல. மக்கள் வெள்ளம், ஒரு வருசத்துக்கு டிக்கெட் இல்லன்னு எல்லாம் சொன்னங்க?
முட்டாப் பயலுகளா, 5 படம் படுதுடிச்சு,6 வது படத்த பார்க்காமலே ஏன் வாங்கினீங்க ? உங்க எவன் கிட்டயும் செல் போன், ஈமெயில் கிடையாதா? டெய்லி இவன வச்சு தானடா செல் போன் கம்பனியும், இன்டர்நெட் டீம் பொழப்பு ஓடுது! நீங்க எல்லாம் தமிழ் நாட்டுல தான இருக்கீங்க?
இவன வச்சு எவ்ளோ சம்பாதிச்சிருப்பீங்க, அப்பெல்லாம் இவனைக் கூப்பிட்டு பங்கு குடுத்தீங்களா?
இவன் ஹீரோ தானடா, எவன் உனக்கு படம் வித்தானோ அவனப் போய் கேளுங்க. அதுக்கு தைரியம் இல்லாம ஒருபுள்ளப் பூசியப் போட்டு என்னா அடி?
பாவம் அவனும் எவ்ளோ நாள் தான் வழிக்காத மாதிரி நடிப்பான் (ஆங்! விஜய் என்னைக்கு நடிச்சிருக்கான்?)
எச்சரிக்கை (யாருக்கு யாருக்கோ) :
இந்த பாருங்கடா மேல கேட்ட கேள்வி எல்லாம் சரி, விஜய்க்கு கேக்க நாதி கிடையாது, அதனால அவன்கிட்ட படம் படுத்துக்கிச்சு காசு குடுன்னு கேட்ட மாதிரி எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க...எத்தன கொலை விழும்னு எனக்கே தெரியாது, எவனா இருந்தாலும் அவனுக்கு சாவு தான். குறைந்த பட்சம் தெருவுக்கு ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லைன்னா நாங்க கொளுத்துவோம்.

இந்த தந்தி அடிக்கிறது, ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இதெல்லாம் கிடையாது, நாங்கெல்லாம் சோறு திங்கிரவைங்க. தமன்னா மேல ஒரு தூசி விழுந்தாலும் தமிழ் நாடே பத்தி எரியும், கொளுத்தி விட்டு போயிட்டே இருப்போம். சொல்லிட்டேன், அப்புறம் சொல்லலைன்னு வருத்தப் படக்கூடாது.....
இதையும் மீறி தமன்னாவ இதுல எவனும் இழுத்தீங்க, அப்புறம் தலைப்பு தான் !
நாதியத்த விஜய்க்கு :
விடுங்க பாஸ்... இவங்க எப்பவுமே இப்படிதான்... இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?? நீங்க கலைச்சேவையை தொடருங்கள். உங்கள நம்பித்தான் SMS டீமும், சில பல பதிவர்களும் இருக்காங்க!
தல அஜித்:
அடுத்து நம்ம கிட்ட தான் வருவாங்க! உஷாரு!
*******************************************************************
பதிவு போட்டு ஒரு வாரத்துக்கு மேல ஆகுதுங்க. என்ன எழுதன்னு தெரியாம கிறுக்குபபுடிச்ச மாதிரி அலைஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நெனைக்கிறீங்களா?
அதான் இல்ல, நம்ம தங்க தலைவி தமன்னாவுக்காக ஒரு சாப்ட்வேர் எழுதும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். இப்போ சமீபத்தில தமன்னா நடிச்ச சுறா ன்னு ஒரு படம் வந்திருக்கு. அந்தப் படத்த நிம்மதியா பாக்க முடியலைங்க. ஒரு கருவாப்பைய அடிக்கடி ஸ்க்ரீன்ல வந்து இம்சை பண்றான், அவன் தான் படத்தில தமன்னாவ காதலிக்கிறான். சரி கருமம் பண்ணித் தொல, அதுக்காக நம்ம ஆள ரசிக்கலாம்னு பார்த்தா அவனையே அடிக்கடி காமிச்சி கடுப்பேத்துரானுங்க.

அதான் ஒரு சாப்ட்வேர் எழுதிக்கிட்டு இருக்கேன், இனிமே தமன்னா நடிச்ச படத்தில தமன்னா வர்ற சீன் மட்டும் நீங்க பார்க்கலாம், கூட எவனாவது வந்தா அவன் மூஞ்சி அழிஞ்சு போய்டும். எல்லா சீன்லயும், எல்லா பாட்டுலயும் கண்ட நாய்ங்க இம்சை இல்லாம தலைவிய ரசிச்சுப் பார்க்கலாம். இது தமன்னா ன்னு இல்ல எல்லா நடிகைகளுக்கும் பொருந்தும், software programming ல எங்கெல்லாம் தமன்னா ன்னு வருதோ அங்கெல்லாம் உங்களுக்கு புடிச்ச நடிகை பேர மாத்திட்டா போதும்.
விலை இன்னும் தீர்மானிக்கல, R&D ல இருக்கு கூடிய சீக்கிரம் மார்க்கெட் ல வந்திடும்.
**************************************************

தங்கத் தலைவி அனுஷ்கா நடிச்ச சிங்கம் படம் ரிலீஸ் ஆயிருக்கு. எல்லாரும் பார்த்து சந்தோசமா இருங்க!
************************************************************
என்னடா இவன் விஜயப்பத்தி இவ்ளோ எழுதிருக்கான், விஜய் போட்டோ ஒன்னு கூட காணோம் ன்னு நினைக்க வேண்டாம். As per company rules, நாதாரி ஆம்பளைங்க படங்கள் எக்காரணம் கொண்டும் உபயோகப்படுத்துவதில்லை ன்னு சத்தியம் பண்ணிருக்கோம் (தலைவர் படம் விதிவிலக்கு). ஆம்பளைங்கள எவ்ளோ திட்டி, கேவலப்படுத்தி எழுதலாம், எவனும் கேள்வி கேக்க மாட்டான்!
பெண்களை திட்டு எழுதுவதில்லை....ஏன்னா தமன்னா, அனுஷ்கா இருவரும் பெண்கள் எனும் காரணத்திற்க்காக......
இப்போ தலைப்பு எனக்கு சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்!
என்ன ஆனாலும்
என்றும் என்றென்றும் தமன்னா, அனுஷ்கா வழியில்,
