Pages

சினிமா ரொம்ப ஈசிங்க!! லோ பட்ஜெட் படம்

"சினிமா ரொம்ப ஈசிங்க!! - டிரைலர் " இதோட தொடர்ச்சி தான் இந்த பதிவு...


லோ பட்ஜெட் படம் எப்டி எடுக்கிறதுன்னு இப்போ பாப்போம்...

தேவையானவை :

ப்ரோடுயுசர் - 1
நடிகர், நடிகைகள் - தேவையான அளவு
இசை - 1
கேமரா மென் - 1
ஒரு வீடு, ஒரு தெரு, அஞ்சு பாட்டு, மூணு பைட்டு...

நல்ல ஞாபகம் இருக்கட்டும் இது லோ பட்ஜெட் படம்...எவ்ளோ முடியுமோ, அவ்ளோ சிக்கனமா படம் எடுக்குறோம்

ஒரு வீடு அந்த வீட்ல ஒரு கேன்சர் அம்மா ரெண்டு பையன், மூணு பொண்ணுங்க அல்லது ஒரு ஹர்ட் அட்டாக் அப்பா அஞ்சு பொண்ணுங்க...

நமக்கு
முதலாவது ஓகே
ஆர்டிஸ்ட்
எல்லாம் உங்களுக்கு சீரியல், சன் மியூசிக் ல கிடைப்பாங்க...இப்போ கேன்சர் அம்மாவுக்கு படம் முழுக்க ஒரே ஒரு புடவை தான்...மூத்த பையன் தான் ஹீரோ, பாட்டுல மட்டும் புது டிரஸ் போட்டா போதும், சோ பசங்க ரெண்டு பேரையும் மில் தொழிலாளியா காட்டுவோம்...காக்கி & காக்கி தான் யுனிபார்ம்...முடிஞ்சா டூயட் ல கூட அவன் யுனிபார்ம் போட்டு ஆடட்டும்...ங்கொய்யால கனவுல கூட அவன் கடமை தவற மாட்டான்னு சொல்லிடலாம்...

பொண்ணுங்க மூணு பெரும் ஸ்கூல் படிக்கிறாங்க..அவங்களுக்கும் யுனிபார்ம் தான்...அதுல ஒருத்தி 12th படிக்கிறா...அவல ஒருத்தன் லவ் பண்றான்...அவன் அவுங்க ஹவுஸ் ஓனர் பையன்...அவன் பிச்சா ஹுட் ல வேல பாக்குறான்..சோ அவனுக்கும் யுனிபார்ம் இருக்கு...ஒரே ஒரு பைக் மட்டும் எக்ஸ்ட்ரா செலவு, அதுக்கும் எதாவது பண்ணுவோம்...

வேண்டாம் அவன் படிச்சு முடிச்சிட்டு வேல இல்லாம வீட்ல தண்டசோறு திங்குறான்...சூப்பர்.... அவனுக்கு சட்டையே வேண்டாம், ஒரு பனியன் ஒரு கைலி...தொலஞ்சான் அவனும்..இப்போ ஒரு ஹீரோயன் வேணும்...சன் மியூசிக் ல சீப்பா எதாவது எடுத்துப் போடுவோம்..அவ பக்கத்து வீட்ல தையல் காரி பொண்ணு...ரெண்டு தையல் மெசின் போதும்...ஆத்தாளும் மவளும் படம் முழுக்கு அத மிதிச்சு கிட்டே இருக்காளுக...

இப்போ ஹீரோ மேல ஹீரோயின்னுக்கு லவ்...ஆனா ஹீரோ தம்பிக்கு அவ மேல ஒன் சைடு லவ் ...சோ ஆளுக்கு ஒரு டூயட்...அந்த தெருவுக்குள்ள ஒன்னு...அவ வீட்லயம் இவன் வீட்லயும் மாறி மாறி ஒன்னு...ஹீரோ தங்கச்சி டூயட், அவங்க ஸ்கூல் கிரௌண்ட் ல வச்சு...ஒரு பாட்டு தீபாவளி அன்னைக்கு எல்லாக் குடும்பமும் சேர்ந்து பாடுற பாட்டு...ஒரு பாட்டு சோக பாட்டு, அதுக்கென்ன அமெரிக்க வா போக முடியும், கழுத அவன் அவன் வீட்டுக்குள்ளே கதறி அழுது கிட்டே பாடுறானுங்க...செண்டிமெண்ட் ரொம்ப முக்கியம்...ஹீரோ தன் தங்கச்சிக்கு சமைக்கிறது எப்டின்னு சொல்லி குடுக்கிறான் ( அதுக்கு நீங்க நம்ம சமயல் பதிவர்கள் கிட்ட இருக்கிறதிலே சீப்பா என்ன பண்ணலாம் ன்னு கேட்டுக்கோங்க ) இன்னொரு தங்கச்சிக்கு கோலம் போடறது எப்டின்னு சொல்லி குடுக்கிறான்...இதப் பாத்து அவங்க அம்மா சந்தோசத்தில சிரிக்கிறா...நடு நடுவுல ரெண்டு மொக்க காமெடி இந்த குமுதம், குங்குமம் ல வர்ற காமெடியா பாத்து போடுறோம்....

இந்த கேமரா ஆங்கிள் எல்லாம் அந்த வீடு, தெருவ சுத்தியே இருக்கணும்...செண்டிமெண்ட் சீன் ல மியூசிக் போடுறோம்...பாட்டுக்கு மியூசிக் கண்டிப்பா வேணும்..சோ மத்த நேரம், அது வேண்டாம் செலவு மிச்சம்....

இப்போ ஒரு ட்விஸ்ட் வேணும்... ஹவுஸ் ஓனர் தன் பையனுக்கு ஹீரோயின பேசி முடிக்கிறான்...இதக் கேள்விப் பட்ட ஹீரோ தங்கச்சியும், ஹீரோ தம்பியும் விஷம் குடிச்சு செத்துப் போறாங்க..ரெண்டு விக்கெட் அவுட்டு...ஹீரோ ஹவுஸ் ஓனர் கிட்ட சபதம் விடுறான் ...இதே தெருவுல நான் ஒரு வீடு கட்டி வாடகைக்கு விடுறேன்ன்னு....

ஹீரோ தன் குடும்பத்தோட நடுத்தெருவுக்கு வந்திட்டான்...இப்போ ஹீரோ கான்செர் அம்மாவையும், ரெண்டு தங்கச்சியையும் காப்பாத்தணும்...வீடு கட்டி வாடகைக்கு விடனும்...இங்க இண்டர்வல் விடுறோம்...

ஒரு நாள் ஹீரோ சொல்லிக் குடுத்த பலகாரத்த ஹீரோ தங்கச்சி யாருக்கும் தெரியாம செஞ்சு பாக்குறா ...அதப் புடுங்கித் தின்ன அவங்க அம்மா ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுறாங்க...ஹாஸ்பிட்டல்ல டாக்டர் பைத்தியம் புடிச்ச மாதிரி THIS IS MEDICAL MIRACLE ன்னு கத்துறார்...என்னா அவுங்க அம்மாவுக்கு கேன்சர் சரியாப் போச்சு...தங்கச்சி குடுத்த தின்னு தான் அவங்களுக்கு கேன்சர் குணமாச்சு...ஹீரோ சந்தோசத்தில சிரிக்கிறான்..நாடு முழுக்க இந்த நியூஸ் பரவிடுச்சு...வெளி நாட்டு கம்பனிகள் படையெடுத்து வந்து அந்த பலகாரத்தோட காப்பி ரைட்ஸ் கேக்குறாங்க....ஆனா ஹீரோ தான் சொந்தமா தங்கச்சிய வச்சு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு பலகாரம் தயார் பண்ணி எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி பண்றான்...உலக கோடீஸ்வரன் ஆகுறான்...ஜனாதிபதி அவார்ட் குடுக்குறார்...சபதத்தில ஜெயிக்குறான்...சுபம்

இப்போ பாருங்க செலவே இல்லாம ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்தாச்சு....

மீடியம் பட்ஜெட் நாளைக்கு, வர்ர்ட்டா...பின்குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நடிகைகள் லோ பட்ஜெட்டுக்கு லாயக்கற்றவர்கள்....


Copyright © 2010 http://cute-paruppu.blogspot.com. All rights reserved26 comments:

MUTHU said...

பின்குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நடிகைகள் லோ பட்ஜெட்டுக்கு லாயக்கற்றவர்கள்////////


அதெப்படி சொல்லுற அவங்க போடுற டிரெஸ்ஸை பார்த்தால் லோ பட்ஜெட் மாதிரி தானே இருக்கி !!!!!!!!!!!!!!!

MUTHU said...

எதுக்கும் இந்த கதைக்கு காப்பி ரைட்ஸ் வாங்கிடு அப்போ தானே நீயும் உலக பணக்காரன் லிஸ்டில் சேர முடியும்

நாஞ்சில் பிரதாப் said...

செம காமெடி... காஸ்ட்யும் மேட்டர் கலக்கல்,

ஆக... விசுபடம், வி.சேகர் படம் எல்லாத்தையும் கலந்துகட்டி பொளந்து கட்டிட்டீருவோய்...

ஜெய்லானி said...

எங்கேயா நமிதா , அனுஷ்கா படம் யார் யாரோ இருக்காங்க!!

ஜெய்லானி said...

எதுக்கு இவ்ளோ கஷ்டம் , போசாம கேரளா போனா எப்படியும் லோ பட்ஜட்டுக்கு ஈஸியா ஐடியா கிடைச்சுடும் .

(அண்ணா நகர் முதல் தெரு படம் பாக்கலயா ?)

Riyas said...

SUPERB

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ரசிக்க வைக்கிறது உங்களின் முயற்சி . வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றி !

பட்டாபட்டி.. said...

ஏம்பா.. காசு பணம் ரொம்ப இருக்கா?..

லோ பட்ஜெட் படம் எடுக்க அணுகவும் தேவ நாதாரி..

இயற்கை வெளிச்சம்,
உள்ளூர் லொகேஷன்,
அவரே நடிகரும், தயாரிப்பாளரும்
விலை குறந்த செல்போனில
புரட்சிகரமான படங்களை எடுப்பதில வல்லவர்..

ILLUMINATI said...

பட்டு,உன் ஐடியாயாவ விட நல்ல ஐடியா ஒண்ணு இருக்கு.

ஆண் பெண்ணுக்கு ஊடால இருக்குற 'புனிதமான உறவு' பத்தி படம் எடுக்கணுமா?அதுக்கு ஆள் இருக்கு பாஸ்.செம ஹிட் ஆகும்.ப்ரீ விளம்பரம் எல்லாம் தருவானுங்க டிவில.
கான்டக்ட் நித்தி......

பருப்பு The Great said...

MUTHU said...

எதுக்கும் இந்த கதைக்கு காப்பி ரைட்ஸ் வாங்கிடு அப்போ தானே நீயும் உலக பணக்காரன் லிஸ்டில் சேர முடியும்
//////////////////////

Copyright © 2010 http://cute-paruppu.blogspot.com. All rights reserved

ஏற்க்கனவே வாங்கியாச்சு..அதுவுமில்லா சினிமாக்காரனுக்கு ஒண்ணுன்னா என் பாசத் தலைவன் வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு தள்ளு வண்டி ல வந்து கண்டமானைக்கு கண்டன அறிக்கை விடுவான்...அதுக்குத்தான அவன CM ஆக்கிருக்கு....

பருப்பு The Great said...

நாஞ்சில் பிரதாப் said...

செம காமெடி... காஸ்ட்யும் மேட்டர் கலக்கல்,

ஆக... விசுபடம், வி.சேகர் படம் எல்லாத்தையும் கலந்துகட்டி பொளந்து கட்டிட்டீருவோய்...
///////////////////////////////////////

எல்லாவன் டௌசரையும் கிளிக்கனும்ன்னு முடிவு பண்ணேன்..வேண்டாம்ன்னு டீசன்ட்ட போட்டுருக்கேன்...

பருப்பு The Great said...

ஜெய்லானி said...

எங்கேயா நமிதா , அனுஷ்கா படம் யார் யாரோ இருக்காங்க!!
/////////////////////////////

யோவ் ஜெய்லானிலானி என்ன கொலைகாரனா மாத்தாத...என்னைவிட பெரிய அனுஷ்கா வெறியான இருப்ப போலே...நம்ம ரெண்டு பேரும் அனுஷ்காதாசன் ன்னு ஒரு புது ப்ளாக் ஓபன் பண்ணி கலைச்சேவை பண்ணுவோமா?

பருப்பு The Great said...

Riyas said...

SUPERB ர்ப்
//////////////////////

Thank யு Riyas ...

பருப்பு The Great said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ரசிக்க வைக்கிறது உங்களின் முயற்சி . வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றி !
////////////////////////////////

ரசித்தமைக்கு நன்றி!

பருப்பு The Great said...

பட்டாபட்டி.. said... ஏம்பா.. காசு பணம் ரொம்ப இருக்கா?..

லோ பட்ஜெட் படம் எடுக்க அணுகவும் தேவ நாதாரி..
//////////////////////////////////

ஹீரோயின் வருங்கால MLC இல்லையே...

MUTHU said...

பருப்பு The Great said...
ஏற்க்கனவே வாங்கியாச்சு..அதுவுமில்லா சினிமாக்காரனுக்கு ஒண்ணுன்னா என் பாசத் தலைவன் வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு தள்ளு வண்டி ல வந்து கண்டமானைக்கு கண்டன அறிக்கை விடுவான்...அதுக்குத்தான அவன CM ஆக்கிருக்கு..../////

அப்போ அவரையே திரைகதை எழுத வைச்சுட்டா படத்துக்கு பப்ளிசிட்டி கிடைச்சுடும் இல்ல

MUTHU said...

பருப்பு The Great said...
யோவ் ஜெய்லானிலானி என்ன கொலைகாரனா மாத்தாத...என்னைவிட பெரிய அனுஷ்கா வெறியான இருப்ப போலே...நம்ம ரெண்டு பேரும் அனுஷ்காதாசன் ன்னு ஒரு புது ப்ளாக் ஓபன் பண்ணி கலைச்சேவை பண்ணுவோமா?////////


என்னையும் பட்டுவையும் விட்டு விட்டு ப்ளாக் ஓபன் பண்ணினால் உங்கள் ப்ளாக் தடை செய்யப்படும் ஜாக்கிரதை

இப்படிக்கு
அனுஷ்கா இளைஞர் அணி படை தளபதிகள்

MUTHU said...

பருப்பு The Great said...

பட்டாபட்டி.. said... ஏம்பா.. காசு பணம் ரொம்ப இருக்கா?..

லோ பட்ஜெட் படம் எடுக்க அணுகவும் தேவ நாதாரி..
//////////////////////////////////

ஹீரோயின் வருங்கால MLC இல்லையே.../////
அப்போ திர்ளர் படத்துக்கு நம்ம செரீனா வேண்டுமானால் போட்டுக்கலாம்

ILLUMINATI said...

அப்புறம்,காஜல் அகர்வால் படம் போட்டதுக்கு ரொம்ப டாங்க்ஸு பா...

ரிஷபன் said...

பருப்பு,

என்னப்பா இது விக்ரமன் படத்தில ஒரே பாட்டில் ஹீரோ கோடீஸ்வரன் ஆகிற மாதிரி எங்கயோ போய்ட்ட .

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

யாதவன் said...

superb ha ha ha

மங்குனி அமைச்சர் said...

//ஒரே ஒரு பைக் மட்டும் எக்ஸ்ட்ரா செலவு, அதுக்கும் எதாவது பண்ணுவோம்...///


யோவ், சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கல்லாம்

Chitra said...

கலக்கல் காமெடி (லோ-budget அல்ல) ...... சிரிச்சு முடியல....

ஜெய்லானி said...

//யோவ், சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கல்லாம்//

எதுக்கும் அரை சைக்கிளா பாருய்யா .ஹீரோவுக்கு எட்டு வயசுதானே !!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

உங்க புது பெயர் நல்லாருக்குங்க,இன்னும் சிக்னேச்சரில் மாறலையே?

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...