Pages

சினிமா ரொம்ப ஈசிங்க - டிரைலர்என்னோட 23 வருஷ சினிமா அனுபவத்தில நான் இத எழுதப்போறேன் (ஆமாங்க எனக்கு 26 வயசாகுது எனக்கு தெரிஞ்சு 3 வயசுல இருந்து படம் பாக்கிறேன்..இது போதாதா?)...இப்போ நான் உங்க எல்லாருக்கும் டீச்சர் ஆயிட்டேன்...ஆமாங்க ஆமா சினிமா எப்படி எடுப்பதுன்னு உங்களுக்கு கத்துத் தரப் போறேன்...(பய புள்ளைகளுக்கு சந்தோசத்தைப் பாரு ) இதுக்கு எனக்கு குரு தட்சணை எல்லாம் ஒன்னும் வேண்டாம்...

சினிமாங்கிறது ஒரு தவம் மாதிரி...எல்லாருக்கும் வராது..அது ஒரு கலை..நம்மள முழுசா அதுக்கு அர்ப்பணிக்கணும்...கடுமையா உழைக்கணும்...நெறைய சிந்திக்கணும்....எல்லாத்துக்கும் மேல dedication, sincerity, creative mind வேணும்...இப்டி எல்லாம் யாரவது நெனச்சிருந்த்தாலோ, இல்ல உங்களுக்கு யாராவது சொல்லிருந்தாலோ, இது மேல எல்லாம் நம்பிக்க இருந்தாலோ அப்டியே ஓடிப் போய்டுங்க...நீங்க இதுக்கு லாயக்கு இல்ல...

சினிமாவ கெடுக்கிறது சாரி எடுக்கிறது எப்டின்னு நான் சொல்றேன்...இது ஒன்னும் ரூல்ஸ் பலோ பண்ற மாதிரி கஷ்டம் இல்லேங்க...ஓட்டுக்கு துட்டு வாங்குற மாதிரி சப்ப மேட்டர்....

இது சும்மா டிரைலர் தான் உங்களுக்காக நான் கஷ்டப்பட்டு, ரொம்ப ஈசியா சொல்லித் தர்றேன்...சினிமா ல மொத்தம் ஆறு வகை...

லோ பட்ஜெட் - V சேகர், T P கஜேந்திரன் படங்கள்
மீடியம் பட்ஜெட் - K S ரவிக்குமார், விக்ரமன் படங்கள்
ஹை பட்ஜெட் - சங்கர் படம்
அவார்ட் படம் - மணி ரத்னம் , பாலா padangal

ரெண்டு லாஸ்ட் செமஸ்டர் ல வரும்

அவ்ளோ தான்...

இது ஒவ்வொன்னும் எப்டி எடுக்கிறதுன்னு அடுத்த பதிவுல நான் சொல்றேன்...

வர்ட்டா............
12 comments:

சேட்டைக்காரன் said...

ஸ்ரேயா படம் போடலியா? ஓட்டுப்போட மாட்டேன் போங்க!

ஜெய்லானி said...

அனுஷ்கா , நமிதா படம் இல்லாட்டி நானும் ஓட்டு போடமாட்டேன் ஆமா சொல்லிட்டேன்.

ஆமா இந்த புள்ளக யாரு ????????

பருப்பு The Great said...

யோவ் ஜெய்லானி, அந்த கரும்ப கடிச்சிக்கிட்டு இருக்கிற புள்ள நம்ம அனுஷ்கா தான்யா...என்னய்யா நீங்க போட்டோ போட்டாலும் திட்றீங்க போடட்டீயும் திட்றீங்க...உடுய்யா அடுத்த பதிவுல உங்கள் ஆசை நிறைவேத்தப்படும்...

பருப்பு The Great said...

இந்தப் பதிவும் TAMILISH பிரன்ட் பேஜ் ல வந்திடுச்சு....அதுவும் அப்லோட் பண்ண அரை மணி நேரத்தில்... எ டண்ட நக்க..எ டனக்கு நக்க...

வெற்றி, வெற்றி, வெற்றி HAT TRICK வெற்றி...தொடர்ந்து மூணு பதிவு பிரன்ட் பேஜ் ல...ஹய்யோ ஹய்யோ...நான் எங்க போய் சொல்லுவேன், யாருக்கிட்ட சொல்லுவேன்..நீங்க கேளேன்..அய்யா நீ கேளேன்..

ங்கொக்க மக்கா...நான் அகில உலக பிரபல பதிவர் ஆயிட்டேன்..

இது வரைக்கும் எந்த பதிவுக்கும் நான் ஒட்டு போடுங்க, கமென்ட் போடுங்கானு கேட்டது இல்ல...ஆனாலும் வோட்டுப் பட்ட மக்கா நன்றி நன்றி நன்றி....என்னை மடயனாக்கிய உங்கள் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்....

மீண்டும் மீண்டும் வாங்க! படிங்க சந்தோசமா குஜால இருங்க...

ஆனா பாலோயர்ஸ் லிஸ்ட்ல 11 தான் இருக்கு...அதுக்கு ஏதாவது ஒன்னு பண்ணனும்...எவனும் செய்வின வச்சிட்டானா?

மசக்கவுண்டன் said...

பருப்பு, நானும் வந்திட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பருப்பு எங்கய்யா சாவித்திரி,சரோஜா தேவி படம். நான் சேட்டைக்காரனுக்காகதான் கேட்டேன். ஹி ஹி

நாஞ்சில் பிரதாப் said...

யோவ்... மனசுல என்ன பாலமகேந்திரான்னு நினைப்போ...?

என் பிளாக்கை பார்த்து பிளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லும்போதே நினைச்சேன்...மொக்கையாத்தான் இருக்கும்னு.... :)

ஆமா அதுக்கு ஏன்வே ஒரே குஜிலி படங்களா போட்டிருக்கீரு...நீரு சினிமா கத்துக்கொடுக்கறமாதிரி தெரிலவோய் வேறமாதிரி தோனுது...

பருப்பு The Great said...

நாஞ்சில் பிரதாப் said...

ஆமா அதுக்கு ஏன்வே ஒரே குஜிலி படங்களா போட்டிருக்கீரு...
//////////////////////

என்னன்னே பண்றது, கள்ளக் காதலைக் கூட வெளிப்படையா செய்ற இந்த ஊர்ல...சொந்த பந்தங்கள சந்தோசமா வச்சிருக்க இந்த மாதிரி எல்லாம் பண்ண வேண்டிருக்கு...எல்லாம் ஒரு விளம்பரம் தான்...

அப்புறம் இந்த ஆம்பளைங்கள கண்டாலே கடுப்பா இருக்குது சார்...என்ன காரணமா இருக்கும்?

எம் அப்துல் காதர் said...

தமன்னா படம், அதுவும் டாப்ல போட்டதாலே- பொழச்சு போறும்.

MUTHU said...

தானை தலைவி,தமிழகத்தின் விடிவெள்ளி,நம்முடைய அடுத்த முதல்வர்,கற்பு புகழ் குஷ்பூ படம் போடாததால் வோட்டு போடவில்லை

பருப்பு The Great said...

MUTHU said...

தானை தலைவி,தமிழகத்தின் விடிவெள்ளி,நம்முடைய அடுத்த முதல்வர்,கற்பு புகழ் குஷ்பூ படம் போடாததால் வோட்டு போடவில்லை
//////////////////////////

யோவ் என்னய்யா உங்களோடா ஒரே ரோதனையாப் போச்சு...பிகரு போட்டோவா போட்ட பின்ன பதிவு எப்டிய்ய போடுறது...எல்லாருக்கும் சான்ஸ் உண்டு கவலைப்படாம கண்ணத் துடச்சிட்டு சிரிச்சிட்டு இருங்க..ஆங் இப்போ எம்புட்டு அழகா இருக்கு....

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...