இது உங்களால்தான் சாத்தியமாயிற்று.....
நேத்துப் போட்ட பதிவு tamilish front page ல வந்ததுன்னு சொல்லி எனக்கு மெயில் அனுப்பிருந்த்தாங்க...மொத்தம் 17 வோட்டு...
இதுதான் என் முதல் பதிவு front page ல வந்தது, அதவும் 17 வோட்டோட...
இதுக்கும் யார் காரணம்? என் எழுத்தா? (சத்திய்யமா இல்லேங்க..)
வேற யாரு??????????????
இவங்கதான்..
என்னே ஒரு தன்னடக்கம்...எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி எங்கேயோ பாத்து நிக்கிறாங்களே இவங்க தான் இதுக்கு காரணம்...


ஹி! ஹி!! ஹி!!! வாழ்க உங்கள் மக்கள் தொண்டு!
கூடவே 17 வோட்டு போட்டு இத front page ல கொண்டு வந்த நீங்களும் ஒரு சின்ன காரணம்...உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கோங்க!!!
----------------------------------------------------------------

நண்பர் ஒருத்தர் கேட்டார் குஷ்பூ DMK ல சேர்ந்ததால நமக்கு என்ன லாபம்ன்னு....
சரியான கேனா.கூனா ங்க அவன்...ஒன்னா? ரெண்டா?
௧. இனி தமிழ் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்யும்
௨. கரண்ட் கட் இனி கிடையாது, அனைவருக்கும் இலவச மின்சாரம்... நீங்க தைரியமா அயன் பாக்ஸ் ஆன் பண்ணி வச்சிட்டு போலாம்
௩. விலைவாசி குறையும், ஜலீலக்கா சமையல் டெய்லி செஞ்சு பாக்கலாம்
௪. பெட்ரோல், டீஸல் உங்க வீட்டுக்கே ப்ரீயா வந்து ஊத்துவாங்க
௫. பணவீக்கம் குறையும்
௬. தமிழகம் சொர்க்க புரியாக மாறும்.
௭. வெளி நாட்டில வேல பாக்குற என்ன மாதிரி நொந்னைங்க, எங்க ஷேக்கையும் கூட்டிட்டு தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்திருவோம்...
என்ன ஒன்னு இந்த பண்பாடு ங்கற வார்த்தைய அகராதில இருந்து அழிக்கனும்...அவ்ளோவே தான்...
திமுகவின் வளர்ச்சிக்கு குஷ்புவின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும்?
குஷ்பு பெண்களின் முன்னேற்றத்துக்கும், முற்போக்கான கருத்துக்களுக்காகவும் வாதாட கூடிய உணர்வு, ஆற்றல் படைத்தவர். திமுகவில் உள்ள மகளிர் அணி மற்றும் பல்வேறு அணியினர், எத்தகைய பணியை ஆற்றுகிறார்களோ, குஷ்புவும் அத்தகைய பணிகளை ஆற்றுவார்.
இது நான் சொல்லலைங்க, தமிழக முதல்வர்..தமிழின தலைவர், தமிழ் பண்பாட்டு காவலர் கலைஞர் தனது கர கர குரலில் சொன்னது...
ஆளும் கட்சியால் குஷ்பு நிர்பந்திக்கப்பட்டாரா?
அப்படிப்பட்ட கேவலமான முறையை நாங்கள் கையாள்வதில்லை. அவரும் அந்த முறையை பின்பற்ற கூடியவர் அல்ல. இவ்வாறு கருணாநிதி
கூறினார்.
NO COMMENTS...
------------------------------------------------------------------------------
இப்போ கொஞ்சம் சீரியசா பேசுவோம்...
பிளஸ் 2 ரிசல்ட் வந்திடுச்சு, உங்க வீட்ல இந்த வயசு பசங்க இருந்தா, உடனே கழுத கெட்ட குட்டிச் சுவர் ங்கற மாதிரி நேர இன்ஜினியரிங், டாக்டர் ன்னு போய்டாதீங்க...எல்லாரும் டாக்டர் ஆயிட்ட யாருக்கு ஊசி போடுவீங்க...
இல்ல சாப்ட்வேர், போதுங்க சாப்ட்வேர் ஏற்க்கனவே நாறிப் போய் கிடக்கு....
Nano Technology ன்னு ஒரு field இருக்கு...இனி வரும் காலங்களில் அதற்க்கு நல்ல எதிர்காலம் இருப்பதை நான் நம்புறேன் ...நெறைய பேர் இப்போ அதப் பத்தி research பண்றாங்க, அது நல்ல field ன்னு refer பண்றாங்க...அதையும் கொஞ்சம் பாருங்க...இது மாதிரி இப்போ develop ஆகுற field ல உங்க பசங்க படிச்சா அவன் சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வருவான்...
சிட்டி ல படிக்கிற பசங்களுக்கு நெறைய உலக விஷயம் ஸ்கூல் படிக்கும் போதே தெரியுது...ஆனா எங்கள மாதிரி டவுன் பசங்களுக்கு அப்பா friend சொல்லி, தெருப்பையன் சொல்லி, ஸ்கூல் வாத்தியார் சொல்லி தான் கொஞ்ச கொஞ்சமா தெரியுது...அவங்களும் மிஞ்சிப் போன சாப்ட்வேர், இன்ஜினியரிங் தவிர வேற ஏதும் புதுசா சொல்ல மாட்டாங்க...
கொஞ்சம் நெட் ல தேடித் பாருங்க..bio technolgy, Nano Technology, petrochemical ன்னு நெறைய புது விஷயங்கள், இனி வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும்...தொலை நோக்கு பார்வையோட சேர்த்து விடுங்க....நீங்க அப்டியே mechanical அல்லது civil சேத்து விட்டாலும் ஒன்னு ரெண்டு பேரு தான் அதே field ல போவான்..மத்தவன் எல்லாம் BPO, software testing, sales ன்னு சம்பந்தமே இல்ல போவான்...
எது படிச்சாலும் Spoken English இப்பவே படிக்க சொல்லுங்க..நாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு வேண்டாம்...அதோடு கொஞ்சம் extra curricular activities like sports, any type of outdoor indoor sports இது அவர்களின் உடல் நலத்துக்கு மிகவும் உதவும்...
இந்த காலத்துல 25 வயசுல தொப்ப விழுந்திருது...காரணம் ஸ்கூல் ல விளையாடினதூட சரி அடுத்து உடம்ப வளச்சு வேல பாக்குறதே கிடையாது..படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் உக்காந்த இடத்தில வேல...எழுந்து நடமாட கூட நேரம் கிடையாது...
இது எங்கள் சொந்த அனுபவம்..எனக்கு ஒன்னும் அப்டி வயசாயிடல 26 வயசு தான் ஆகுது..ஆனா நாங்கள் சந்திச்ச பிரச்சனை அவர்களுக்கு வேண்டாம்...
Spoken English, Sports, Exercise Must.....
உங்கள் பிள்ளை வாழ்க்கை உங்கள் கையில்...மறந்திராதீங்க!
இது உங்களால் தான் சாத்தியமாகும்!!!!

16 comments:
பருப்பு The Great! வாழ்க! தமிழீஷிலே முதல் இடுகை பாப்புலரானதுக்கு வாழ்த்துக்கள்! இது மேலும் தொடர வாழ்த்துக்கள்!
எனது பணிவான யோசனை ஒன்று; நடிகைகள் படம் போடும்போது, கொஞ்சம் கவனம் செலுத்துங்க! :-))
இந்த கமெண்ட் புடிக்கலேன்னா டெலீட் பண்ணிடுங்கோ! நோ பிராப்ளம்! தோணிச்சு, சொல்லிட்டேன். ப்ளீஸ் டோண்ட் மைண்ட்!
எனது பணிவான யோசனை ஒன்று; நடிகைகள் படம் போடும்போது, கொஞ்சம் கவனம் செலுத்துங்க! :-))
//////////////////////
சேட்டை இத நான் நெனச்சு பாக்கல...இப்போ மாத்திட்டேன்....அதுவும் சரி பெண்களும் பாப்பங்கள்ள....
நமிதா வாழ்க!!!
சேட்டையின் கருத்துக்கு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்.
அழகு ஆபாசமா போகக்கூடாது. யாரும் முகம் சுழிப்பது மாதிரி இல்லாம இருக்கட்டும்.
பருப்பு ஒரு சந்தேகம்!!!. குஷ்பு பெட் ரூமில ராஜிவ் போட்டே இருப்பதா சொல்லி காங்கிரஸ்ல சேர்றதா இருந்தாங்க இப்ப தி மு க சேர்ந்துட்டாங்க அப்ப அங்க யார் போட்டோ மாட்டுவாங்க...
(ஒட்டு போடறோமில்ல பதில் சொல்லுப்பா )
தமிழிஷில் முதல் இடுகை பாப்புலரானதுக்கு வாழ்த்துக்கள்! இது மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
பருப்பு The Great said...
"வெளி நாட்டில வேல பாக்குற என்ன மாதிரி நொந்னைங்க, எங்க ஷேக்கையும் கூட்டிட்டு தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்திருவோம்..."
என்ன வேலை கிடைக்கும் ? ( மின்துறை அமைச்சர் )
பருப்பு ஒரு சந்தேகம்!!!. குஷ்பு பெட் ரூமில ராஜிவ் போட்டே இருப்பதா சொல்லி காங்கிரஸ்ல சேர்றதா இருந்தாங்க இப்ப தி மு க சேர்ந்துட்டாங்க அப்ப அங்க யார் போட்டோ மாட்டுவாங்க...
(ஒட்டு போடறோமில்ல பதில் சொல்லுப்பா )
/////////////////////
இதுல என்ன பிஸ்கோத்து சந்தேகம்...என் போட்டோ தான், The Great Mohan போட்டோ தான் இருக்கும்....
siva said...
என்ன வேலை கிடைக்கும் ? ( மின்துறை அமைச்சர் )
//////////////////////////
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ குஷ்பாலயம் கோவில் கும்பாபிஷேக ஆய்வாளர் பதவி கிடைக்கும்...ஏன்னா ஊருக்கு ஊர் குஷ்பாலயம் கட்டப் போறாங்க! கழக ஆட்சியில.....
ஆமாம். சமீரா ரெட்டி படத்தை மறக்காமல் போடவும்..
இந்தப் பதிவும் தமிளிஷ் முதல் பக்கத்தில் வந்து விட்டது....
ஆத்தா நான் பாசாயிட்டேன்!!!
ஒட்டு போட்டு மக்கா! மறுபடியும் உங்களுக்கு நீங்களே ஒரு பெரிய சபாஷ் போட்டுக்கோங்க...திருப்தி அடையாதவர்கள் உங்க காசுல என்ன வேணும்னாலும் வங்கி சாப்பிட்டுக்கோங்க....
நன்றி நண்பர்களே!
நமிதா, அனுஷ்கா ரசிகர்கள் வாழ்க.....வாழ்க.....பருப்பை கடைந்த...ச்சே...பாசாக்கிய ரசிகர்கள் வாழ்க்...வாழ்க...( டிப்ஸ் தனியா வந்துரனூம் தெரியுதா!!)
போட்டோ போடும் போது கொஞ்சம் பார்த்து போடுஙக்ள்.
பதிவு போட்டதும், பார்த்தேன், மெசேஜ் என்ன வென்று எனக்கு தெரியாது,
அப்படியே குளோஸ் பண்ணிட்டேன்.
இப்ப நீங்க போட்டவ கொஞ்சம் மாற்றிய பிற்கு தான் உள்ளே வந்தேன்.
ம்ம்ம் எல்லாமே நாட்டுக்கு தேவையான ரொம்பபபப் முக்க்கியமான பதிவு தான் போட்டு இருக்கீங்க.
சந்துல , அதாம்பா சைக்கிள் கேப்புல என்னை வைச்சு சிந்து பாடி இருக்கிங்க.
/எது படிச்சாலும் Spoken English இப்பவே படிக்க சொல்லுங்க..நாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு வேண்டாம்// இது சொன்னீஙகளே இது கண்டிப்பா எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
நண்பர் ஒருத்தர் கேட்டார் குஷ்பூ DMK ல சேர்ந்ததால நமக்கு என்ன லாபம்ன்னு....
//
என்னா சார்.. மொத்தமே 7 லாபம்தானா..
கண்டிப்பா இருக்காது சார்....(நல்ல வேளை.. இதுவரைக்கும், யாரும் குஷ்புவுக்காக, நாக்க அறுக்கல..ஹி..ஹி)
இத்தனை நல்லது இருக்கா குஷ்பு சேந்ததில்!!!!!!!
பட்டாபட்டி.. said...
என்னா சார்.. மொத்தமே 7 லாபம்தானா..
கண்டிப்பா இருக்காது சார்....
///////////////////////
இன்னும் நெறைய இருக்கு பட்டா..."பண்பாடு" கருதி சிலவற்றை மட்டும் இங்க போட்டுருக்கேன்...
போட்டோ போடும் போது கொஞ்சம் பார்த்து போடுஙக்ள்.
இப்ப நீங்க போட்டவ கொஞ்சம் மாற்றிய பிற்கு தான் உள்ளே வந்தேன்.
////////////////
மல்லிச்சு! ஒ கர்!
இது என் தப்பு இல்லைங்க...இந்த ரெண்டு பேர் போட்டோ எல்லாமே அப்டித் தான் இருக்கு...நான் கேப்டன் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறேன்....
குஷ்பு DMKல சேர்ந்ததுக்கே இவ்ளோன்னா, அக்கா முதலமைச்சரானா?????
தமிழ்நாடு வல்லரசாகும். உடனே ஆக்குங்கப்பா...
வருங்கால பிரதம மந்திரி குஷ்பு வாழ்க சாரி... நீடூடி வாழ்க....
இவன்
குஷ்புஅம்மன் குருக்கள்.
என்னா பருப்பு , அசால்ட்டா நம்மிக்கு ஒரு நன்றிமட்டும் சொல்லிட்டு விட்டுடிங்க , காவடி இல்ல தீச்சட்டி எடுத்து பெரிசா நன்றி சொல்லுங்க
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...