Pages

திருந்துங்கடா டேய்!! நொந்த மனதுடன்....

மனசு வெறுத்து போய் இத எழுதுறேன்.....

நேத்து என்னோட சினிமா பதிவு தமிளிஷ் பிரண்ட் பேஜ் ல upload பண்ணின அரை மணி நேரத்தில் வந்ததுன்னு சந்தோசப் பட்டு அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்...அப்போ தான் ஒரு பதிவர் தன்னுடைய பதிவ upload பண்ணிருக்கார்...

அவர் upload பண்ணிய ஆறாவது நிமிடம் 18 வோட்டு..இது எப்படி சாத்தியம்??? என் கண் முன்னாடி நடந்தது..ரொம்ப ஆச்சர்யப்பட்டு அந்தப் பதிவப் போய் படிச்சேன்...minimum 10 நிமிஷம் வேணும்ங்க அத முழுசா படிக்க...ஆனா ஆறே நிமிசத்தில 18 வோட்டு!!!!!

சரி யார் யாரு வோட்டு போட்டுருக்கான்னு போய் பாத்தா.....ஸ்பெக்ட்ரம் ஏலத்துல எடுத்த கம்பனி பேர் தெரியுமா உங்களுக்கு?...எல்லாம் லெட்டர் பேட் கம்பெனி...அத்தனை ஆயிரம் கோடி ஏலத்தில எடுத்த கம்பனிகள் பேரு SWAN, UNITECH,....இந்த மாதிரி ஒரு கம்பனி இருக்கான்னே தெரியாது...

அதே போல அந்த பதிவுக்கு ஒட்டு போட்டவங்க பேரைப் பார்த்தாலே தெரியுது...ஒரு குரூப் அல்லது அந்த பதிவரே பல fake name ல வோட்டு போட்டுருக்கார்...

என்ன அநியாயம் இது? என்னோட சினிமா பதிவுல நான் போட்ட கமெண்ட் கொஞ்சம் பாருங்க எவ்ளோ சந்தோசமா, எழுதிருக்கேன்...உண்மையான மகிழ்ச்சியிலேழுதியவை...

இந்த மாதிரி பாலிடிக்ஸ் பண்ணி, கேவலம் கள்ள வோட்டு போட்டு தான் நீ பிரபலம் ஆகணுமா?? இந்த வெக்கங்கெட்ட பொழப்பு பொழைக்குறதுக்கு நீ பதிவு எழுதாமலே இருக்கலாமே...இந்த மாதிரி சில பேர் பண்ணும் போது, உண்மையிலே எந்த எதிர்பார்ப்புமின்றி, யார்ன்னே தெரியாதவன் பதிவு, நல்லா இருக்குன்ன்ர ஒரு காரணத்துக்காக வோட்டு போடுற மத்தவங்க ஓட்டுக்கு என்ன மரியாதை????

என்னங்க எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ்...

இது மாதிரி நாம பண்ண எவ்ளோ நேரம் ஆகும்?.... "" அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு, அதுல ""ன்னு மட்டும் எழுதி தமிளிஷ் ல upload பண்ணி ஒரு முப்பது ஐடி create பண்ணி முப்பது வோட்டு போட்டா,

அதுவும் பிரண்ட் பேஜ் ல வரும் ல ?????????

அது பதிவா? திருந்துங்கடா டேய்!!

____________________________________________


என்னடா இவன் இந்த சப்ப மேட்டருக்கு போய் இவ்ளோ பீல் பண்ணி ஒரு பதிவு போடுறான்...இதெல்லாம் ஜுஜுப்பி பாஸ் அப்படின்னு நெனைக்காதீங்க....


சின்ன சின்ன அலட்ச்சியங்கள் மாபெரும் தவறுக்கு வழிவகுக்கும்....


எல்லாத்தையும் சகிச்சிட்டு போறது, தப்பு நடந்தா அத தட்டிக் கேக்காம இருக்கிறது, நமக்கென்னன்னு வாழுறது...இது எல்லாமே தவறுக்கு துணை போகும் செயல்....

அப்புறம் அப்டி ஆகிப்போச்சு, இப்டி ஆகிப்போச்சு..இவனுங்கள திருத்தவே முடியாதுன்னு பொலம்புறது...

உங்களால் தப்ப தட்டி கேக்க முடியலன்னா...கேட்க பயம்மா இருக்குன்னா...நீங்களாவது தப்பு பண்ணாம இருங்க..உங்க வீட்டு குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டு பசங்களுக்கு, உங்க தெரு சிறுவர்களுக்கு சொல்லிக் குடுங்க...அது போதும்...

இனி வரும் தலைமுறைக்கு சாதி, பொய், ஏமாற்றுவது, ஊழல், லஞ்சம் இதெல்லாம் தப்புன்னு சொல்லிக் குடுங்க..அவங்க மனசுல ஆழமா பதியுற மாதிரி சொல்லிக்குடுங்க...

உதாரணம், பிறந்த குழந்தைகிட்ட சாதி அப்டினா மிகப்பெரிய கெட்ட வார்த்தை, உங்க அம்மா, அப்பாவ இழிப்பது போல் ன்னு சொல்லிகுடுங்க...இது அவன் மனசுல ஆழமா பதின்ச்சிட்டா போதும்...

அடுத்து எவனாவது அவன் கிட்ட உன் சாதி என்னன்னு கேட்டான்னு வைங்க...செருப்பக் கழட்டி, ஓட விட்டு அடி வெளுத்து விட்டுடுவான்...அவனப் பொறுத்த வரைக்கும் சாதி மாபெரும் கெட்ட வார்த்தை...

இது தாங்க இப்போ வேணும்..இனி வரும் தலைமுறை தங்களுக்குள்ள சண்டை வந்தாலோ அல்லது உட்சபட்ச கோபத்திலோ திட்டுவதற்கு உபயோகப்படும் வார்த்தையாக இந்த சாதி, லஞ்சம், ஊழல், ஏமாற்றுதல் இருக்கட்டும்....

ரொம்ப சந்தோசமா இருந்தேங்க...கேட்காமலே இத்தன பேரு வோட்டு போடுறாங்களேன்னு...ஆனா அந்த சந்தோசத்தையே கெடுத்து விட்டுட்டான்....


இப்போ மறுபடியும் போய் அவன் பதிவ பார்த்தேன்...மொத்தம் 27 வோட்டு...upload பண்ணின ஆறு நிமிசத்தில 18 வோட்டு..upload பண்ணி கிட்டத் தட்ட 14 மணி நேரம் ஆச்சு இப்போ 27 தான்...இதுல இருந்தே தெரியலையா? அவன் குறுக்குப் புத்தியப் பத்தி...

ச்சே!!!



நொந்து போன மனதின் ஓரத்தில் சிறு நம்பிக்கையுடன்,


27 comments:

Jeyamaran said...

பாஸ் அவுங்கள கண்டுபிடிக்கிறோம் தூகுரோம....................உங்களுக்கு என்னோட வோட்டு இது நேர்மைக்கு கிடைச்ச வோட்டு பாஸ் இப்படிக்கு ஜெயமாறன்

settaikkaran said...

ஹலோ! அந்தப் பதிவரை எத்தனை பேரு ஃபாலோ பண்ணுறாங்கன்னு பாருங்க! இவரு இடுகை போட்டதும் அவங்க டேஷ்-போர்டுக்குப் போயிடும். இப்போ உங்க இடுகை என் டேஷ்-போர்டுக்கு வந்தா மாதிரி! இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படிங்கிறேன்? டேக் இட் ஈஸி! :-)

அப்புறம் நீங்களே fake அது இதுன்னு ஒரு முடிவுக்கு வராதீங்க! தமிழீஷ், தமிழ்மணம் ஓட்டை மட்டுமே உங்க இடுகையோட yardstick-னு நினைக்காதீங்க!

Prathap Kumar S. said...

ப்ரீயா வுடு தல... இதெல்லாம் கண்டுகிட்டா... நாம பொழைக்கிறது எப்படி? ஆமா அது எந்த பதிவர்னு கொஞ்சம் இந்த ஐடிக்க அனுப்பிவிடு தல...
pratapk2005@gmail.com

பருப்பு (a) Phantom Mohan said...

சேட்டைக்காரன் said...
///////////////////

அவர ஏகப்பட்டப் பேரு follow பண்றாங்க சேட்டை..இருந்தாலும் ஆறே நிமிசத்தில 18 வோட்டுன்னா...படிக்காமலே எல்லாரும் கண்ணமூடிட்டு வோட்டு போட்டுட்டு தன் பாசத்தக்காட்டிருக்கணும்...அதுவும் தப்பு தான சேட்டை...புடிச்சிருந்தாதான் ஒட்டு போடணும்..உன்னோட விசுவாசத்தக்காட்ட வோட்டு போடக் கூடாது ...சரியா?

settaikkaran said...

//அவர ஏகப்பட்டப் பேரு follow பண்றாங்க சேட்டை..இருந்தாலும் ஆறே நிமிசத்தில 18 வோட்டுன்னா...படிக்காமலே எல்லாரும் கண்ணமூடிட்டு வோட்டு போட்டுட்டு தன் பாசத்தக்காட்டிருக்கணும்...அதுவும் தப்பு தான சேட்டை...புடிச்சிருந்தாதான் ஒட்டு போடணும்..உன்னோட விசுவாசத்தக்காட்ட வோட்டு போடக் கூடாது ...சரியா?//

கண்ணு, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்கப்படாது! உங்க வலைப்பதிவுக்கு வாங்கன்னு அழைப்பு அனுப்பினபோதே (ஏறக்குறைய ஒரு மாசம் முன்னாலே) உங்க ஹிட்-கவுன்டரிலே 1,00,000+ தெரிஞ்சதே! :-)) நீங்களே உங்க பதிவுலே பொய்யான விபரத்தைக் கொடுத்துப்புட்டு, மத்தவங்களைக் குத்தம் சொல்லக் கூடாது!

ஓட்டுப்போடுறதெல்லாம் அவங்கவங்க விருப்பம்! இது mutual admiration society! இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டா நாம தான் பேஜாராயிடுவோம். இது நான் சொல்லலே; அனுபவப்பட்ட பதிவருங்க சொல்லுறாங்க!

அப்பாலே உங்க இஷ்டம்! :-)

பருப்பு (a) Phantom Mohan said...

கண்ணு, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்கப்படாது! உங்க வலைப்பதிவுக்கு வாங்கன்னு அழைப்பு அனுப்பினபோதே (ஏறக்குறைய ஒரு மாசம் முன்னாலே) உங்க ஹிட்-கவுன்டரிலே 1,00,000+ தெரிஞ்சதே! :-)) நீங்களே உங்க பதிவுலே பொய்யான விபரத்தைக் கொடுத்துப்புட்டு, மத்தவங்களைக் குத்தம் சொல்லக் கூடாது!
///////////////////////////

ஆமால்ல...அடப்பாவிகளா எப்டி எல்லாம் கேள்வி கேக்குறானுங்க...இந்த மாதிரி நாட்டுல எல்லாவனும் கேட்டா, நாடு வெளங்கிரும்...

அது சும்மா சீனுக்கு போட்டது தல...இப்பவும் அப்டியே தான் இருக்கு, actually 10 Lakhs ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்ன்னு நெனச்சேன்...எதோ ஞாபகத்தில ஒரு லட்சம் போட்டுட்டேன்...விடுங்க வெளில யாரு கிட்டயும் சொல்லிராதீங்க..

இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்...


அப்புறம் குத்தம் சொல்றது நம்ம குல வழக்கம்...ரத்ததில ஊறிப் போன ஒரு விஷயம், அத மாத்துறது ரொம்ப கஷ்டம்...

பருப்பு (a) Phantom Mohan said...

பாருங்க ஜனங்களே தப்ப சரியா பண்ணத் தெரியாத பச்ச மண்ணு நான்...

evening வரைக்கும் தான் இந்த பதிவு அதுக்கப்புறம் மொக்கையா ஒன்னு போடப் போறேன்...

settaikkaran said...

கண்ணு, நானு உங்களுக்கு நாலு மாச சீனியராச்சே! :-))

பதிவைப்போட்டோமா, பின்னூட்டம் போட்டவங்களுக்கு மறக்காம ’தேங்க்ஸ்’ சொல்லிட்டு, அடுத்த பதிவுக்கு ஐடியா பண்ணுனோமான்னு இருந்தா நிம்மதி! நானே ஒண்ணு ரெண்டு இடத்துலே பட்டு, அப்புறம் நம்ம சீனியருங்க என் மண்டையிலே தட்டிச் சொன்னதுக்கப்புறம் தான் சுதாரிச்சுக்கிட்டேன்.

நடத்துங்க ராசா கச்சேரியை! நம் கடன் இடுகை போட்டிருப்பதே! வாழ்க வளர்க!! :-)))

பருப்பு (a) Phantom Mohan said...

நடத்துங்க ராசா கச்சேரியை! நம் கடன் இடுகை போட்டிருப்பதே! வாழ்க வளர்க!! :-)))
/////////////////////////

பாஸ் இதுல இருந்து என்ன தெரியுது....நானும் நீங்களும் வேல வெட்டி இல்லாம சும்மா உக்கந்துருக்கோம்...ஹி ஹி!!

உடுங்க சொந்த செலவுல சூனியம் வைக்கனும்னு ஜோசியர் சொன்னாரு..அதான் இப்பிடி...

நாம அடுத்தடுத்து பதிவப் போட்டு மக்களை டார்ச்சர் பண்ணுவோம்...

MUTHU said...

1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,என்ன பார்க்குறிங்க வோட்டு போடுரம்பா

பருப்பு (a) Phantom Mohan said...

MUTHU said...

1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,என்ன பார்க்குறிங்க வோட்டு போடுரம்பா
//////////////////

யோவ் ரம்பா வ எதுக்குய்யா ஓட்டுப் போட கூப்பிடுற

settaikkaran said...

//பாஸ் இதுல இருந்து என்ன தெரியுது....நானும் நீங்களும் வேல வெட்டி இல்லாம சும்மா உக்கந்துருக்கோம்...ஹி ஹி!!//

பருப்பு The Great! மின்னஞ்சல்லே follow பண்ணுறதுனாலே உடனுக்குடன் பதில் போடுறேன். அவ்வளோ தான்! மத்தபடி வெளியூருலே செமத்தியான வேலையிலே தானிருக்கேன்.

பொன் மாலை பொழுது said...

எழுத மட்டுமே தோணும்போது எழுதி வெளியிடுவேன்.
மற்ற படிFollowers, Visitors and Vote பற்றி கவலை பட்டதே இல்லை.
ஆனால் பதிவியிட்டு அடுத்த நாள் தமிழிஷ் .காம் இல் இருந்து ஒரு மெயில் வரும்
என்பதிவு "அதிக ஓட்டுகள் வாங்கி பிரபல பதிவுகளில் வந்துவிட்டதாக "
அப்படி ஒன்றும் அதிக ஓட்டுக்கள் இருக்காது. பதினொன்று அல்லது பதினைந்து தான்
இருக்கும். அந்த இயல்பான உண்மையில் ஒரு நிறைவு வரும் பாருங்கள்..........

இதெல்லாம் ரொம்ப சாதாரணம் தோழரே! விட்டுத்தள்ளுங்கள்.

ஜெய்லானி said...

கக்கு சார் உங்க வார்த்தை தான் என்னுடைய கருத்தும். எதையும் எதிர்பார்த்து செஞ்சா இப்படி தான் மனசு கஷ்டபடனும்.

ஓட்டை நாம கேட்டு வாங்க கூடாது . போடுவதும் போடாததும் அது அவங்க உரிமை

பருப்பு (a) Phantom Mohan said...

பருப்பு The Great! மின்னஞ்சல்லே follow பண்ணுறதுனாலே உடனுக்குடன் பதில் போடுறேன். அவ்வளோ தான்! மத்தபடி வெளியூருலே செமத்தியான வேலையிலே தானிருக்கேன்.
/////////////////////

Dear Settai,

I'm just kidding, don't take it as seroius...

பருப்பு (a) Phantom Mohan said...

நன்றி ஜெயராமன்...கடுப்ப கேளப்புறாங்க யுவர் ஹானர்! அடிக்கடி வாங்க!

பருப்பு (a) Phantom Mohan said...

கக்கு - மாணிக்கம் said...

அந்த இயல்பான உண்மையில் ஒரு நிறைவு வரும் பாருங்கள்..........
/////////////////////////////////

நூத்துல ஒரு வார்த்தை தோழரே! என்ன பண்ண எப்டியெல்லாம் சிந்திக்கிரானுங்க..

பருப்பு (a) Phantom Mohan said...

ஜெய்லானி said...
ஓட்டை நாம கேட்டு வாங்க கூடாது . போடுவதும் போடாததும் அது அவங்க உரிமை
////////////////////////////

அதத்தான் தல இன்னை வரைக்கும் நான் பண்றேன்..இனிமேலும் பண்ணுவேன்...தல எனக்கு மொத்தம் 11 followers , famous ஆனா என் பதிவுகள் எல்லாம் minimum 18 வோட்டு...நான் யாரையும் கூப்பிடல...அவங்களுக்கு புடிச்சிருக்குன்னு போடுறாங்க...வோட்டுப் போட்டவங்கள பொய் பாருங்க அறிமுகம் இல்லாதவர்கள்...அவங்க வோட்டுக்கு அப்புறம் என்ன மரியாதை?

தல இது ஒரு நல்ல விஷயம்...நமக்காக அவங்க marketing பண்றாங்க..இந்த பதிவு நல்லா இருக்கு மத்தவங்களும் படிங்கன்னு அவங்க refer பண்றாங்க...அத வச்சு தான front page ல வருது ...

ஆதங்கம் வேற என்ன சொல்ல....

மசக்கவுண்டன் said...

பரவால்ல பருப்பு, எப்படியோ ரெண்டு மாசத்துல பேஃமஸ் ஆகிட்டீங்க, நம்மளையும் ஞாபகம் வச்சுக்குங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பருப்பு..
கிடக்கறாங்கனு விடு...

ஓட்டு வெச்சு, அதையும் வழிக்கமுடியாது..
நல்லாயிருந்தா நாலு பேர் வருவாங்க..

பருப்பு (a) Phantom Mohan said...

மசக்கவுண்டன் said...

பரவால்ல பருப்பு, எப்படியோ ரெண்டு மாசத்துல பேஃமஸ் ஆகிட்டீங்க, நம்மளையும் ஞாபகம் வச்சுக்குங்க.
////////////////////

சார் எப்டி இருக்கீங்க..ஆளையே காணும்..கடைல இப்போ தான் கொஞ்சம் kalla கட்டுது...இது தப்பு தான சார் neengale sollunga...

How can i forgot you sir! You are my well wisher

பருப்பு (a) Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

பருப்பு..
கிடக்கறாங்கனு விடு...

ஓட்டு வெச்சு, அதையும் வழிக்கமுடியாது..
நல்லாயிருந்தா நாலு பேர் வருவாங்க..

/////////////////////////////////////

அது...

விட்டாச்சு பட்டா...பெரும் ரோதனை இவனுங்கலூட...

எல் கே said...

nanba, oru silar mothalla ottu podalam appuram padikalamnu think panranga. nane appadi panni irukken. enna namma aalu kandippa namaku pidicha mathirithan eluthi iruppanu oru nambikkai

ப.கந்தசாமி said...

பருப்பு சொன்னது:

//அது சும்மா சீனுக்கு போட்டது தல...இப்பவும் அப்டியே தான் இருக்கு//

ஏன் பருப்பு, என்னோட பழய பதிவகள்ல பிரபலமாவது எப்படீன்னு எழுதியிருக்கிறதப் பாத்து பொளச்சிக்குங்கோ அப்படீன்னு சொன்னதுக்கு அய்ய ய்யோ, நான் அப்டியெல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா?

பருப்பு (a) Phantom Mohan said...

Dr.P.Kandaswamy said...

பருப்பு சொன்னது:

//அது சும்மா சீனுக்கு போட்டது தல...இப்பவும் அப்டியே தான் இருக்கு//

ஏன் பருப்பு, என்னோட பழய பதிவகள்ல பிரபலமாவது எப்படீன்னு எழுதியிருக்கிறதப் பாத்து பொளச்சிக்குங்கோ அப்படீன்னு சொன்னதுக்கு அய்ய ய்யோ, நான் அப்டியெல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா?
////////////////////////////////

சார், எடுத்தவுடனே நான் மொள்ளமாரி, முடிச்சவுக்கி ன்னு என்னைப் பத்தி நானே பெருமையா சொல்ல முடியுமா சார்?போகப் போக நீங்களாப் பாத்து அந்தப் பட்டத்த குடுத்தா நான் சந்தோசமா எடுத்துக்குவேன்....

அதுவுமட்டுமில்லாம ப்ளாக் ஆரம்பிச்ச 30 நாள்ல யாருக்காவது ஒரு லட்சம் ஹிட்ஸ் இருக்குமா? எவன் பாத்தாலும் ஈசியா கண்டிபுடிச்சிடுவான்...அந்தளவுக்கு நான் புத்திசாலியும்மில்ல...படிக்கிறவன் இதப் புரிஞ்சிக்காத அளவுக்கு கேனயனும் இல்ல...நிஜம்மா அது ஒரு விளையாட்டுக்கு தான் பண்ணினேன்...

எனக்கு தெரிஞ்ச்சு இதனால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.....ஒரே மாசத்தில ஒரு லட்சம் ஹிட்ஸ் ன்னு சொல்லி google எனக்கு பரிசும் குடுக்கப்போரதில்ல...

நான் அடிக்கடி அந்த ஹிட் கவுன்ட்டர் ஸ்டைல் மாத்துறேன்...அடுத்த மாசம் கோடில இருந்து வேணும்னாலும் ஸ்டார்ட் பண்றேன் ஹி ஹி ஹி நீங்க ஆசைப்பட்டா...

ப.கந்தசாமி said...

அதுதான் சரி, பருப்பு, கோடிங்கறது ஒரு நல்ல நம்பர். ஆனா ஹிட் கவுன்ட்டரல வருமான்னு தெரியல. நீங்க போட்டப்புறம் நானும் போட்டுடறேன். கோடிக்கு கம்மியா இருந்தா இப்பெல்லாம் யாரும் மதிக்கிறதில்லே.

ரிஷபன்Meena said...

பருப்பு,

இன்னாத்துக்கு இவ்வளவு டென்ஷன். தமிழனுக்கு எதையும் மிஸ் யூஸ் பன்றது புதுசு இல்லையே.

பத்மஸ்ரீ,கலைமாமனி பட்டத்தோட மதிப்பு தெரியுமா ?

நல்ல பதிவர்களை அடையாளம்காண உதவியிருக்கக் கூடிய வோட்டு சிஸ்டம் நம்ம கிட்ட ஒர்க் அவுட் ஆவலை.

ப்லோயர்ஸ் வத வதன்னு ஒரே நாள்ல வந்தா அதுக்கு என்ன மதிப்பு. படிச்சு, புடிச்சிருக்கவங்க ப்லோயர் ஆவது தானே நல்லது.

ரெண்டு நாள் ஊர்ல இல்லை அதுக்குள்ள இத்தனை பதிவு போடு தள்ளிட்டியே

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...